TNPSC Current Affairs Question and Answer in Tamil 12th August 2020

Current Affairs in Tamil 12th August 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 12th August 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 12th August 2020

1.பிரதமரின் சுவநிதி திட்டத்தை செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது?

  1. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
  2. உள்துறை அமைச்சகம்
  3. நிதி அமைச்சகம்
  4. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
Answer & Explanation
Answer:– வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

Explanation:

பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

வீதியோர விற்பனையோளர்கள் அவர்களின் வாழ்வோதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது.

அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துதரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தொடங்கியது.

அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின் மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது

2. இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியானது (EXIM வங்கி) எந்த நாட்டின் ஆற்றல் விநியோகத் தரத்தை மேம்படுத்துவதற்காக, $250 மில்லியன் டாலர் மதிப்புள்ள கடன் தவணையை வழங்கியுள்ளது?

  1. மொசாம்பிக்
  2. மாலத்தீவுகள்
  3. மலேசியா
  4. மொரீஷியஸ்
Answer & Explanation
Answer:– மொசாம்பிக்

Explanation:

இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியானது (EXIM வங்கி) மொசாம்பிக் நாட்டில் ஆற்றல் விநியோகத் தரத்தை மேம்படுத்துவதற்காக $250 மில்லியன் டாலர் மதிப்புள்ள கடன் தேவையை அந்நாட்டிற்கு வழங்கியுள்ளது.

இந்தக் கடன் தவணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், இந்தியா, இதுவரை, $772.44 மில்லியன் டாலர் மதிப்புள்ள 14 கடன் தவணைகளை மொசாம்பிக் நாட்டிற்கு வழங்கியுள்ளது.

$25.98 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய மொத்தம் 264 கடன் தவனைகளை, மொத்தம் 62 நாடுகளுக்கு இந்தியா வழங்கவுள்ளது.

3.100 மில்லியன் பேருக்கான COVID-19 தடுப்பூசிகளை தயாரிப்பதற்காக GAVI மற்றும் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் கூட்டிணைந்துள்ள இந்திய மருந்துத் தொழில் நிறுவனம் எது?

  1. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா
  2. சன் பார்மா
  3. CADILA
  4. அபெக்ஸ் நிறுவனம்
Answer & Explanation
Answer:– சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா

Explanation:

புனேவில் அமைந்துள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, 100 மில்லியன் மக்களுக்கான COVID-19 தடுப்பூசிகளை விரைவாக உற்பத்தி செய்வதற்காக பன்னாட்டு தடுப்பூசிக் கூட்டணி, GAVI மற்றும் பில் & மெலிண்டோ கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றுடன் கூட்டிணைந்துள்ளது.

இந்தியா மற்றும் பிற குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கோக இத்தடுப்பூசிகள் உருவாக்கப்படும்.

சீரம் நிறுவனம், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராகும். இது, ஆக்ஸ்போர்டு பல்கலையின் COVID-19 தடுப்பூசியை விநியோகிப்பதற்காக, அஸ்ட்ராசெனகாவுடனான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது

4.பன்னாட்டுக் கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) 2021ஆம் ஆண்டு T20 உலகக்கோப்பையை நடத்தவுள்ள நாடு எது?

  1. தென்னாப்பிரிக்கா
  2. இந்தியா
  3. இலங்கை
  4. பாகிஸ்தான்
Answer & Explanation
Answer:– இந்தியா

Explanation:

பன்னாட்டுக் கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) அண்மைய அறிவிப்பின்படி, 2021ஆம் ஆண்டு T20 உலகக் கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா தக்க வைத்துக் கொண்டது.

2022ஆம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்ட நடப்பாண்டு (2020) T20 உலகக்கோப்பை போட்டியை ஆஸ்திரேலியா நடத்தும் என்றும் ICC அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு நியூசிலாந்தில் நடைபெறும் பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியானது, 2022 பிப்ரவரி-மார்ச் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.




5.இந்தியாவை குப்பைகளிலிருந்து விடுவிப்பதற்காக பிரதமர் தொடங்கியுள்ள சிறப்பு பரப்புரையின் பெயர் என்ன?

  1. காந்தகி முக்த் பாரத்
  2. துய்மை இந்தியா
  3. குப்பைகளற்ற இந்தியா
  4. திறந்தவெளி மலங்கழித்தலற்ற இந்தியர
Answer & Explanation
Answer:– காந்தகி முக்த் பாரத்

Explanation:

இந்தியாவை குப்பைகளிலிருந்து விடுவிப்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “காந்தகி முக்த் பாரத்” என்ற பெயரில் ஒரு வார காலம் நீளும் பரப்புரையைத் தொடங்கினார்.

தில்லியின் இராஜ்கோட் அருகே இராஷ்டிரிய ஸ்வச்தா கேந்திராவை திறந்து வைத்தபோது, பிரதமர், இப்பரப்புரையைத் தொடங்கினார்.

இந்தப் பரப்புரையானது, வரும் 2020 ஆகஸ்ட்.15 வரை நடைபெற்றது.

6.பேரளவில் நிலச்சரிவு ஏற்பட்ட இராஜமலை அமைந்துள்ள மாநிலம் எது?

  1. தமிழ்நாடு
  2. கேரளா
  3. கர்நாடகா
  4. மத்திய பிரதேசம்
Answer & Explanation
Answer:– கேரளா

Explanation:

தொடர்மழை காரணமாக, கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இராஜமலை என்ற இடத்தில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.

