TNPSC Current Affairs in Tamil – 6th March 2023

Current Affairs One Liner 6th March 2023

  • சென்னை கிண்டி பாம்பு பண்ணையில் இருந்து 10 கங்கை நீர் (கரியால்) முதலைகள் குஜராத்தின் ஜாம் நகரின் கீரின்ஸ் விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பபட உள்ளன.
  • தோள்சீலை பேராட்டத்தின் 200வது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமாரி வருகை
  • மார்ச் 5-12 வரை கோவை வ.உ.சி மைதானத்தில் தேசிய அளவிலான மகளிர் சுயஉதவிக் குழு உற்பத்தி பொருள்களின் சாரஸ் கண்காட்சி நடைபெறுகிறது.
  • மார்ச் 10-ல் 1,000 இடங்களில் காய்ச்சலுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.
  • காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அனுப்ப அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு இட்டுள்ளார்.
  • “கள ஆய்வில் முதல்வர்” என்ற திட்டத்தின் கீழ் மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடனான சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவகலத்தில் நடைபெற்றுள்ளது.
  • பொதுப்பெயர் கொண்ட மருந்துகளையே பரிந்துரை செய்ய வேண்டும் என்று மருத்துவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக் கொண்டார்.
  • தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகள் தாயரிக்கும் பணிகள், தனியாரிடமிருந்து மத்திய அரசின் தேசிய தகவலியல் மையத்திடம் அளிக்கப்பட உள்ளது.
  • ஒலியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் செல்லும் பிரமோஸ் ஏவுகணையை இந்திய கடற்படை அரபிக்கடலில் சோதிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய சிறுநீரகவியல் மருத்துவர்கள் சங்கத்தின் (ஐஎஸ்என்) தென்னிந்திய தலைவராக மருத்துவர் செளந்தரராஜன் தேர்வானார்.
  • மார்ச் 5-ல் உலகின் பெருங்கடல்கள் மற்றும் அதன் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கும் உடன்படிக்கையை ஐ.நா. உறுப்பு நாடுகள் மேற்கொண்டுள்ளன.
  • பாதுகாப்புத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது.
  • சானியா மிர்ஸா டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றார்.
  • சந்தோஷ் கோப்பைக்கான தேசிய கால்பந்து சாம்பியன் போட்டியில் கர்நாடாக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
  • உலக கண்டென்டர் (டபிள்யுடிடி) டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சீனா சாம்பியன் பட்டம் வென்றது.

Leave a Comment