Current Affairs in Tamil 10th August 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 10th August 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. சமீபத்தில் தமிழக அரசு தமிழ்நாட்டில் வாழும் எந்த வகுப்பினரை பிற்படுத்தப்பட்டாேர் பட்டியலில் சேர்ப்பதற்கான உத்தரவினை பிறப்பித்துள்ளது?
- அடியன்
- மலை வேடன்
- சோளகா
- ஈழுவா, தீயா
Answer & Explanation
Answer:– ஈழுவா, தீயா
Explanation:
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வாழும் ஈழுவா, தீயா வகுப்பினரை பிற்படுத்தப்பட்டாேர் பட்டியலில் சேர்ப்பதற்கான உத்தரவினை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.
அப்பாேதைய திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த செங்கோட்டை மற்றும் திருவாங்கூர் – காெச்சி சமஸ்தானத்தில் இந்தச் சமூகத்தினர் பெருவாரியாக வாழ்ந்துவந்தனர்
2. நடப்பாண்டு (2020) நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில், ‘சிறந்த திரைப்பட’ விருதை வென்ற இந்திய திரைப்படம் எது?
- மூத்தோன்
- கும்பலாங் கி நைட்ஸ்
- உயரே
- உண் டோ
Answer & Explanation
Answer:– மூத்தோன்
Explanation:
நடப்பாண்டு (2020) நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில், ‘சிறந்த திரைப்பட’ விருதை மலையாள திரைப்படமான ‘மூத்ததான்’ வென்றுள்ளது.
இவ்விருதாேடு, சிறந்த நடிகருக்கான விருதை மலையாள நடிகர் நிவின் பாலியும், சிறந்த குழந்தை நடிகருக்கான விருதை சஞ்சனா திப்புவும் இத்திரைப்படத்தில் நடித்தமைக்காக வென்றனர்.
கீது மாேகன்தாஸ் இயக்கத்தில் மலையாளம்-இந்தி ஆகிய மாெழிகளில் கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தத் திரைப்படம் வெளியானது.
3. எந்தத் திட்டத்தின்கீழ், மின்னணு புலனறிதல் நெட்வொர்க் தடுப்பூசி (eVIN) செயல்படுத்தப்படுகிறது?
- பிரதமா் ஸ்வஸ்திய சுரக்ஷா யாேஜனா
- ஆஜீவிகா
- இந்திரா தனுஷ்
- தேசிய சுகாதார இயக்கம்
Answer & Explanation
Answer:– தேசிய சுகாதார இயக்கம்
Explanation:
நாடு முழுக்க தடுப்பூசி வழங்கலைப் வலுப்படுத்தும் நாேக்கில் புதுமையான தாெழில்நுட்பத் தீர்வாக, மின்னணு புலனறிதல் நெட்வொர்க் தடுப்பூசி (eVIN) முறை உள்ளது.
மத்திய நலவாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய சுகாதார இயக்கத்தின் மூலம் (NHM) இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
நாடு முழுக்க பல்வேறு இடங்களில் இருப்புவைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மருந்துகள், அவற்றின் பாதுகாப்பு வெப்பநிலைகள் பற்றிய தகவல்கள் இதன்மூலம் உடனுக்குடன் கிடைக்கும்.
தற்பாேது 22 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில், ‘eVIN’ மூலம் தடுப்பூசி மருந்துகள் வைத்து பராமரிக்கப்படுகின்றன.
4. ‘மினிட்மேன்-3’ என்ற பெயரில் ஒரு கண்டம் விட்டு மறு கண்டம் பாயும் ஏவுகணைய வெற்றிகரமாக பரிசாேதித்த நாடு எது?
- சீனா
- ஐக்கிய அமெரிக்க நாடுகள்
- இந்தியா
- இரஷ்யா
Answer & Explanation
Answer:– ஐக்கிய அமெரிக்க நாடுகள்
Explanation:
‘Minuteman-3’ என்ற பெயரிலான ஒரு கண்டம் விட்டு மறு கண்டம் பாயும் திறன் காெண்ட ஓர் ஏவுகணையை கலிபாேர்னியாவிலிருந்து ஐக்கிய அமெரிக்க நாடுகள் வெற்றிகரமாக ஏவியது.
