ஜன.4-ல் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரியில் தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.ஹெச்.பாண்டியனின் திருவுருவ சிலை மற்றும் மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகள் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அசாம் அரசு பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு நாள்தோறும்ரூ.100 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
மணிப்பூர் மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு உதவும் வகையில்mPension என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் அனைவருக்கும் வீடு வழங்க அம்மாநில அரசு பெடலகின்டரி இல்லு (Pedalandariki Illu Scheme) என்ற வீட்டுமனை விநியோக திட்டத்தினை துவக்கியுள்ளது.
மத்திய அரசிற்கு சிறப்பு சலுகை விலையில்முதலில் வழங்கிய 10 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.200 என்று வழங்கப்பட்டுள்ளதாக சீரம் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்
ஜன.4-ல் குஜராத்தின் சூரத்தில் இந்தியாவின் முதலாவது புலம் பெயரந்த தொழிலாளிகளுக்கான மையத்தை (Migrant Worker Cell) மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் திறந்து வைத்தார்.
ஜன.4-ல் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டை மாநிலங்கள் எதிர் கொள்ளபத்தாவது தவணையாக ரூ.6,000 கோடியைமாநில அரசுகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் வழங்கியுள்ளது.
குளோபல் பிரவாசி ரிஷ்தா வலைத்தளம் மற்றும் செயலியை(Global Pravasi Rishta Proatal)உலகிலுள்ள வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளயிட்டுள்ளது.
ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினான நான்சி பெலோசிஅமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை (கீழவை) தலைவராக 4-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி உலகிலேயே முதல் முதலில் பிரிட்டனில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இத்தடுப்பூசி
பிரையன் பிங்கர் (82) வயது மூதாட்டிக்கு முதன் முறையாகவும், பின்னர் ட்ரெவர்கெளலட் (88) வயது ஆசியருக்கும், பொல்லாட் என்ற மருத்துவருக்கும் வழங்கப்பட்டுள்ளது..
இந்திய வம்சாளி வழக்குரைஞர் விஜய் சங்கரைஅமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற இணை நீதிபதி பதவிக்கு டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார.
சித்த மருத்துவத்தின் தந்தையான அகத்தியரின் பிறந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரம் தோன்றிய நாளான ஜன.2 இந்த ஆண்டுக்கான சித்த மருத்துவ தினமகா அனுசரிக்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள் கோவிட் – 19 சித்த மருத்துவம்