தமிழக அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் (எஸ்எம்சி) நடைபெற உள்ளது.
இந்திய பொருளாதார வர்த்தக அமைப்பு சார்பில் கிண்டியில் தொடங்கப்பட்டுள்ள இந்திய செமாக் வர்த்தக குழு அமைப்பின் தொடக்க விழா மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சியில் நகர்புற வாழ்வாதார இயக்கம் மூலம் மருத்துவ பணியாளர்களை தேசிய நியமிக்கபட வேண்டும் என சென்னை நகர மாமன்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு நிர்பயா நிதி ரூ.137.7கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறையில் கைத்தொழில் பயிற்சி முடித்த கைதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டள்ளது.
அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு நிலுவைத் தொகை ரூ.364.43கோடி நிதி தமிழக அரசு விடுவிப்பு.
தேர்தல் ஆணையர்களை நியமிக்க பிரதமர், மக்களவை எதிர் கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரைக் கொண்ட பரிந்துரைக் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் தலால்-ஹைமானா பகுதியில் “வெள்ளைத் தங்கமான லித்தியம் தாது” உள்ளது – இந்திய புவியியல் ஆய்வு மையம்
நாகலாந்தின் திமாப்பூர்-3 பேரவை தொகுதியில் முதன் முறையாக இரு பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
அதானி குழுமம்-ஹிண்டன்பர்க் விவகாரத்தை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.சாப்ரே(68) தலைமையில் 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
உலகிலுள்ள தலைவர்களில் மிகவும் விருப்பத்துக்குரிய தலைவர் பிரதமர் மோடி என்று இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி புகழாரம்.
உலக வங்கி தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட் அஜய் பங்காவுக்கு இந்தியா ஆதரவு.
ஜெர்மனி மக்கள் தொகையில் 23%பேர் புலம் பெயர்ந்தோர் ஆவர்.
அமெரிக்கா, ரஷியா, ஐக்கிய அரபு அமீரக நாடுகளைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்களை, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் (SpaceX) சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியது.
இந்திய தளடகளத்தின் ஜிம்ப்ஸ் போட்டியில் தமிழக வீரர் ஜெவின் ஆல்ட்ரீன் நீளம் தாண்டலில் 8.42மீ குதித்து சாதனையுடன் தங்கம் வென்றார்.
மார்ச் 15-26 வரை புதுதில்லி இந்திராகாந்தி விளையாட்டு வளாகத்தில் சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் (ஐபிஎஃப்) இந்திய குத்துச் சண்டை சம்மேளனம் (பிஎஃப்ஐ) சார்பில் உலகக் கோப்பை குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நடைபெற உள்ளது.
டி.குகேஷ் ஆசிய செஸ் கூட்டமைப்பின் 2022 சிறந்த வீரர் விருதினை பெற்றுள்ளார்.