தமிழக முதல்வர் தைப்பூச திருவிழாவுக்கு அரசு விடுமுறை விடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அம்மா அழைப்பு மைய எண்ணான “1100”முதல்வரின் குறைதீர் மேலாண்மைத் திட்டதிற்கு பயன்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் வேலையின்மை விகிகதம் அரை சதவீதமாக குறைந்துள்ளது என இந்திய பொருளாதாரத்தை கணிக்கும் மையம் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரசிற்கு கோவிஷீல்டு தடுப்பூசி விலைரூ.292-ஆகசீரம் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.
கப்பல் அமைச்சகம்“சாகர்மாலா” நீர் விமான சேவையை (Sagarmala Seaplane Services Project) தொடங்கவுள்ளது.
கொல்கத்தாவில் உள்நாட்டு நீர் வழி போக்குவரத்தை மேம்படுத்தமத்திய அரசும், மேற்கு வங்க அரசும், உலக வங்கியும்105 மில்லியன் அமெரிக்க டாலர் திட்டதில் கையெழுத்திட்டுள்ளன.
அம்மோனியா நைட்ரஜன் பிரச்சனைக்குகூட்டு கண்காணிப்பு படை (Joint Surveillance Squad) யமுனையாற்றில் உருவாக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் ஹப்பல்லி ரயில் நிலையம் (ஸ்ரீ சித்தரூதா சுவாமிஜி ரயில் நிலையம்)உலகின் மிக நீளமான ரயில் பிளாட்ஃபார்ம் எனும் பெருமையை பெறவுள்ளது
1500+ மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலும் அமைக்கபட உள்ளது.
இது 2021 மார்ச்சில் திறக்கப்படும்.
2021 மார்ச் 12 முதல் 19 வரை கேரள மாநிலத்தினால்நான்காவது, உலக ஆயுர்வேத திருவிழா 2021 (Global Ayurveda Festival 2021) நடத்தப்பட உள்ளது.
அடுத்த கல்வியாண்டில் (ஆகஸ்ட் – 2021) முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வை (Common Entrance Test (CET)) நடத்துவதற்கான சாத்தியக்கூறினை ஆய்வு செய்ய பல்கலைக்கழக மானிய ஆணையம் (University Grants Commission (UGC)) 7 உறுப்பினர் கொண்ட குழுவினை பஞ்சாப் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் ராகவேந்திர (ஆர்) பி.திவாரி தலைமயில் அமைத்துள்ளது.
ரூ.3000 கோடி செலவில் 600 மெகாவாட் சூரிய ஆற்றல் கொண்ட உற்பத்தி திறன் கொண்ட உலகின் மிகப் பெரிய மிதக்கும் சூரிய ஆற்றல் திட்டத்தினைநர்மதா ஆற்றில் உள்ள ஓம்கரேஷ்வர் அணையில் இந்திய அரசு செயல்படுத்த உள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (Food Safety and Standards Authority of India (FSSAI)) இந்தியாவில் தயாரிக்கப்படும் எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகளின் உள்ள டிரான்ஸ்-கொழும்பு அமிலங்களில் (Trans-Fattu Acids (TFA)) அனுமதிக்கப்பட்ட அளவை தற்போதைய 5% வரம்பிலிருந்து2021-ம் ஆண்டில் 3%ஆகவும், 2022க்குள் 2%ஆகவும் குறைக்க வழிகாட்டுதலை வெளியிட்டுளது.
ஜன.5-ல் ராம் வினய் ஷாஹி தலைமையில் மத்திய அரசு தெற்காசியா எரிசக்திக்கான குழு என்ற உயர் மட்ட குழுவை, தெற்காசிய எரிசக்தி பாதுகாப்பு கட்டமைப்பின் மேம்பாட்டிற்காக அமைத்துள்ளது.
இந்தியாவின் முதல் தானியங்கி போக்குவரத்து மற்றும் தரவு முறைமைக்கான ஆய்வு மையம் Tihan Foundation – Technology Innovation Hub என்ற பெயரில் ஐ.ஐ.டி ஹைதரபாத்தில் அமைக்கப்பட உள்ளது.
ஜன.5-ல் அண்டார்டிகாவிற்கான 40வது அறிவியல் பயணத்தைஇந்தியா (Indian Scientific Expedition to Antarctica) கோவிலிலுள்ள மோர்முகோ துறைமுகத்திலிருந்து (Murmugao port) துவக்கி வைக்கப்பட்டது.
பனிடிக்கட்டியில் பயணிக்கும் எம்வி விசிலி கோலோவ்நின் என்ற கப்பல் 30 நாட்களில் அண்டார்டிகாவை சென்றடையும்.
2021 ஏப்ரல் மாதம் மீண்டும் இந்தியா வரும்
அண்டார்டிகாவிற்கான 39வது அறிவியல் பயணத்தை இந்தியா நவம்.2019-ல் மேற்கொள்ளப்பட்டது
ஜன.5-ல் புதுக்கோட்டை மாவட்ட நமணசமுத்திரத்தில் அம்மா சிறு மருத்துவமனையை தொடங்கி வைத்த தமிழக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் ஆரம்பிக்கப்படும் அம்மா சிறு மருத்துவமனைகளுக்கு முதற்கட்டமாக 835 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
2,000 மருத்துவர்கள், 2,000 செவிலியர்கள், 2,000 மருத்துவ உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளன என தெரிவித்துள்ளார்.
