Current Affairs in Tamil 11th August 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 11th August 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1.ஒழிக்கப்பட்ட அகில இந்திய கைவினைப்பொருள் வாரியத்தின் தலைவர் யார்?
- பிரதமர்
- ஜவுளித் துறை அமைச்சகம்
- MSME அமைச்சகம்
- கலரச்சார அமைச்சகம்
Answer & Explanation
Answer:– ஜவுளித் துறை அமைச்சகம்
Explanation:
ஜவுளி அமைச்சகத்தின் அண்மைய அறிவிப்பின்படி, இந்திய அரசு, அகில இந்திய கைவினைப்பொருள் வாரியத்தை ஒழித்துள்ளது.
1992 ஜனவரி.23 அன்று மத்திய ஜவுளி அமைச்சரின் தலைமையில் இந்த வாரியம் அமைக்கப்பட்டது.
இது ஊரக வளர்ச்சி மற்றும் குறு, சிறு & நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகங்களின் செயலாளர்களையும், பல்வேறு மாநிலங்களையும் அதன் உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.
கைவினைப்பபொருட்கள் மற்றும் கைத்தறி துறைகளில் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவது குறித்து அரசுக்கு அறிவுறுத்துவது இதன் நோக்கமாகும்.
2.நொடித்துப்போதல் மற்றும் திவாலாதலுக்கான இந்திய வாரியத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
- சென்னை
- புது தில்லி
- மும்பை
- ஹைதராபாத்
Answer & Explanation
Answer:– புது தில்லி
Explanation:
நொடித்துப்போதல் மற்றும் திவாலாதலுக்கான இந்திய வாரியம் (IBBI) என்பது திவால் நிலை மற்றும் திவால் நிலைக்குறீயீட்டை செயல்படுத்துவதற்கா தலைமை நிறுவனமாகும்.
இதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது. IBBI ஆனது அண்மையில், பணப்புழக்க செயல்முறை தொடர்பான விதி முறைகளை திருத்தியது.
இந்த விதிமுறைகளின்படி, கட்டுப்பாட்டாளர்களுக்கு செலுத்தவேண்டிய கட்டணத்தைக் கடகாளர்களின் குழு நிர்ணயிக்க வேண்டும் என்று அது கோருகிறது.
சில தருணங்களில், ஒரு பணப்புழக்க அலுவலர் ஒரு குறிப்பிட்ட தொகையை உணர்ந்த நிகழ்வுகளும், மற்றொரு பணப்புழக்க அலுவலர் அதைப்பயனர்களுக்கு விநியோகிக்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளன.
திருத்தஞ்செய்யப்பட்ட விதிமுறைப்படி, ஒரு பணப்புழக்க அலுவலர் எந்தத் தொகையை உணர்ந்தாலும், அகத விநியோகிக்கவில்கல என்றால், அவர் உணர்ந்த தொகைக்கு ஒத்த கட்டணத்திற்கு அவருக்கு உரிமை உண்டு.
3. முடிவெடுத்தலில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்காக சிறப்பு மையம் ஒன்றை அமைக்க தில்லி IIT’உடன் ஒப்பந்தம் செய்துள்ள அமைப்பு எது?
- இந்திய வானூா்தி நிலையங்கள் ஆணையம்
- இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்
- NHPC லிட்
- மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம்
Answer & Explanation
Answer:– இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்
Explanation:
மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாகலைகள் அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான உயர்தர மையம் ஒன்றை நிர்மாணிக்க புது தில்லி இந்திய தொழில்நுட்ப பயிலகத்துடன் (IIT) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
நெடுஞ்சாலைகளுக்கான தரவு அடிப்படையில் முடிவெடுத்தல்மற்றும் மேம்படுத்தப்பட்ட தரவு மேலாண்மை அமைப்பு ஆகியவற்றைக் கையாள இந்த மையம் உதவும்.
நகலிய மாதிரிகளை உருவாக்குதல், தரவு அடிப்படையில் முடிவெடுப்பதற்கான திறன்களை NHAI மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான தரவைச் சேகரித்தல் & திரும்பப் பெறுதல் போன்ற அம்சங்களும் இணைந்து உருவாக்கப்படும்.
