Tamil Current Affairs – 6th December 2020
சென்னை உயர்நீதிமன்றம் இந்தியாவிலேயே “அதிக பெண் நீதிபதிகள் பணியில் உள்ள உயர்நீதிமன்றம்” (13 பெண் நீதிபதிகள்) என்ற பெருமையை பெற்றுள்ளது |
ஆன்லைன், கற்பனை விளையாட்டு விளம்பரங்களை வெளியிடும்போது “இந்திய விளம்பர தர நிர்ணய குழுவின்” வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென தனியார் டிவி ஒலிபரப்பாளர்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
டிசம்.4 அன்று பிரதமர் மோடி அமெரிக்காவில் வாழும் ஐஐடி முன்னாள் மாணவர்களின் அமைப்பபான “பான் ஐஐடி அமெரிக்கா” ஏற்பாடு செய்த “ஐஐடி-2020” உலகளாவிய உச்சி மாநாட்டில் உரையாற்றினார். |
மத்திய அரசு நவம்.3 அன்று துணை ராணுவ ஊழியர் (வியூகம்) பதவியை உருவாக்க அனுமதியளித்துள்ளது.
|
இந்திய தேர்தல் ஆணையம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க அஞ்சல் வாக்குசீட்டை பயன்படுத்த பரிந்துரை செய்துள்ளது. |
டிசம்.5 அன்று மகாராஷ்டிராவின் “கன்ஹர்கான்” வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டதால் மகாராஷ்டிராவின் 50வது வனவிலங்கு சரணாலயமாக மாறியுள்ளது. |
டிசம்.5 அன்று கர்நாடக விகாஸ் கிராமீனா வங்கி விசாயிகளுக்காக “கிரிஷி ஓடி” எனும் திட்டத்தினை அறிமுகப்படுதியது. |
இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் இந்தியா-ரஷ்யா கடற்படைகளின் கூட்டு கடற்படை ஒத்திகை (Passage Exercise (PASSEX)). டிசம் 4-5 தேதிகளில் நடைபெற்றது |
6வது இந்தியா-C.L.M.V வணிக மாநாடு 2020 டிசம்.3-4 நாட்களில் நடைபெற்றது.
C.L.M.V என்பது
|
700 மெகாவாட் நீர்மின்சார்த்தை உற்பத்தியை செய்யும் “ஆசாத் பட்டன் திட்டம்” சீனா & பாகிஸ்தான் நாடுகள் கூட்டாக மேற்கொள்கிறது. |
சிங்கப்பூரின் “தி. ஸ்டரெய்ட் டைம்ஸ்” நாளிதழால் சிறந்த ஆசியராக சீரம் இன்ஸ்டிடியூட்டின் முதன்மை தலைமை அதிகாரி ஆதார் பூனாவாலா தேர்வு செய்யப்பட்டார். |
இந்திய விலங்கயில் ஆய்வு மையம் தற்போது நடத்திய ஆய்வு அறிக்கையில் மலையன் ராட்சத அணில் (or) கறுப்பு ராட்சத அணில் அழியும் நிலையில் செல்லக்கூடும் என தெரிவித்துள்ளது. |
ஐனவரி – அக்டோபர் வரையிலான வெப்பதரவுகளின் அடிப்படையில் 2016, 2019 ஆண்டுகளைத் தொடர்ந்து 3-வது அதிக வெப்ப ஆண்டாக 2020 மாறியுள்ளதென உலகளாவிய காலநிலை 2020 அறிக்கை தெரிவித்துள்ளது. |
சீனா தனது கொடியை சாங்கி-5 விண்கல பயணத்தின் போது ஏற்றியதன் மூலம் நிலவில் கொடியேற்றிய 2வது நாடு என்ற பெருமை பெற்றுள்ளது. |
திரவ பெட்ரோலிய வாயு சங்க முதல் துணை தலைமை அதிகாரியாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைமை அதிகாரி ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா நியமனம் |
உலக மண் தினம் (டிசம்.5)
கருப்பொருள் : To keep soil alive, protect soil biodiversity |
சர்வதேச தன்னார்வ தினம் (டிசம்.5)
கருப்பொருள் : Together we can through volunteering |