TNPSC Current Affairs in Tamil – 4th December 2020 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 4th December 2020

ரூ.6,500 கோடி பணபரிவர்த்தனையை தமிழகத்தில் ஆவின் நிறுவனம் பெறுவதுடன் விவசாயி தினமும் 17 கோடி பணபுழக்கத்தை புழங்கி வருவதாக ஆவின் மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்
சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் இந்தியாவிலேயே 2வது சிறந்த காவல்நிலையத்திற்கான விருதினை பெற்றுள்ளது.
இந்தியாவும் அமெரிக்காவும் அறிவுசார் சொத்துப் பரிசோதனை மற்றும் பாதுகாப்பில் ஒத்துழைக்கவும் அந்த அமைப்பை வலுப்படுத்துவதற்குமான அடுத்த 10 ஆண்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
தொழில்நுடப்பத் துறையில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய இந்திய வம்சாவளியைச் சார்ந்த கீதாஞ்சலிராவ் என்ற சிறுமியை அமெரிக்காவின் டைம் இதழ் இந்த ஆண்டின் சிறந்த நபராக தேர்வு செய்துள்ளது.
ரஞ்சித்சிங் டிசாலே என்ற இந்திய ஆசிரியர் சர்வதேச ஆசிரியர் பரிசை வென்றார்.
இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியிலில் முதலிடத்தை HCl-இன் ரோஷினி, இரண்டாவது இடத்தை கிரண் மஜூம் தார் ஷா பிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவில் மஜு வர்கீஸ் என்ற இந்திய அமெரிக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரம்மோஸ் விண்வெளி மைய நிறுவனர் ஏ.சிவதாணுப்பிள்ளை எழுதிய “அப்துல்கலாமுடன் 40 ஆண்டுகாலம் – சொல்குலப்படாத தகவல்கள்” என்ற நூலை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயடு வெளியிட்டார்.
எம்ஹெச் ஸ்பைசஸ் நிறுவனர் தரம்பால் குலாடி(97) காலமானர்.
ஜாதிகளை அடிப்படையாக கொண்டுள்ள குடியிருப்பின் பகுதிகளின் பெயர்களை நீக்க மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
விளையாட்டு பயிற்சியாளரான குல்தீப் ஹேண்டு ஃபிட் இந்தியா இயக்கத்தின் தூதராக நியமிக்கப்படுகிறார்.
உலகின்  8வது மிகப்பெரிய பால் செயலாக்கியாகி குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் பிராண்டான அமுல் உருவாகியுள்ளது.
2019-ல் பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியிலில் ஆப்கானிஸ்தான் முதல் இடத்திலும், இந்தியா 8வது இடத்திலிலும் உள்ளது.
ஒடிசாவில் 9வது சர்வேத மணல் கலை விழா மற்றும் கோனார்க் நடன விழா டிசம்.1 முதல் 5வரை நடைபெறுகிறது.
குழந்தைகளுக்கான முதல் புத்தகமான வஹானா மாஸ்டர் கிளாஸ் நூலினை இத்தாலிய எழுத்தாளர் ஆல்ஃபிரேடாகோவெல்லி  இந்தியாவில் வெளியிட்டார்.
தேசிய வழக்கறிஞர் தினம் (டிசம்-3)
இந்திய கடற்படை தினம் (டிசம்-4)

Related Links

Leave a Comment