4.அண்மைச் செய்திகளில் இடம் பெற்ற, ஜெனோவா சான் ஜார்ஜியோ பாலம் அமைந்துள்ள நாடு எது?
- பிரான்ஸ்
- இத்தாலி
- ஜெர்மெனி
- பிரேசில்
Answer & Explanation
Answer:– இத்தாலி
Explanation:
இத்தாலியின் பெருநகரங்களுள் ஒன்றா ஜெனோவாவில், சான் ஜார்ஜியோ பாலம் திறக்கப்பட்டது.
உலகப்புகழ் பெற்ற கட்டடக் கலைஞர் ரென்சோ பியானோவால் வடிவமைக்கப்பட்ட இப்பாலம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இத்தாலியில், புயல் தாக்கி இடிந்து விழுந்த மொராண்டி பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்டதாகும்.
1,100 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாலத்தை, இத்தாலிய பிரதமர் திறந்துவைத்தார்.
5.தில்லி இராஜ்கோட் அருகே, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதிய கலந்தாடல் அனுபவ மையத்தின் பெயரென்ன?
- ராஷ்ட்ரிய ஸ்வச்தா கேந்திரா
- SBM கேந்திரா
- ஸ்வச்சதா கிரந்தி
- SBM இல்லம்
Answer & Explanation
Answer:– ராஷ்ட்ரிய ஸ்வச்தா கேந்திரா
Explanation:
தூய்மையான பாரதம் திட்டத்தில் அனுபவங்களடி கலந்தாடல் செய்யும் மையமான ராஷ்ட்ரிய ஸ்வச்தா கேந்திராவை புது தில்லி இராஜ்கோட்டில் காந்தி ஸ்மிருதி & தரிசன சமிதியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் வகையில் இதற்கான திட்டத்தை 2017 ஏப்ரல் 10 அன்று அவர் அறிவித்தார்.
காந்திஜியின் சம்பரண் சத்யாகிரகத்தின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் போது இது குறித்து அவர் அறிவிப்பு வெளியிட்டார்.
RSK எனப்படும் இந்த மையத்தில், தூய்மையான பாரதம் திட்டத்தின் பல்வேறு நிலைகள் பற்றிய தகவல்கள் உள்ளன.
6. “உயர்கல்வியில் மாற்றங்களுக்கான சீர்திருத்தங்கள்” குறித்த மாநாட்டை எந்த நிறுவனத்துடன் இணைந்து கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது?
- பல்கலைக் கழக மானியக் குழு (UGC)
- அகில இந்திய தாெழில் நுட்பக் கல்விக் குழு (AICTE)
- தேசிய பாிசாேதனை முகமை
- NITI ஆயாேக்
Answer & Explanation
Answer:– பல்கலைக் கழக மானியக் குழு (UGC)
Explanation:
தேசிய கல்விக்கொள்கையின் கீழ், “உயர்கல்வியில் மாற்றங்களுக்கான சீர்திருத்தங்கள்” குறித்த மாநாட்டை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், பல்கலைக்கழக மானியக்குழுவும் (UGC) இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி, காணொளி வழியில் தொடக்கவுரை ஆற்றினார். தேசிய கல்விக் கொள்கையின் கீழ் இடம் பெற்றுள்ள பல்வேறு முக்கியமா அம்சங்கள் குறித்து, பல தொடர்கள் இந்த மாநாட்டில் இடம் பெற்றன.
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ராகேஷ் பொக்ரியாலும் இந்த மாநாட்டில் பங்கேற்றார்.
7.இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக (CAG) நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
- G.C. முா்மு
- வினாேத் ராய்
- N,K, சிங்
- இரஞ்சன் காேகாேய்
Answer & Explanation
Answer:– G.C. முா்மு
Explanation:
கிரிஷ் சந்திர முர்மு, இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக (Comptroller and Auditor General of India – CAG) பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்தப் பதவியிலிருந்து விலகிய ராஜீவ் மெஹ்ரிசியின் இடத்தில் G.C. முர்மு பொறுப்பேற்றார். G.C. முர்மு, இதற்கு முன் ஜம்மு மற்றும் காஷ்மீரின் துணைநிலை ஆளுநராகப் பணிபுரிந்தார்.
