Tamil Current Affairs – 7th & 8th December 2020
ஏ.குலேசகரன் “ஜாதி வாரி கணக்கெடுப்பு ஆணைய தலைவராக” நியமிக்கப்பட்டுள்ளார். |
தமிழக முதல்வரால் புதிதாக கட்டப்பட்ட 17 துணைமின் நிலையங்களையும், சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்களையும், பாலங்களையும் திறந்து வைத்தார். |
கரோனா தடுப்பு மருந்துகளை பதப்படுத்தி வைக்க சிறப்பு மையங்கள் தமிழகத்தில் 51 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். |
இரு வழிதடங்களில் 29.4 கி.மீ நீளத்திற்கு ஆக்ரா மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணியை பிரதமர் தொடங்கி வைக்கிறார். |
அமெரிக்க விஞ்ஞானிகளால் கரோனா வைரஸ் தொற்றை ஸ்மார்ட்போன் கேமரா மூலம் 15 முதல் 30 நிமிடங்களில் கண்டறியும் பரிசோதனை கருவி கண்டுபிடிக்கப்பட்டது. |
எல்லா வங்கி வாடிக்கையாளர்களும் பயன்படுத்த “ஐமொபைல் பே (iMObile Pay)” என்ற செயலியை ஐசிஐசிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. |
ஒரு லட்சம் கோடி டாலர் இழப்பானது உலகம் முழுவதும் நடைபெற்ற சைபர் குற்றங்களால் ஏற்பட்டுள்ளது என மெக்கஃபே (ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் நிறுவனம்) தெரிவித்துள்ளது. |
டிசம்.6 அன்று சீனா “லாங்க் மார்ச் -3B” ராக்கெட் மூலம் “காஃபென் – 14” என்ற புவி ஆராய்ச்சி செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது . |
போர்ச்சுக்கல் கால்பந்து வீரல் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொழில்முறை போட்டிகளில் 750 கோல் அடித்து புதிய மைல்கல்லை அடைந்தார். |
ஐசிசி சூப்பர் லீக் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. |
டிசம்.7 மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஃபிட் இந்தியா மிதிவண்டி போட்டியின் 2வது பதிப்பை தொடங்கி வைத்தார். |
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் கோரி ஆண்டர்சன் ஓய்வு அறிவித்தார். |
முள்ளங்கியை சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் அறுவடை செய்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். |
படைவீரர் கொடி நாள் (டிசம்.7) |
சர்வதேச விமான போக்குவரத்து தினம் (டிசம்.7) |