TNPSC Current Affairs in Tamil: 05-10-2020
தமிழக நிகழ்வுகள்
- அனைவருக்கும் உணவு என்ற தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் முதல் தவணையாக தமிழ்நாட்டுக்கு 17 கோடியே 53 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
- அரசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தோடு 2007-2008 ஆம் ஆண்டு “தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்” கொண்டு வரப்பட்டது.
தேசிய நிகழ்வுகள்
- ஒவ்வொரு ஆண்டும் அக். 2 முதல் 8 வரை இந்தியாவில் தேசிய வனவிலங்கு வாரம் கொண்டாடப்படுகிறது. இது 1954 முதல் கொண்டாடப்படுகிறது
- நேபாளத்தில் சுகாதரம் மற்றும் கல்வித்துறையில் உள்ள அமைப்புகளுக்கு இந்தியா 41 ஆம்புலன்ஸ் மற்றும் 6 பள்ளி பேருந்துகளை வழங்கியுள்ளது. சிறப்பம்சங்கள் 1994 முதல், இந்தியா 823 ஆம்புலன்ஸ் நேபாளத்திற்காக பரிசு அளித்துள்ளது.
- பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்பு செலவீன பார்வையாளராக முன்னாள் இந்திய வருவாய்ப் பணி (ஐ.ஆர்.எஸ்) அதிகாரிகள் மதுஹாஜன் மற்றும் பி.ஆர்.பாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் இந்திய தேர்தல் ஆணையம் நியமத்துள்ளது.
- பள்ளி மாணவர்கள் குறித்த விவரங்களை எமில் தளத்தில் பதிவேற்றம் செய்து, முறையாக பராமரிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
- கிழக்கு லடாக்கில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் நிலையிலான 7-ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் அக்டோபர் 12-ம் தேதி நடைபெறுகிறது.
- வரும் 2023-ம் ஆண்டுக்கு 100% மரபு சாரா எரிசக்தி மூலம் இயங்கும் உலகின் மிகப்பெரிய இரயில்வே அமைப்பை இந்தியா கொண்டிருக்கும் என்று மத்திய இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
- ஜி.எஸ்.டி கவின்சிலின் 42-வது கூட்டம் திங்கள் கிழமை (அக்.5) நடைபெறவுள்ளது.
- கரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாநில காவல்துறை டி.ஜி.பி, ஐ.ஜி. அதிகாரிகளின் ஆண்டு மாநாடு முதல் முறையாக காணொலி முறையில் நவம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது.
- ஆந்திர மாநில அரசு கரோனா நோய் தொற்றை முற்றிலும் விரட்ட அக்.3-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ஒரு வார காலம் ஸ்டீம் டிரைவ் என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
- இந்திய சந்தைகளிலிருந்து 3 மாதங்களுக்கு பிறகு செப்டம்பரில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்பிஐ) ரூ.3,419 கோடி மதிப்பிலான முதலீட்டை விலக்கிக் கொண்டு வெளியேறியுள்ளனர்.
- ஜூலை 2021-க்குள் சுமார் 25 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பூசியை பயன்படுத்த இலக்கு உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
- கடல்சார் கண்காணிப்பு செயற்கைக்கோளின் விண்மீன் தொகுப்பை இந்தியா-பிரான்ஸ் தொடங்கவுள்ளது.
இன்றைய முக்கிய தினங்கள்
- “உலக ஆசிரியர் தினம்” கருப்பொருள் – “Teachers: Leading in crisis, reimagining the future”.
- “உலக கட்டிடக்கலை தினம்” (ஆண்டுதோறு அக்டோபர் மாதத்தின் முதலாவது திங்கள் கிழமை) கருப்பொருள் – “Toward a better urban future.”
- International Day of No Prostitution
More Current Affairs – More Info