2 அடிக்குமாடிக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு உள்கட்டமைப்பு மற்றும் வசதிக்கான கட்டணத்தைதமிழகம் முழுவதும் வசூல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
விஜயநகர பேரரசின் நீர்மேலாண்மை தொடர்பான 14-ம் நூற்றாண்டு கல்வெட்டுசெங்கம் அடுத்த வாய்விடாந்தாங்கலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் ஸ்வீடன் பல்கலைக்கழகம் சார்பில்கரோனோ வைரஸின் முக்கிய மூலக்கூறுகளை அழிக்கும் மருந்துகள் மற்றும் அதற்கான சாத்திய கூறுகள் கணினி முறையில் கண்டுபிடித்துள்ளன.
சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர்ஸ்ரீராம் கேசவன்Appsheet என்ற அப்ளிகேஷனை தயாரிப்பதற்கான செயலியில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் மற்றும் அவருடைய படைப்புகள் திருடப்படுகின்றது என்று குகூள் நிறுவனத்தின் குறையை சுட்டிகாட்டியுள்ளார்.
அவருக்கு ரூ.2,30,000 பரிசுத்தொகையும், அவருடைய பெயரை கூகுளின் Hall of Fame-ல் சேர்த்து மரியாதை அளித்துள்ளது.
ஜன.6-ல் அமெரிக்காவில் ஜோ-பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் ஆதரவாளர்கள்“அமெரிக்காவை காப்போம்” எனற பெயரில் பேரணியை நடத்தினர்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஆன்லைனில் வாக்களிக்கலாம் என்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஜனவரி 26 (குடியரசு தினம்) முதல்கேரளாவில் 10,000 மாநில அரசு அலுவலங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் “பசுமை வளாகங்களாக அறிவிக்கப்பட உள்ளன.
நீட் தேர்வை நடப்பாண்டு (2021) முதல் இரண்டு முறை நடத்த தேசிய தேர்வு முகவை பரிந்துரைத்துள்ளது
ஜன.29ல் நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டவும்,பிப்.1-ல் பட்ஜெட் தாக்கல் செய்யவும்நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது
ஜப்பானில் 14 துறைகளில் இந்தியர்கள் பணியாற்றுவதற்காகஅந்நாட்டு கூட்டுறவு ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஜன.6-ல் ஒப்புதல் அளித்துள்ளது.
புத்தாண்டில் (2021) உலகிலேயே இந்தியாவில் தான் அதிக குழந்தைகள் பிறந்துள்ளன என ஐக்கிய நாடுகளின் சபைக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
மொத்தம் 3,71,500 குழந்தைகளில் பிறந்ததில்
முதலிடம் இந்தியா – 59,995
இரண்டாம் இடம் சீனா – 36,615
மூன்றாம் இடம் நைஜீரியா – 21,439
நான்காம் இடம் பாகிஸ்தான் – 14,161
ஐந்தாம் இடம் இந்தோனிஷியா – 12,336
ஜெர்மெனி நிறுவனங்களில் ஆண்-பெண் பாகுபாட்டை குறைக்க பங்குசந்தைகளில் பதிவு செய்யப்பட்ட உயர்நிலை நிர்வாக குழுக்களில் ஒரு பெண் இடம் பெற வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது.
ஆப்பிரிக்க காட்டில் பரவுகின்ற எக்ஸ் நோய் கரோனோவை விட பல மடங்கு ஆபத்தானது என விஞ்ஞானிகள் உலக நாடுகளுக்கு எச்சரித்துள்ளனர்.
இஸ்ரேல் அமெரிக்க நிறுவனான மாடர்னா நிறுவனம் உருவாக்கிய கரோனோ தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது.
கொச்சி-மங்களூரு இடையிலான 450 கிமீ எரிவாயு திட்டத்தினைநாட்டுக்கு அர்பணிப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.
ஈபிள் டவரை விட உயரமான பிரமாண்ட எரிகல்இந்தாண்டு பூமியை தாக்கும் என பிரபல எதிர்கால கணிப்பாளர் நாஸ்ட்ரடாம்ஸ் கணித்துள்ளார்.
ஜப்பானின் சுமிட்டோமோ வனவியல் நிறுவனம், ஜப்பானின் கிரியோட்டோ பல்கலைகழகம் ஆகியவை இணைந்து விண்வெளி குப்பை பிரச்சனைக்கு தீர்வாக உலகில் மரத்தால் செய்யப்பட்ட முதல் செயற்கைக்கோளை 2023-ல் செலுத்த உள்ளன.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றததன் மூலம் நியூசிலாந்து டெஸ்ட் தரவரிசை பட்டியிலில் முதன் முறையாக 118 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றுள்ளது.
இரண்டாம் இடம் – ஆஸ்திரேலியா (116)
மூன்றாம் இடம் – இந்தியா (114)
சாகித்திய அகடாமி விருது பெற்றவரும் தமிழ் எழுத்தாளருமானமாதவன் (86) காலமானார்.
2009-ல் தமிழக அரசால் கலைமாணி விருதும்,
2015-ல் இலக்கிய சுவடு என்ற சிறுகதை தொகுப்பிற்காக சாகித்திய அகடாமி விருதும் பெற்றவர்.