TNPSC Current Affairs in Tamil – 8th January 2021 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 8th January 2021

புதிய துணைவேந்தர் பணியமர்த்தும் வரையில் அல்லது மறு உத்தரவு வரும் வரை பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் குழந்தைவேலின் பதவிக்காலத்தை தமிழ ஆளுநர் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பஞ்சாப் மாநில அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு “இலவச சானிட்டரி பேட்” வழங்கும் திட்டத்தினை அறிவித்தது.
மேற்கு பிரத்யேக சரக்கு பாதையில் (Western Dedicated Freight Corridor) ஹரியானாவின் புதிய அட்டலி (New Ateli) & இராஜஸ்தானின் புதிய கிஷன்கர்க்  (New Kishangani) இடையே மின்சாரத்தால் இயங்கும் 1.5கி.மீ நீள உலகின் முதல் அடுக்கு பெட்டக ரயில் போக்குவரத்து (First double stack long –  haul conainer train) தொடங்கப்பட்டுள்ளது.
மார்ச் 1 தேதி முதல் ஸ்பெக்டரம் அலைக்கற்றைக்கான 6வது சுற்று ஏலம் தொடங்குகிறது.

  • 2020 டிசம்.17-ல் 2,251.25 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் வரும் 700, 800, 900, 2,100, 2,300, 2,500 மெகா ஹெர்ட்ஸ் அலைகற்றைகளை ஏலம் விட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதன் அடிப்படை விலை ரூ.3.92 லட்சம் கோடி ஆகும்
இந்தியாவில் பறவைகாய்ச்சல் நோயை கட்டுப்படுத்துவதற்கான செயல் திட்டத்தை அமல்படுத்தவும், மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படவும் தில்லி கிரிஷி பவனின் மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை 190ஏ அறையில் தேசிய அளவிலான பறவை காய்ச்சல் கட்டுப்பாட்டு உதவி மையத்தை  ஏற்படுத்தியுள்ளது.

  • தெலைபேசி எண் – 011-23382354
உள்நாட்டுப் பசுக்கள் பற்றி இணைய வழி தேர்வு நடத்தில் அதில் தேர்ச்சி பெறுவோருக்கு “காமதேனு கெள விக்யான் பிரச்சார் பிரசார்” என்ற பெயரில் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும் என காமதேனு ஆயோக் தெரிவித்துள்ளது.

  • காமதேனு ஆயோக் 2019-ல் உருவாக்கப்பட்டது
  • தலைவர் – ல்லபாய் கத்ரியா
ஃபரிதாபாத்தில் அமைந்துள் மொழிபெயர்ப்பு சுகாதார அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் (Translattional Helath Science & Technology Institute (THSTI)) இந்தியாவின் முதல் & உலகின் ஏழு ஆய்வகங்களில் ஒன்றான “தொற்றுநோய்க்கு தாயார்நிலைக்கான கண்டுபிடிப்புகளுக்கான கூட்டமைப்பின் ஆய்வகம் (Coalition for Epidemic Preparedness Innovations (CEPI)) அமைக்கப்பட்டுள்ளது.
செங்குத்து மற்றும் கிடைமட்ட இட ஒதுக்கீடு முறைமையை (Vertical and horizontal resevations) சவுரவ் யாதவ் எதிராக உத்திரபிரதேச மாநில அரசு (Saurave Yadav versus State of Uttar Pradesh case) இடையேயான வழக்கில் உச்சநீதிமன்றம் வரையறுத்துள்ளது.
தெலுங்கான மாநிலமானது மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை பரிந்துரைத் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கான சீர்த்திருத்தங்களை (Urban Local Bodies reforms) நிறைவு செய்த நாட்டின் மூன்றாவது மாநிலமானது.

இதனால் திறந்தவெளி சந்தைகளின் மூலம் ரூ.2,508கோடி கூடுதல் நிதியை திரட்டும் தகுதியை பெற்றுள்ளது.

பஞ்சாப் பதிண்டா மத்திய பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச ஆராய்ச்சி சங்கம் இணைந்து ஜன.7 முதல் இரண்டு நாள் நடத்தும் சர்வதேச ஒருங்கிணைந்த கல்வி மாநாடு “எஜுகான் 2020” (EDUCON – 2020)-ஐ மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பெக்ரியால் நிஷாங்க் தொடங்கி வைத்தார்.

கருப்பொருள் – சர்வதேச அமைதியை மீட்டெடுப்பதற்காக இளைஞர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கல்வி குறித்த தொலைநோக்கு பார்வை (Envisioning Educaton for Transforming Youth Restore Global Peace)

ஜன.9 அன்று 16வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு 2021 (Pravasi Bharatiya; Divas Convention 2021) நடத்தப்படுகிறது.

  • பிரதமர் மோடியால் தொடக்கி வைக்கப்பட இருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் சுரிநாம் அதிபர் சந்திரிகாபெர்சாத் சந்தோக்கி சிறப்புறையாற்றுகிறார்.
  • ஐன.8-ல் இந்தியா மற்றும் வெளிநாட்டு இந்தியர்களில் இருந்து இளம்சாதனையாளர்களை ஒன்றிணைத்தல் (Bring together Young Achievers from India and Indian Diaspora) என்னும் தலைப்பில் இளைஞர்களுக்கான வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு நடைபெறும்.
லடாக் யூனியன் பிரதேசத்தின் மொழி, கலாச்சாரம் மற்றும் நிலத்தைப் பாதுகாக்க மத்திய இணை அமைச்சர் கங்காபுரம் கிஷான் ரெட்டி தலைமையில் கங்காபுரம் கிஷான் ரெட்டி குழு (Gangapuram Kishan Reddy Committee) அமைக்கப்பட்டுள்ளது.
ஜன.7-ல் ஜோபைடனுக்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற சான்றிதழ் வழங்கபட்டு அவரது வெற்றி நாடாளுமன்றத்தல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதால் ஜன.20-ல் அதிபராக பதவியேற்க உள்ளார்.
உலக பொருளாதாரம் 2021-ம் ஆண்டில் 4% வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
தனது இசை ஒலிபரப்பு தளமான சியாமி மியூசிக்கை மூடுவதாக சீனாவின் இணைய விற்பனைதளமான அலிபாபா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பணபரிமாற்ற உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்கான செயல்பாட்டு வழிகாட்டுதலை அறிவித்துள்ளது.
2021 மார்ச்சிற்குள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India (NHAI)) இந்தியாவின் முதலாவது அரசு நிதியுதவி உள்கட்டமைப்பு மூதலீட்டு அறக்கட்டளையை  (Infrastructure Investment Trust (InvlT)) செயல்படுத்த உள்ளது.
ஜன.6-ல் அருண்குமார் கோஸ்வாமி ஆந்திரபிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

6th & 7th January Current Affairs – Read Here

Related Links

Leave a Comment