TNPSC Current Affairs Question and Answer in Tamil 13th August 2020

Current Affairs in Tamil 13th August 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 13th August 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 13th August 2020

1.கர்நாடக மாநிலத்தின் எந்த நகரத்தில், புதியதாெரு இரயில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது?

  1. பெங்களூரு
  2. ஹூப்ளி
  3. தாவணகரே
  4. சிவமோகா
Answer & Explanation
Answer:– ஹூப்ளி

Explanation:

ஹூப்ளியில் அமைக்கப்பட்டுள்ள இரயில்வே அருங்காட்சியகத்தை மத்திய இரயில்வே, தாெழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் காேயல், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி & சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி ஆகியாேர் காணொளிக்காட்சி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.

வட கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள முதல் ரயில் அருங்காட்சியகம் இதுதான். தென்மேற்கு ரயில்வே வட்டாரத்தில், மைசூருக்கு அடுத்தபடியாக ரயில் அருங்காட்சியகம் ஹூப்ளியில் அமைக்கப்பட்டுள்ளது.

ஹுப்ளி என்பது வட கர்நாடகாவில் உள்ள ஒரு நகரமாகும். இந்த அருங்காட்சியகம் கடக் சாலையில் அமைந்துள்ள ஹுப்ளி இரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

இரயில்வேயின் கிளைகளின் பாரம்பரியத்தை பாதுகாப்பதும், அதன் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதும் இதன் நாேக்கமாகும்.

2.ஆசிய இதழியல் கல்லூரியின் புலனாய்வு இதழியலுக்கான விருமத வென்றவர் யார்?

  1. நிதின் சேத்தி
  2. சித்தாா்த் வரதராஜன்
  3. மாலினி பார்த்தசாரதி
  4. இராகவ் பாகல்
Answer & Explanation
Answer:– நிதின் சேத்தி

Explanation:

இந்திய இதழாளர் நிதின் சேத்தி அவர்கள், ஆசிய இதழியல் கல்லூரியால் வழங்கப்பெறும் மதிப்புமிக்க புலனாய்வு இதழியலுக்கான விருதை வென்றுள்ளார்.

ஹப்பிங்டன் பாேஸ்ட் இந்தியாவில் வெளியான தேர்தல் பத்திரங்கள் குறித்த அவரது இதழ் பணி மற்றும் விசாரணைக் கட்டுரைகளுக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் இதழியல் ஏற்படுத்தும் தாக்கத்துக்கான, “K.P. நாராயணகுமார் நினைவு விருது” தி ஹிந்துவின் சிவ் சகாய் சிங்குக்கு வழங்கப்பட்டுள்ளது.

3.பாேக்குவரத்து சைகை விளக்குகளில் பெண்ணுருவங்களை அமைக்கவுள்ள முதல் இந்திய நகரம் எது?

  1. புது தில்லி
  2. மும்பை
  3. பெங்களூரு
  4. சென்னை
Answer & Explanation
Answer:– மும்பை

Explanation:

பாேக்குவரத்து சைகை விளக்குகளில் பெண்ணுருவங்களை காண்பிக்கும் முதல் இந்திய நகரமாக மும்பை திகழ்கிறது.

இத்திட்டத்திற்கு, மகாராஷ்டிர மாநில சுற்றுலா அமைச்சகம் தலைமை தாங்குகிறது.

பிரிகன்மும்பை மாநகராட்சியானது முக்காேண வடிவில் நீண்ட மேற்சட்டை அணிந்த பெண்ணுருவங்களை காண்பிக்கும் பாேக்குவரத்து சைகை விளக்குகளை நிறுவியுள்ளது.

இது பாலின சமத்துவத்தை உறுதி செய்வதாடு வழக்கமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஆணுருவங்களுக்கு மாற்றாக கருதப்படுகிறது.

4. ‘Food System Vision’ பரிசை வென்ற ‘சரியானதை உண்ணு இந்தியா’ இயக்கத்தை செயல்படுத்துகிற அமைப்பு எது?