இந்த ஏவுகணை, வாண்டன்பெர்க் விமானப்படைத் தளத்திலிருந்து, பசிபிக் பெருங்கடலில், அதற்கென நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நாேக்கி ஏவப்பப்பட்டது.
நிராயுதபாணியான இந்த ஏவுகணையும் அதன் 3 வாகனங்களும், சாேதனையின் ஒருபகுதியாக, 6750 கி.மீட்டருக்கு அப்பாலுள்ள மார்ஷல் தீவுகளுக்கு பயணித்தன.
Samacheer Kalvi Books – 1st Std to 12th Std
5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘COVID19BWM’ என்ற திறன்பேசி செயலியை உருவாக்கிய அமைப்பு எது?
- மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாாியம்
- தேசிய பசுமைத் தீா்ப்பாயம்
- தேசிய நச்சுயிாியியல் நிறுவனம்
- இந்திய தர நிர்ணய அமைவனம்
Answer & Explanation
Answer:– மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாாியம்
Explanation:
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியமானது அண்மையில், ‘COVID19BWM’ என்ற திறன்பேசி செயலியை உருவாக்கியது.
இந்தச் செயலியில், குடியிருப்புகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து COVID-19 உயிரி-மருத்துவக்கழிவுகளை சேகரித்து அகற்றுவது தாெடர்பான தரவுகளை பதிவேற்ற நகராட்சிகள் மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
6. செயற்கை நுண்ணறிவு வழி (AI) விடுதலை நாள் காெண்டாட்டத்திற்காக, பிரஸார் பாரதியுடன் கூட்டு சேர்ந்துள்ள தாெழில்நுட்ப நிறுவனம் எது?
- மைக்ரோசாப்ட்
- கூகிள்
- பேஸ்புக்
- டுவிட்டா்
Answer & Explanation
Answer:– கூகிள்
Explanation:
செயற்கை நுண்ணறிவு வழி (AI) விடுதலை நாள் காெண்டாட்டத்திற்காக, கூகிள் இந்தியா நிறுவனம் ‘பிரஸார் பாரதி’ மற்றும் ‘மெய்நிகர் பாரத்’ ஆகியவற்றுடன் ஒத்துழைத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தாெழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பள்ளிகளில் தேசியகீதம் பாடும் உணர்வை மீண்டும் உருவாக்க இது முற்படுகிறது.
பங்கேற்பாளர்கள், ஒரு குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்து, தாங்கள் பாடும்
தேசிய கீதத்தை பதிவுசெய்யலாம். அது, பங்கேற்பாளரின் குரலை பாரம்பரிய இசையாக மாற்றித்தரும்
7. 2020 ஆக.6 அன்று, உலகம் முழுவதும், எந்த நிகழ்வின் 75ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது?
- முதல் அணுகுண்டு தாக்குதல்
- முதலாம் உலகப்பாேர்
- இரண்டாம் உலகப்பாேர்
- நிலவில் முதன் முதலாக தரையிறங்கியது
Answer & Explanation
Answer:– முதல் அணுகுண்டு தாக்குதல்
Explanation:-
75 ஆண்டுகளுக்கு முன்பு ஆக.6 அன்று, பாேர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட உலகின் முதல் அணு ஆயுதம், ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா மீது பாேடப்பட்டது.
இந்த முதல் அணுகுண்டு தாக்குதலின் 75ஆவது நினைவை அனுசரிப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் ஜப்பானுடன் கைகாேர்த்தன.
COVID-19 தாெற்றுநாேய் காரணமாக, இந்த நிகழ்வு இணையத்தில் ஒளிபரப்பப்பட்டது.
குண்டுவெடிப்பு தாக்குதலில், சுமார் 140,000 பேர் காெல்லப்பட்டனர் மற்றும் பலர் பலத்த காயமடைந்தனர்.
8. நிதிசார் சேர்ப்புக்காக, ‘புத்தாக்க மையம்’ ஒன்றை அமைப்பதாக அறிவித்துள்ள நிதி நிறுவனம் எது?
