ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார்.
சென்னை மாநகராட்சியில் பேருந்தில் இயங்கும் நடமாடும் இதய பரிசோதனை மையம் தொடக்கம்.
“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் கொளத்தூர் தொகுதியில் ரூ.71.81 கோடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு கொண்ட கட்டித்திற்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் திருவிழா-வில் தமிழக முதல்வர் பங்கேற்றுள்ளார்.
இலக்கியம், சமூக பணி சேவைக்காக ஆர்.கமலம் சின்னசாமிக்கு “ஒளவையார் விருது”-வழங்கப்பட்டது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்தூக்கி பழுதானபோது, அதை சரிசெய்ய புது கருவியை கண்டுபிடித்த ம.இளம்பிறைக்கு “பெண் குழந்தை விருது” வழங்கப்பட்டது.
பெண் குழந்தைகள், மகளிர் நலன் பாதுகாப்பை திறம்பட செயல்படுத்தியதிற்காக திருவள்ளூர் மாவட்டம் முதல் பரிசு பெற்றது. நாகப்பட்டினம், நாமக்கல் மாவட்டங்கள் முறையே 2வது, 3வது பரிசுகளை பெற்றுள்ளது.
மார்ச்-8ல் ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனேசி நான்கு நாள் பயணமாக இந்தியா வருகை.
திரிபுரா முதல்வராக மாணிக் சாஹா 2வது முறையாக பதவியேற்றார்.
நாஸாவும், இஸ்ரோவும் இணைந்து அமெரிக்காவில் கூட்டாக உருவாக்கிய “நிஸார்” என்ற புவி கண்காணிப்பு செய்கைகோளை இஸ்ரோவிடம் ஒப்படைத்தது.
ஏர் இந்தியா நிறுவனத்தில் 15% பேர் பெண் விமானிகள் பணியாற்றுவதன் மூலம் உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பெண் விமானிகளைக் கொண்ட நிறுவனமாக திகழ்கிறது.
“ஒரியன்டியா சுட்சுகாமுஷி” என்னும் பாக்டீரியாவல் உருவாக்கும் “ஸ்க்ரப் டைப்ஸ்” நோய்க்கான சிகிச்சையை இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
“உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2022”-ல் இந்தியா 135வது இடம் பிடித்துள்ளது.
“ஊரக வேலை உறுதித் திட்டத்தின்” கீழ் குடும்பத்தலைவர் பெண்களுக்கு கூடுதலாக 50 நாள்கள் பணிகள் அதிகரிக்கப்பட்டது.
உலகில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறை ஆப்கானிஸ்தானில் நடைபெறுகிறது – ஆப்கானிஸ்தான் ஐ.நா. சிறப்பு பிரதிநிதி ரோஸா ஒடுன்பயவோ தெரிவித்துள்ளார்.