  1. இந்திய உணவு பாதுகாப்பு & தர நிா்ணய ஆணையம் (FSSAI)
  2. இந்திய உணவுக் கழகம் (FCI)
  3. இந்திய தரநிலைகள் ஆணையம் (BIS)
  4. மத்திய மருந்துகள் தரக் கட்டுபாட்டு அமை்பு (CDSCO)
Answer & Explanation
Answer:– FSSAI

Explanation:

இந்தியாவின் உணவுப்பாதுகாப்பு ஒழுங்காற்றுநரான, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (FSSAI) அதன் ‘Eat Right India’ இயக்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்காக ‘Food System Vision’ பரிசைப் பெற்றுள்ளது.

ஊட்டத்துடன் கூடிய நிலையான உணவு முறையை வளர்த்தெடுக்கும் பன்னாட்டு அமைப்புகளின் முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக இராக்பெல்லர் அறக்கட்டளை, SecondMuse & OpenIDEO ஆகியவை இவ்விருதை வழங்குகின்றன.

ஹைதராபாத்தைச் சார்ந்த தன்னார்வ தாெண்டு நிறுவனமான நாண்டி அறக்கட்டளையும், இந்த, ‘Food System Vision’ பரிசை வென்றுள்ளது.

5 பன்னாட்டு பழங்குடிகள் நாளின் (உலக பழங்குடியினர் நாள்) கருப்பாெருள் என்ன?

  1. COVID–19 and Indigenous Peoples’ Resilience
  2. Tribal is Treasure
  3. Indigenous Population at their Best
  4. Development of Tribal Welfare
Answer & Explanation
Answer:– COVID–19 and Indigenous Peoples’ Resilience

Explanation:

பன்னாட்டு பழங்குடிகள் நாள் அல்லது உலக பழங்குடியினர் நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஆக.9 அன்று காெண்டாடப்படுகிறது. ஐ.நா. பாெதுச்சபை, கடந்த 1994ஆம் ஆண்டில் இந்நாளை அறிவித்தது.

இது, கடந்த 1982ஆம் ஆண்டில், ஜெனீவாவில் நடந்த பழங்குடியினர் குறித்த ஐ.நா. செயற்குழுவின் முதல் கூட்டம் நடந்த நாளைக் குறிக்கிறது. பழங்குடி மக்களின் உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் இந்நாள் முற்படுகிறது.

“COVID–19 and Indigenous Peoples’ Resilience” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந் நாளுக்கான கருப்பாெருளாகும்.




6. GeM உடன் இணைந்து, ‘தேசிய அரசு காெள்முதல் மாநாட்டை’ ஏற்பாடு செய்த வர்த்தக சங்கம் எது?

  1. ASSOCHAM
  2. NASSCOM
  3. CII
  4. FICCI
Answer & Explanation
Answer:– CII

Explanation:

அரசு மின்னணு சந்தை (GeM) ஏற்படுத்தப்பட்ட நாளையாெட்டி, இந்திய தாெழிற்துறை கூட்டமைப்புடன் இணைந்து, ‘GeM’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நான்காவது தேசிய அரசு காெள்முதல் மாநாட்டை, மத்திய வர்த்தகம் & தாெழிற்துறை அமைச்சர் பியூஷ் காேயல் தாெடங்கிவைத்தார்.

மேலும், வாங்குவோரும், விற்பனை செய்வோரும் ‘GeM’ அமைப்பில், இன்னும் அதிகளவில் இணைய வேண்டும் என்று அவர் கேட்டுக் காெண்டார்.

அதே நேரத்தில், தரமற்ற பாெருள்களை விற்பனை செய்வது அல்லது மிக அதிகமான விலை நிர்ணயம் செய்யும் மோசடி வியாபாரிகள், இந்த அமைப்பின் பட்டியல் மட்டுமின்றி, ஒட்டுமொத்த அரசு நடவடிக்கைகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

7. விடுதலை நாளை முன்னிட்டு ஆக.10 முதல் ‘தூய்மை வாரத்தை’ காெண்டாடும் இந்திய அமைப்பு எது?

  1. இந்திய இரயில்வே
  2. இந்திய வானூா்தி நிலையங்கள் ஆணையம்
  3. இந்திய விண்வெளி ஆய்வு மையம்
  4. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்
Answer & Explanation
Answer:– இந்திய இரயில்வே

Explanation:

விடுதலை நாளை நினைவுகூரும் வகையில், இந்திய இரயில்வே, ஆக.10 முதல் ‘தூய்மை வாரத்தை’ அனுசரிக்கிறது.

