Tamil Current Affairs – 3rd & 4th January 2021

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய “வீரயுகநாயகன் வேள்பாரி“ நூல் மலேசியாவின் தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் சார்பில் அனைத்துலக சிறந்த படைப்புக்கான நூலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. |
ஐதரபாத் மருத்துவர் ரகுராமிற்கு மார்பாக புற்றுநோய் சிகிச்சையில் சிறந்த சேவை புரிந்தற்காக இங்கிலாந்து அரச பரம்பரையின் உயரிய “ஆர்டர் ஆப் தி பிரிட்டிஷ் எம்பயர்“ விருது வழங்கப்பட உள்ளது. |
சீரம் இந்தியா நிறுவனம் உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் குழந்தைகளுக்கான நிமோனியா தடுப்பூசியான “நிமோசில்” (PNEUMOSIL) என்ற தடுப்பூசியை அறிமுகப்படுத்தியுள்ளது. |
ஒடிசா சம்பல்பூர் பகுதியில் நடைபெற்ற இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கு (ஐஐஎம்) அமைக்கப்பட உள்ள கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் தற்சார்பு இலக்கினை அடைய புதுமை, ஒருமைப்பாடு, ஒருங்கிணைத்தல் ஆகியன முக்கிய வழியென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். |
உலகத் தலைவர்களிடையே பிரதமர் மோடிக்கு மக்களிடம் செல்வாக்கு 55% பெற்றதன் மூலம் உலகளவில் அதிக மக்களின் அங்கீகாரம் பெற்று சாதனை படைத்துள்ளதாக அமெரிக்கா நிறுவனமான, மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
இஸ்ரோ 2021-ல் எஸ்எஸ்எல்வி, ஆதித்யா எல்-1 உள்பட 20 செயற்கைக்கோளையும் சந்திரயான்-3, சுகன்யான் ஆகிய விண்கலன்களையும் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது. |
ஜன.4-ல் சஞ்சீப் பானர்ஜி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
- பதவியேற்பின் போது “தமிழ்நாடு இன்று முதல் என் மாநிலம்; நான் அதன் சேவகன்” என்று கூறியுள்ளார்.
|
உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் 2-வது தலைமை நீதியபதியாகய பணியாற்றிய வினீத் கோத்தாரி குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். |
முகமது ரஃபிக் மத்திய பிரதேச உயர்நீதிமனறத்தின் 26-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
- ஆளுநர் – ஆனந்திபென் படேல்
|
பங்கஜ் மித்தல் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.
அலாகாபாத் —> ஜம்மு-காஷ்மீர்
- துணைநிலை ஆளுநர் (ஜம்மு-காஷ்மீர்) – மனோஜ் சின்ஹா
- துணைநிலை ஆளுநர் (லடாக்) – R. K. மாத்தூர்
|
கரோனா நோய் தொற்று பரவல் காரணமாக இந்திய இரயில்வேயில் 2020-ல் ரூ.39 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
2020-ல் பயணிகளால் கிடைக்கும் வருமானம் 84% சரிந்துள்ளது. |
ஜன.03 டெல்லியில் தமிழ் மொழி, கலாச்சாரத்தைப் பரப்பும் விதமாக தமிழ் அகாதெமியை தில்லி அரசு அமைத்துள்ளது.
- தலைவர் – மணீஷ் சிசோடியா (தில்லி துணை முதல்வர்)
- துணைத்தலைவர் – என்.ராஜா (தில்லி மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்
|
ஜன.3-ல் வேலுநாச்சியாரின் 291-வது பிறந்ந தினம் கொண்டாடப்பட்டது. |
ஜன.5-ல் ரூ.3000 கோடி செலவில் 450கி.மீ தொலைவிலான கொச்சி – மங்களூரு இயற்கை எரிவாயு குழாய் திட்டதினை தொடங்கி வைக்கிறார். |
ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சிறந்த வீடு கட்டுமான விருது ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தின் 65 வயது முதியவரான அப்துல் லத்திப் கனய்க்கு வழங்கப்பட்டது. |
முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டாசிங் (86) காலமானார். |
திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான இளவேனில் காலமானர். |
உலக பிரெய்லி தினம் (ஜன.4) |
2nd January Current Affairs – Read Here
Related Links
Related