பலர் காயமடைந்த பேரிடரில், குறைந்தது பதினைந்து பேராவது மரணித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் 50’க்கும் மேற்பட்டோர், நிலச்சரிவில் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகளில், தேசிய பேரிடர் மீட்புப் படையின் பணிக்குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

7. MV வகாஷியோ கப்பல், எரிபொருளை கடலில் சிந்தியதை அடுத்து, ‘சுற்றுச்சூழல் அவசரநிலை’யை அறிவித்துள்ள நாடு எது?

  1. மாலத்தீவுகள்
  2. மொரீஷியஸ்
  3. மலேசியா
  4. இலங்கை
Answer & Explanation
Answer:– மொரீஷியஸ்

Explanation:

ஜப்பானுக்கு சொந்தமா M V வகோஷியோ கப்பல், டன் கணக்கிலான எரிபொருள் மொரீஷியஸ் கடல்புறத்தில் சிந்தியதை அடுத்து, மொரீஷியஸ், ‘சூழல் அவசரநிலை’யை அறிவித்தது.

இந்நிகழ்வுக்குப் பிறகு, “மிகவும் உணர்திறன்” கொண்ட அந்நாட்டின் பகுதிகள் செயற்கைக்கோள் படங்களில் இருண்ட அடுக்காகக் காணப்பட்டதை அடுத்து, மொரீஷியஸின் பிரதம அமைச்சர் பிரவிந்த் ஜகநாத் இம்முடிவை அறிவித்தார்.

அக்கப்பல், கிட்டத்தட்ட 4000 டன் எரிபொருளை ஏற்றிச்சென்றதன் காரணத்தால், விரிசல் ஏற்பட்டு, இந்தப் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளது.

8.எந்த யூனியன் பிரதேசத்துக்கு தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்காக, கடலடி கண்ணாடி இழை வடங்கள் திட்டத்தை இந்தியப் பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்?

  1. ஜம்மு & காஷ்மீர்
  2. அந்தமான் & நிகோபார் தீவுகள்
  3. இலட்சத்தீவுகள்
  4. புதுச்சேரி
Answer & Explanation
Answer:– அந்தமான் & நிகோபார் தீவுகள்

Explanation:

சென்னையையும், போர்ட் பிளேரையும் இணைக்கும் கடலடி கண்ணாடியிழை வடங்கள் திட்டத்தை பிரதமர் மோடி, ஆக.10 அன்று தொடங்கிதவத்தார்.

இந்த வடங்கள் போர்ட் பிளேயரையும், சுவராஜ் தீவு, லிட்டில் அந்தமான், கார் நிகோபார், கமோர்தோ, கிரேட் நிகோபார், லாங் தீவு, ரங்கத் ஆகிய தீவுகளையும் இணைக்கிறது.

இந்தக் கண்ணாடியிதழ் வடங்கள் இணைப்பு விரைவான, நம்பத்தகுந்த அலைபேசி, தரைவழித் தொலைத்தொடர்பு சேவைகளை இந்தியாவின் இதர பகுதிகளைப் போல அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கும் வழங்கும்.

இந்தத் திட்டத்திற்கான அடிக்கல், போர்ட் பிளேரில், கடந்த 2018 டிசம்பர்.30 அன்று பிரதமரால் நாட்டப்பட்டது. சுமார் 2,300 கிலோமீட்டர் தொலைவுக்கு, ரூ.1224 கோடி செலவில், கடலுக்கடியில் நீர்மூழ்கி வடங்கள் பதிக்கப்பட்டுள்ளன

9. “நுகர்வோர் நம்பிக்கை குறியீட்டை” வெளியிடுகிற நிதி நிறுவனம் எது?

  1. இந்திய ரிசா்வ் வங்கி
  2. இந்திய பங்கு & பரிவர்த்தனை வாரியம்
  3. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி
  4. முத்ரர
Answer & Explanation
Answer:– இந்திய ரிசா்வ் வங்கி

Explanation:

இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) “நுகர்வோர் நம்பிக்கை குறியீட்டை” வெளியிட்டு வருகிறது.

இந்த ஆய்வின் ஜூலை 2020 பதிப்பின் முடிவுகளை அவ்வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

COVID-19 தொற்று நோயின் தாக்கங் காரணமாக தில்லி, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பதிமூன்று முதன்மை நகரங்களில், ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோரிடம், தொலைபேசி வாயிலாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

தற்போதைய நிலைமையில், கடந்த ஜூலை மாதத்தில் இந்தக் குறியீடு, 53.8 ஆகக்குறைந்தது. இது, இந்தக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பெறப்பட்ட மிகக்குறைந்த மதிப்பெண் அளவாகும்

10.பன்னாட்டு பழங்குடிகள் நாள் அல்லது உலக பழங்குடியினர் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

  1. ஆகஸ்ட் 9
  2. ஆகஸ்ட் 10
  3. ஆகஸ்ட் 11
  4. ஆகஸ்ட் 12
Answer & Explanation
Answer:– ஆகஸ்ட் 9

Explanation:

பன்னாட்டு பழங்குடிகள் நாள் அல்லது உலக பழங்குடியினர் நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஆக.9 அன்று கொண்டாடப்படுகிறது.

ஐ.நா பொதுச்சபை, கடந்த 1994ஆம் ஆண்டில் இந்நாளை அறிவித்தது. இது, கடந்த 1982ஆம் ஆண்டில், ஜெனீவாவில் நடந்த பழங்குடியினர் குறித்த ஐ.நா. செயற்குழுவின் முதல் கூட்டம் நடந்த நாளைக் குறிக்கிறது.

பழங்குடி மக்களின் உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் இந்நாள் முற்படுகிறது.

More TNPSC Current Affairs



Leave a Comment