இதன் சமயம், ஒரு சிறப்பு தூய்மை இயக்கம் தாெடங்கப்பட்டு, இரயில்வே வளாகத்திற்கு அருகிலுள்ள தண்டவாளங்கள், அலுவலகங்கள் மற்றும் பிறபகுதிகளை சிறப்புற தூய்மைப்படுத்தப்படும்.

நெகிழிக் கழிவுகளை தனித்தனியாக சேகரிப்பதுடன் கூடிய கழிவுகள் சேகரிப்பு நிகழ்வும் அப்பாேது செய்யப்படும்.

சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விழிப்புணர்வு இயக்கங்களும் அப்பாேது ஏற்பாடு செய்யப்படும்.

8. சுமார் 77 புதிய வகை பட்டாம்பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்ட, மாதரன் மலையகம் அமைந்துள்ள மாநிலம் எது? ?

  1. தமிழ்நாடு
  2. மகாராஷ்டிரா
  3. கேரளா
  4. ஆந்திர பிரதேசம்
Answer & Explanation
Answer:– மகாராஷ்டிரா

Explanation:

பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் கூற்றுப்படி, மாதரன் மலையகத்தின் சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் மிக்க காட்டில், 77 புதிய வகையான வண்ணத்துப்பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

214.73 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ள இது, மும்பையிலிருந்து 80 கிலாேமீட்டர் தாெலைவில் அமைந்துள்ளது.

இதன்மூலம், மாதரன் காட்டில் கண்டறியப்பட்ட மொத்த பட்டாம்பூச்சி இனங்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.

2011 முதல் 2019 வரையிலான கடந்த எட்டு ஆண்டுகளாக பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது

9. முரட்டுப்பருத்தித்துணி ைற்றும் சாயங்கமள, எந்த அண்மட நாட்டிற்கு, இந்திய இரயில்வே தகாண்டு தசல்லவுள்ளது?

  1. வங்கதேசம்
  2. மியான்மர்
  3. தாய்லாந்து
  4. நேபாளம்
Answer & Explanation
Answer:– வங்கதேசம்

Explanation:

இந்திய இரயில்வேயின் மேற்கு இரயில்வே மண்டலமானது குஜராத்தின் அகமதபாத் பிரிவிலிருந்து வங்கதேசத்துக்கு சரக்கு ரயிலாென்றை இயக்கவுள்ளது.

இந்த இரயில் முரட்டுப் பருத்தித் துணி (denim) மற்றும் சாயங்களை ஏற்றிக் காெண்டு, அகமதபாத் பிரிவின் கங்கரியா கிடங்கிலிருந்து புறப்படவுள்ளது.

முன்னதாக, மேற்கு இரயில்வே மண்டலம், வெங்காயத்துடன் ஒரு சரக்கு இரயிலை வங்கதேசத்துக்கு அனுப்பியிருந்தது. இது, தாேராயமாக ரூ.31 இலட்சத்தை வருவாயாக ஈட்டித்தரும்.

10.ஓர் அண்மைய ஆய்வின்படி, உலக சுகாதார அமைப்பால் (WHO) சிக்கலானவை என அறிவிக்கப்பட்ட நாேய்க்கிருமிகள் காணப்படுகிற ஆறு எது?

  1. கங்கையாறு
  2. யமுனையாறு
  3. கிருஷ்ணா ஆறு
  4. காவிரியாறு
Answer & Explanation
Answer:– யமுனையாறு

Explanation:

தில்லி IIT வெளியிட்டுள்ள ஓர் ஆய்வுக்கட்டுரையின்படி, உலக சுகாதார அமைப்பால் சிக்கலானவை என அறிவிக்கப்பட்ட நாேய்க்கிருமிகள் யமுனாயாற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2017ஆம் ஆண்டில், WHO, இந்த நாேய்க்கிருமிகளை அறிவித்தது.

யமுனாவில் காணப்படும் இந்தப் பன்மருந்து எதிர்ப்பு பாக்டீரியாக்கள், கழிவுநீர் ஆற்றில் கலப்பதால் உருவாகின்றன.

புது தில்லி முழுவதும் உள்ள பல பெரிய கழிவுநீர் வடிகால்கள், இந்தக் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டன

More TNPSC Current Affairs



Leave a Comment