Tamil Current Affairs – 5th December 2020
ரூ.1,295 கோடி மதிப்பீட்டிலான மதுரை மாநகராட்சி மக்களின் குடிநீர் சேவைக்கான முல்லை பெரியார் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். |
துணை குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு முன்னாள் பிரதமர் I.K.குஜ்ரால் நினைவு தபால் தலையை வெளியிட்டார். |
டிசம்.6 முதல் 10 வரை “பாரதி உலா – 2020” நிகழ்ச்சி இணைய வழியில் நடைபெறுகிறது. |
இசைக்கவி ரமணனுக்கு ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் நடைபெற உள்ள பாரதி திருவிழவில் “பாரதி விருது” வழங்கப்பட உள்ளது. |
நீர், சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த மெய்நிகர் மாநாட்டின் 7வது பதிப்பு டிசம்.2 முதல் 4 வரை நடைபெற்றது
மையக்கருத்து:- சுகாதாரம் கவனிக்கப்படதக்கதது (Hygine matters) |
பிரபல விஞ்ஞானி விருது – 2020 திருத்தணியை அடுத்த பொதட்டூர்பேட்டை விஞ்ஞானி சிவகுமாருக்கு தில்லியில் வழங்கப்பட்டது. |
கரோனா மேலாண்மைக்கான விருதினை பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவர் ஜி.சுபாஷ் சந்திரன் தேர்வு செய்யப்பட்டார். |
உழவர்களுக்கும், வேளாண்மை அலுவலர்களுக்கு உள்ள தொடர்பை வலுப்படுத்தவும், உழவர்களுக்கு மானிய திட்டங்கள் சென்றடைய தூத்துக்குடி மாவட்டத்தில் உழவர்-அலுவலர் தொடர்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. |
இந்திய ரிசர்வ் வங்கி நிகழ்நேரப் பெருந்திரள் தீர்வுகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிமாற்ற வசதியை (RTGS) வாரத்தின் அனைத்து நாட்களிலும் அல்லது 24 மணி நேரமும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கச் செய்யுமாறு அமைத்துள்ளது. |
ஹயபூசா-2 விண்கலமானது ரைகு என்ற குறுங்கோளிலிருந்து எடுக்கப்பட்ட அரிதான மாதிரிகளுடன் தெற்கு ஆஸ்திரேலியாவில் தரையிறங்க உள்ளது. |
லட்சத்தீவு நிர்வாகி தினேஷ்வர் சர்மா (66) காலமானார். |
உலக தன்னார்வ தினம் (டிசம்-5) |