விசைத்தறி நெசவாளர்களுக்குஇலவச மின்சாரம் 1,000 யூனிட்டாக அதிகரிப்பு
புகையிலைப் பொருள்களுக்கு தமிழகத்தில் இப்போது தடையில்லை.
அனைத்து வகை புதிய தொழில் நுட்பங்களும் தாய்மொழியில் இருக்க வேண்டுமென அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் வற்புறுத்தினார் .
சென்னை நாயகி கலாசார கோட்டுபுரம் கலாச்சார சங்கத்தின் 26வது ஆண்டு இசை, நடனம், நாடகத்திருவிழா நடைபெறுகிறது. மிருதங்க வித்வான் தில்லையாடி மாரியப்பாவுக்கு சிறந்த கலைஞருக்கான “நாயகி விருது” வழங்கப்பட்டது.
நிர்பயா திட்டத்தின் கீழ் பெருங்குடியில் ரூ.71 லட்சத்தில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த மாநிலங்களில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் மேதாபட்கர் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை 65%பேர் இணைத்துள்ளனர் என தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்
வெப்ப அலைகளையும், புதிய நோய்களையும் எதிர்கொள்ள தயராக வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அலகாபாத், மும்பை, தில்லி, சென்னை உள்ளிட்ட 4 உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கபட்டுள்ளனர்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தகர்க்கும் பொருட்டு இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து “க்வாட்” அமைப்பு-னை உருவாக்கியுள்ளது.
இந்தியாவிற்கு உலக வங்கி ரூ.8,200 கோடி கடன் அளித்துள்ளது.
தஞ்சாவூர் ஒவியங்கள், மைசூர் சில்க் பட்டுப்புடவை, காங்ரா தேயிலை உள்ளபட 429 பொருள்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு (GI) அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது
ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் ஹால்மார்க் அடையாள எண் பதிக்காத தங்க நடைகள், கலைப் பொருகள்களை விற்பனை செய்ய தடை
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டீகின் பல்கலைக்கழகம் குஜராத்தின் உள்ள கிஃப்ட் நகரத்தில் தனது முதல் கிளை வளாகத்தை அமைக்கிறது.
அமெரிக்கா, ரஷியா, ஐக்கிய அரபு அமீரக நாடுகளைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் (SpaceX) சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது