Tamil Current Affairs – 3rd December 2020
சென்னை மெட்ரோ இரயில் நிலையத்திற்கு பாதுகாப்பு அம்சங்களை சிறப்பான முறையில் கடைபிடித்தற்காக உலக பாதுகாப்பு அமைப்பு சார்பில் சர்வதேச விருது வழங்கப்பட்டது |
கல், மண் ஆகியவற்றை நிலாவிலிருந்து எடுத்து வருவதற்காக சீனா ஏவிய சாங்கி-5 ஆய்வுக்கலம் டிசம்.2-ல் வெற்றிகரமாக நிலவில் தரையிரங்கியது. |
“எக்ஸ்பி 100” என்ற பெயரில் மிகச்சிறந்த பிரீமியம் பெட்ரோலை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. |
புதுச்சேரி அரசின் சார்பில் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு பார்த்திபனின் “ஒத்த செருப்பு” “சங்கரதாஸ் சுவாமிகள்” விருதினை பெறுகிறது. |
லெக்டினெணட் ஜெனரல் ராஜீவ் சவுத்திரி எல்லையோர சாலைகளின் 27வது தலைமை இயக்குநராக டிசம்.1-ல் பொறுப்பேற்றார். |
பைசர் தடுப்பூசியை உலக அளவில் அனுமதித்த முதல் நாடு இங்கிலாந்து. |
ரூ.200கோடி மதிப்பிலான பங்கு பத்திரங்களை மும்பை பங்குச் சந்தையில் லக்னோ மாநகராட்சி டிசம்.2-ல் வெளியிட்டது. |
உலக சுகாதார அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட உலக மலேரியா அறிக்கை-2020ன் படி கடந்த 19 ஆண்டுகளில் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் மலேரியா நோயை பெருமளவு குறைத்த நாடாக இந்தியா உள்ளது |
மகராஷ்டிராவின் புனேவில் “குழந்தைகளுக்கான நட்பான காவல் நிலையம்” அமைக்கப்பட்டுள்ளது. |
இராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இந்தியாவின் முதல் உடலுறுப்பு தான நினைவு சின்னம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. |
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் கியூஎஸ் ஆசியா பல்கலைக்கழக தரவரிசை 2020-ல் முதலிடம் பிடித்துள்ளது. இதில் இந்தியாவின்
|
இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி ஒருநாள் போட்டியில் 12 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்து சாதனை படைத்தார். |
குருநானக் ஜெயந்தி முன்னிட்டு “சீக்கியர்கள் உடன் பிரதமர் மோடி மற்றும் அவரது அரசாங்கத்தின் சிறப்பு உறவு” என்ற நூலை அவுட்ரீச் கம்யூனிகேஷன் பணியகம் வெளியிட்டுள்ளது. |
தொண்டை மண்டல ஆதீன 232-வது மடாதிபதி ஞானப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் முக்கி அடைந்தார். |
தேசிய மாசுக் கட்டுபாட்டு தினம் (டிசம்-2) |
மாற்றுத்திறனாளிகள் தினம் (டிசம்-3) |