Tamil Current Affairs – 4th & 5th November 2020
மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 1.04 கோடி வீடுகளுக்கு 2023-ஆம் ஆண்டுக்குள் குடிநீா் இணைப்பு வழங்கப்பட இருக்கிறது. (மத்திய அரசு 2024-ஐ இலக்காக நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது) |
இந்தியாவின் உதவியுடன் நேபாளத்தில் புதியதாக கட்டப்பட்ட பள்ளி திறந்து வைக்கப்பட்டது |
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஆஸ்திரேலிய வீரர் வாட்சன் ஒய்வு அறிவித்தார் |
புவி வெப்பமாதலை கட்டுப்படுத்தும் சர்வதேச நாடுகளின் பாரீஸ் பிபருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகியது அமெரிக்கா |
உலக சுனாமி விழிப்புணர்வு நாள் (நவம்பர் – 5) |
பினாகா ஏவுகணை சோதனை வெற்றி என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) அறிவிப்பு. |
ஒருநாள் கிரிக்கெட் ஐ.சி.சி தரவரிசை பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்திய வீரர் விராட்கோலி முதலிடம் |
அனைத்து வித கிரிக்கெட்டிலிருந்தும் மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணி வீரர் மார்லன் சாமுவேல்ஸ் ஓய்வு |
சூரிய சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் மினியேச்சர் (சிறிய) ரயில் கேரளாவிலுள்ள வேலி (Veli) சுற்றுலா கிராமத்தில் அறிமுகம். |
லவ் ஜிகாத் கர்நாடகத்தில் தடை செய்ய விரைவில் சட்டம் அமலாகிறது. |
பிரதமர் மோடி தலைமையில் உலக முதலீட்டாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது |
டி.பாஸ்கர பாண்டியன் தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக நியமனம் |
எழுத்தாளர் எஸ். சுவாமிநாதன் மரணம் |
ரூ.27 லட்சம் மதிப்பிலான 3 நடமாடும் அம்மா உணவகங்களை சென்னையில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். |
நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் முதன் முறையாக போட்டியிட்ட திருநங்கை (சாரா மெக் பிரைடு) வெற்றி |
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான சர்ச்சைக்குரிய கட்டுபாடுகள் ரத்து செய்யப்படும் என சவுதி அரேபியா அரசு அறிவிப்பு |
அமெரிக்க மாகாணத் தேர்தலில் இந்திய அமெரிக்கர்கள் 12 பேர் வெற்றி |
மெல்பர்ன் நகரில் நடந்த இந்திய வம்சாவளியை இளம்பெண் மரியா தாட்டில் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். |
வந்தே பாரத் திட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் 29 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர். |
பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு பணிக்காக தயாரித்த இஓஎஸ்ஐ செயற்கை கோளை நவம்.7-ல் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. |
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கொண்டு வர சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு |
கேரளாவின் “ஜம்போ கேர்” உலகில் மிகப் பெரிய யானை பராமரிப்பு முகாமாக உருவெடுத்து வருவதாக கேரள அரசு அறிவிப்பு |
இந்திய ராணுவ தலைமை தளபதி நரவணேவுக்கு நேபாள ராணுவத்தில் கெளரவ தளபதி பதவி |
லண்டனில் நடைபெற இருக்கும் பருநிலை லட்சிய உச்சிமாநாடு 2021-க்கு மோடிக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது. |
Related Links