TNPSC Current Affairs in Tamil – 8th March 2023

Current Affairs One Liner 8th March 2023

  • கன்னியாகுமரி மாவட்டம் ஒழுகினசேரியிலுள்ள திமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
  • நாடு முமுவதும் உற்பத்தி தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களில் 42% பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
  • “மெக்கானிக்கல் த்ரோம்பேக்டமி” எனப்படும் மூளை ரத்த நாளத்தில் உறைந்த ரத்தத்தினை அகற்றும் சிகிச்சை மூலம் பக்கவாத பாதிப்பிலிருந்து இளைஞரை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை காப்பாற்றியுள்ளது.
  • “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ், போட்டித் தேர்வுகள் பிரிவை தமிழகம் முழுவதும் உருவாக்கும் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • மேகாலய முதல்வராக தேசிய மக்கள் கட்சித் தலைவர் கான்ராட் சங்மாவும் பதவி ஏற்றுள்ளார்
  • 5வது முறையாக நாகலாந்து முதல்வராக நேபியூ ரியோவும் பதவி ஏற்றுள்ளார்.
  • மார்ச் 8ல் திரிபுராவில் மாணிக் சாஹா தலைமையிலான அரசு பதவியேற்க உள்ளது.
  • இந்தியா விமானப்படையில் தாக்குதல் பிரிவுக்கு ஷாலிஸா தாமி என்ற பெண் அதிகாரியாக முதன் முதலாக நியமிக்கப்பட்டுள்ளார்
  • இந்திய விமானப் படைக்கு 70 பயிற்சி விமானங்களை வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்த்துடன் (ஹெச்ஏஎல்) ரூ.6,8000 கோடிக்கான ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
  • மின்சாரத் தேவைக்கு சூரிய மின்சக்தியை பயன்படுத்தும் கிராமமாக ஒடிஸாவின் சகசாஹி கிராமம் திகழ்கிறது.
  • நிலத்தில் இருந்து நடுத்தர தொலைவில் உள்ள வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் எம்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
  • நாட்டில் அதிகபட்சமாக ஒடிசா மாநிலத்தில் 142 இடங்களில் காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.
  • மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 6வது உலகக்கோப்பை ஸ்கேட்டிங் போட்டி நடைபெற உள்ளது.
  • 20 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் உருவாக்கியுள்ள புதிய வரிசை ராக்கெட்டான ஹெச்3-ஐ முதல் முறையாக விண்ணில் செலுத்தும் முயற்சி தோல்வியடைந்தது.
  • உலக மகளிர் தினமானது “DigitALL : Innovation and technology for gender equality” என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டது

Leave a Comment