TNPSC Current Affairs in Tamil: 04-10-2020
தேசிய நிகழ்வுகள்
- “இந்திய – பங்களாதேஷ்” கடற்படை (பி.என்) இருதரப்பு உடற்பயிற்சி போங்கோசாகர் 2020 அக்டோபர் 3 அன்று வங்காள விரிகுடாவில் தொடங்கியது
- கொரோனா காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட கடன் மாத தவணைக்கு ரூ.2 கோடி வரை வட்டியில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- அந்நியச்செலவாணி கையிருப்பு கடந்து செப்டம்பர் 25-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 301.7 கோடி டாலர் சரிந்து 54.202.1 கோடி டாலராக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
- சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 8,000 பவுண்டுகள் எடை உள்ள பொருட்களுடன் நாசாவின் கல்பனா சால்வா விண்கலம், அன்டரேஸ் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
- இந்திய விமானப்படையின் சரக்கு விமானமான சி-130 ஜெ சூப்பர் ஹெர்குலஸ் விமானத்திற்கும், கடற்படைக்கும் ரூ.675 கோடி மதிப்பில் கூடுதல் உதிரிப் பொருட்கள், உபகரணங்கள் விற்க அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஒப்புதல் அளித்துள்ளது.
- இமாச்சல பிரதேசம் ரோதாங் கணவாய்க்கு கீழே 10 ஆயிரம் அடி உயரத்தில் 9.02 கி.மீ. தூரத்திற்கு ரூ.3,300 கோடியில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான மற்றும் நீளமான அடல் சுடங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு அர்பணிக்கிறார் .
- சாலையை பழுதுபார்க்க மேற்கு வங்க அரசு “பதஸ்ரீ அபிஜன்” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
- ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் கடற்கரையில் உள்ள அப்துல்கலாம் தீவில் 1000 கி.மீ தூரம் பாய்ந்து தாக்கும் திறன் படைத்த “சவ்ரியா ஏவுகணையை” இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
- செயிண்ட் கோபைன் நிறுவனத்துக்கு ஜிப்சம் ஏற்றிச் செல்கூம் புதிய சரக்கு ரயில் போக்குவரத்தை ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது.
- கரோனா பரிசோதைன முடிவை இரண்டு மணி நேரத்தில் தெரிவிக்கக்கூடிய வகையிலான (ஆர்.டி.பிசி.ஆர் கருவி) விரைவு பரிசோதனை கருவிக்கு “ஆர்-கீரின் கிட்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
- செயற்கை நுண்ணறிவு குறித்த மாபெரும் மெய்நிகர் மாநாட்டை (ரெய்ஸ்-2020 மாநாடு) மி்ன்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவை இணைந்து 2020 அக்டோபர் 5 முதல் 9 வரை நடத்துகின்றன.
- ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உரங்கள் துறை, தகவல் ஆளுகை தரக் குறியீட்டு பட்டியலில் 16 பொருளாதார அமைச்சங்கள்/துறைகளில் இரண்டாவது இடமும், 65 அமைச்சகங்கள், துறைகளில் மூன்றாவது இடமும் பிடித்துள்ளது
- “மேக் இன் இந்தியா” திட்டத்துக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் ரூ.409 கோடி மதிப்புள்ள ஒப்பந்த்தில் நாக்பூரை சார்ந்த திருவாளர்கள் எக்கனாமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடெட்டுடன் (சோலார் குழுமம்) பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
இன்றைய முக்கிய தினங்கள்
- “உலக விலங்குகள் தினம்”
- உலக விண்வெளி வாரம் (Oct 4 முதல் Oct 10 வரை) – கருப்பொருள் – “Satellites Improve Life”
More Current Affairs – More Info
சமீபத்திய வேலைகள்