மனோஜ் சின்ஹா, தற்போது ஜம்மு மற்றும் காஷ்மீரின் துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ளார்.
8.தனது சொந்த மின்சார வாகனக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச அரசு எது?
- ஆந்திர பிரதேசம்
- புது தில்லி
- கா்நாடகம்
- தெலுங்கானா
Answer & Explanation
Answer:– புது தில்லி
Explanation:
பொருளாதரத்தை உயர்த்துவதையும் மாசின் அளவைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு, தில்லி அரசு தனக்கென ஒரு சொந்த மின்சார வாகனக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இரு சக்கர வாகனங்கள் மற்றும் தானிகளுக்கு ரூ.30000 மற்றும் மகிழுந்துகளுக்கு ரூ.150,000 என்கிற வரம்பில் மின்னாற்றலில் இயங்கும் வாகனங்ககள் வாங்குவதற்கான நிதி சலுகைகளையும் தில்லி அரசு அறிமுகப்படுத்தவுள்ளது
9. கிராமப்புறக்கடன் & மலிவு விலையில்லா வீட்டுவசதிகளை ஊக்கப்படுத்துவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) NABARD மற்றும் தேசிய வீட்டுவசதி வங்கிக்கு வழங்கிய தொகை எவ்வளவு?
- ரூ.10,000 கோடி
- ரூ.20,000 கோடி
- ரூ.30,000 கோடி
- ரூ.40,000 கோடி
Answer & Explanation
Answer:– ரூ.10,000 கோடி
Explanation:
இந்திய ரிசர்வ் வங்கியானது ரூ.10,000 கோடி கடனுதவியை தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD) மற்றும் தேசிய வீட்டுவசதி வங்கி ஆகியவற்றிற்கு வழங்கியுள்ளது.
தலொ ரூ.5 ஆயிரம் கோடி நிதியை இவ்விரு வங்கிகளுக்கும் கொள்கை அடிப்படையிலான கடன் விகிதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.
இது, நாடு முழுவதும், கிராமப்புறக்கடன் & மலிவு விலையில்லா வீட்டுவசதிககள ஊக்கப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும்.
இவ்வசதியின் கீழ், சிறு NBFC மற்றும் நுண்கடன் வழங்குநர் ஆகியோர் ஏழைகளுக்கு சிறுகடன்களை வழங்குவோர்கள்.
முன்னதாக, NABARD’க்கு மறுநிதியளிப்பு உதவியாக ரூ,35,000 கோடியும், NHB’க்கு மறுநிதியளிப்பு உதவியாக ரூ,10,000 கோடியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
10.வணிக நம்பிக்கக குறியீட்டை (Business Confidence Index) வெளியிடுகிற இந்திய அமைப்பு எது?
- தேசிய பயன்பாட்டு பாெருளாதார ஆராய்ச்சிக் கழகம்
- NITI ஆயாேக்
- தேசிய வளா்ச்சிக் கழகம்
- காெள்கை ஆராய்ச்சி மையம்
Answer & Explanation
Answer:– தேசிய பயன்பாட்டு பாெருளாதார ஆராய்ச்சிக் கழகம்
Explanation:
தேசிய பயன்பாட்டு பாெருளாதார ஆராய்ச்சிக் கழகமான (NCAER) வணிக நம்பிக்கை குறியீடு மற்றும் வணிக எதிர்பார்ப்பு ஆய்வு ஆகியவற்றை வெளியிடுகிறது.
இதன் அண்மைய ஆய்வின்படி, வணிக நம்பிக்கைக் குறியீடானது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 62% குறைந்துள்ளது.
இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் பதிவு செய்யப்பட்ட குறியீடு, கடந்த 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவாகும் மிகக் குறைந்த குறியீடாகும்.
இந்தக் காலக்கட்டத்தில், வட இந்தியாவுக்கான வணிக நம்பிக்கை குறியீடு 25.1% என அதிகரித்தும் கிழக்கு மற்றும் மேற்கிந்தியாவுக்கான வணிக நம்பிக்கை குறியீடு முறையே 89.3%
மற்றும் 68.1% என குறைந்தும் உள்ளது.
More TNPSC Current Affairs
Related