Tamil Current Affairs – 9th December 2020
தமிழக சட்டப்பேரவையில் வ.உசி., ஓமந்தூரார், பரமசிவம் சுப்பராயன் ஆகிய மூன்று தலைவர்களின் உருவப்படங்களை திறக்கப்படும் என்ற முதல்வர் அறிவிப்பால் சட்டப்பேரவையை அலங்கரிக்கும் தலைவர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்வு. |
தமிழ் வழி பயின்றவர்களுக்கு அரசுப்பணியில் 20% ஒதுக்கீடு சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் ஆளுநர் அளித்த நிலையில் தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. |
தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 63.41 லட்சமாக உள்ளதென தமிழக அரசு அறிவித்துள்ளது. |
இந்திய அரசின் தொலைத்தொடர்பு துறை மற்றும் இந்திய செல்போன் நிறுவன சங்கங்கள் இணைந்து நடத்தும் “இந்திய மொபைல் மாநாடு 2020” (India Mobile Congress) டிசம். 8 முதல் 10 வரை நடைபெறுகிது.
மையக்கருத்து:- உள்ளடக்கிய புத்தாக்கம் – திறன்மிகு பாதுகாப்பபான மற்றும் நிலையானது (Inclusive Innovation – Smart, Secure, Sustainable) |
சீனாவும் நேபாளமும் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848.86 மீட்டர் என அறிவித்துள்ளன. முந்தைய அளவை விட எவரெஸ்ட் சிகரம் 0.86 மீட்டர் அதிகம். |
ஐியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி 2021 இறுதிக்குள் ஜியோ 5ஜி சேவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். |
ரூ.22 கோடியை (30லட்சம் டாலர்கள்) பாலஸ்தீனத்தின் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கு இறுதி தொகையாக இந்திய அரசு பாலஸ்தீனத்திற்கு வழங்கியுள்ளது. |
ஆசிய வளர்ச்சி வங்கியானது பெங்களூர் ஸ்மார்ட் எரிசகத்தி திறமையான மின் விநியோக திட்டத்திற்காக 190மில்லியன் டாலர் கடன் வழங்க டிசம்.4 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. |
இந்தியாவில் முதல் கட்டமாக 3 கோடி சுகாதாரப்பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய சகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
இந்தியாவின் “இன்வெஸ்ட் இந்தியா” (Inverst India) அமைப்பிற்கு ஐ.நா. வர்த்தக வளர்ச்சி மாநாடு அமைப்பின் “ஐநா மூதலீட்டு மேம்பாட்டு விருது 2020” (United Nations Investment Promotion Award) வழங்கப்பட்டுள்து. |
உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் மத்திய பிரதேசத்தின் குவாலியர், ஓர்ச்சா ஆகிய நகரங்களை யுனெஸ்கோ சேர்த்துள்ளதாக மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது. |
போதைப்பொருள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் (United Nations Commission on Narcotic Drugs (UN-CND) 63-வது அமர்வானது கஞ்சாவை மிகவும் ஆபத்தான மருந்து பிரிவில் இருந்து நீக்கியுள்ளது. |
சீனாவின் மிகப்பெரிய, மேம்பட்ட அணு இணைவு சோதனை சாதனமான HL-2M டோகாமகர் உலை (TOKAMAK REACOR) “செயற்கை சூரியன்” என அழைக்கப்படுகிறது. |
பிரிட்டனில் முதல் கரோனா தடுப்பூசி 90 வயது மார்கெரட்கீனன் என்ற மூதாட்டிக்கு செலுத்தப்பட்டது. |
பிரிட்டிஷ்-இந்திய பத்திரிக்கையாளர் அனிதா ஆனந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையை மையமாகக் கொண்டு The Patient Assassing: A True Tale of Massacre, Revenge and the Raj என்ற பெயரில் எழுதிய புத்தகத்திற்கு ஃபென் ஹெஸ்ஸல்-டில்ட்மான் வரலாற்றிற்கான பரிசு 2020 (PEN Hessell-Tiltman Prize for Histroy 2020)-ஐ வென்றுள்ளது |
பிக்சல் (PIXXEL) என்ற நிறுவனம், இந்திய விண்வெளி துறையின் கீழ் செயல்படும் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் இந்தியாவின் முதல் “தனியார் தொலையுணர்வு செயற்கைக்கோளை (Remote-Sensing Satelite) தயாரிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. |
ஸ்பெயினின் வலென்சியா நகரில் நடைபெற்ற அரை மாராத்தான் போட்டியில் கென்ய வீரர் கிபிவோட் கன்டி போட்டிக்கான இலக்கை 57நிமிடம் 32விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். |
மும்பையை சார்ந்த ஜெஹான் தாருவாலா சாகிர் கிராண்ட் பிரிக்ஸின் ஃபார்முலா-2 போட்டியை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை படைத்துள்ளார். |
உலக தடகள விருதுகள் 2020-க்கான (World Athletics Award – 2020) வீரர்கள் தேர்வு
|
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (டிசம்.9)
Theme : Recover with Integrity |