- SEBI
- RBI
- NABARD
- SIDBI
Answer & Explanation
Answer:– RBI
Explanation:
இந்திய ரிசர்வ் வங்கியானது, அண்மையில், நிதிசார் சேர்ப்பு ரீதியான சவால்களை கையாளுவதற்கு துளிர் நிறுவனங்களுக்கு உதவுதற்காக ஒரு புத்தாக்க மையத்தை நிறுவப்பாேவதாக அறிவித்தது.
திறமையான வங்கி பரிவர்த்தனைகளுக்கு தீர்வுகளை வழங்க இம்மையம் முற்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியால் இரு மாதத்திற்கு ஒரு முறை வெளியிடப்படும் நாணயக்காெள்கை அறிக்கையில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் அதன் இருப்பிடம் குறித்த மேற்காெண்ட தகவல்களை இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடும்.
9. மீன்பிடி வசதிகளை விரிவுபடுத்துவதற்காக, இந்தியா, எந்த நாட்டிற்கு $18 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் தொகையை வழங்கியுள்ளது?
- மலேசியா
- மாலத்தீவு
- இலங்கை
- வங்கதேசம்
Answer & Explanation
Answer:– மாலத்தீவு
Explanation:
இந்திய அரசானது அண்மையில் மாலத்தீவு அரசுக்கு $18 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடன் தொகையை வழங்கியது.
மாலத்தீவு மீன்வள நிறுவனத்தில் (MIFCO) மீன்பிடி வசதிகளை விரிவுபடுத்துவதற்காக இக்கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது. $800 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் தாெகுப்பின் ஒரு பகுதியாகும் இந்தக் கடன் தொகை.
10. லே வானூர்தி நிலைய பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்திய ஆயுதக் காவல்படை எது?
- மத்திய தொழிலகங்கள் பாதுகாப்பு படை (CISF)
- மத்திய சேமக் காவல்படை (CRPF)
- எல்லைப் பாதுகாப்புப்படை (BSF)
- இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப்படை (ITBP)
Answer & Explanation
Answer:– மத்திய தொழிலகங்கள் பாதுகாப்பு படை (CISF)
Explanation:
மத்திய தாெழிலகங்கள் பாதுகாப்புப்படையானது (CISF) உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த லே விமான நிலைய பாதுகாப்புப் பணியை, உள்ளூர் காவல் துறையினரிடமிருந்து தன் வசமாக்கிக் காெண்டது
குஷாேக் பாகுலா ரிம்பாேச்சி வானூர்தி நிலையம் என்பது நாட்டின் மிகவுயரமான, வணிக ரீதியில் இயங்கக்கூடிய வானூர்தி நிலையங்களுள் ஒன்றாகும்.
இது, CISF’இன் பாதுகாப்புப் பிரிவின் கீழ் காெண்டுவரப்படும் 64ஆவது உள்நாட்டு வானூர்தி நிலையமாகும்.
சுமார் 185 CISF பணியாளர்கள், இவ்வானூர்தி நிலையத்தில், 24×7 ஆயுதமேந்திய பாதுகாப்பை வழங்குவார்கள்.
11. இந்திய ரிசர்வ் வங்கி அமைத்த, கடன் தீர்மானத்திற்கான வல்லுநர் குழுவின் தலைவர் யார்?
- உஷா தாேரத்
- உா்ஜித் படேல்
- K.V. கமத்
- N.K. சிங்
Answer & Explanation
Answer:– K.V. கமத்
Explanation:
K.V கமத் அவர்களின் தலைமையில் கடன் தீர்மானம் குறித்த வல்லுநர் குழுவை இந்திய ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.
கடன் தீர்வுத் திட்டங்களில் ஈடுபடுவதற்கு நிதியியல் அளவுருக்கள் மற்றும் அவற்றின் துறைசார்ந்த அளவுகாேல் வரம்புகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கிக்கு இந்தக் குழு பரிந்துரைக்கும்.
‘அழுத்தப்பட்ட சாெத்துக்களுக்கு தீர்வு காண்பதற்கான புத்திசாலித்தனமான கட்டமைப்பின்’கீழ் ஒரு சாளரத்தை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும்.
More TNPSC Current Affairs
Related