Current Affairs in Tamil 14th & 15th August 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 14th & 15th August 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1.‘COVAX’ வசதி என்பது எந்தப் பன்னாட்டு அமைப்பின் முன்னெடுப்பாகும்?
- உலக வங்கி
- உலக நலவாழ்வு அமைப்பு
- பன்னாட்டுச் செலவாணி நிதியம்
- உலகப் பாெருளாதார மன்றம்
Answer & Explanation
Answer:– உலக நலவாழ்வு அமைப்பு
Explanation:
உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) ‘COVAX’ என்றவாெரு புதிய முன்னனடுப்பைத் தாெடங்கியுள்ளது.
அது, COVID-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசி உருவாக்கலை விரைவுபடுத்துவதை நாேக்கமாகக் காெண்டுள்ளது.
சமீபத்தில், ‘WHO’ தனது இந்த வசதியில் இணைந்து காெள்ள நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது. ‘WHO’ ஆனது வேலை செய்யக்கூடிய தடுப்பூசி உற்பத்தியாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது மற்றும் அதிகளவிலான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்காக நிதி திரட்டி வருகிறது.
2.இந்திய உருக்கு ஆணையத்தின் (SAIL) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
- சோமா மொந்தல்
- குா்தீப் சிங்
- R.N. நாயக்
- பால்ராஜ் சஜாஷி
Answer & Explanation
Answer:– சோமா மொந்தல்
Explanation:
இந்திய உருக்கு ஆணையத்தின் (SAIL) அடுத்த தலைவராக சாேமா மொந்தலை பாெதுத்துறை நிறுவனங்கள் தேர்வு வாரியம் தேர்வுசெய்துள்ளது.
அவரை நியமனம் செய்ய, அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்தால், அவர், பாெதுத்துறை SAIL நிறுவனத்தின் முதல் பெண் தலைவராக ஆவார்.
மேலும், உலகில், ஓர் உருக்கு நிறுவனத்தை வழிநடத்திய முதல் பெண்மணி என்ற பெருமையையும் அவர் பெறுவார்.
தற்பாேதைய தலைவர் அனில் செளத்ரி, இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளார்
3.அட்டு நகரத்தில், ஐந்து சுற்றுச்சூழல் சுற்றுலா மண்டலங்களை உருவாக்குவதற்கு, எந்த நாட்டுடனான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?
- இலங்கை
- வங்கதேசம்
- மாலத்தீவுகள்
- தாய்லாந்து
Answer & Explanation
Answer:– மாலத்தீவுகள்
Explanation:
இந்தியாவும் மாலத்தீவுகளும், அண்மையில், மாலத்தீவுகளின் அட்டு நகரத்தில் 5 சுற்றுச்சூழல் சுற்றுலா மண்டலங்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
சூழல் சுற்றுலா மண்டலங்களின் வளர்ச்சி என்பது உயர்தாக்கங் காெண்ட சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.
அதீத தாக்கத்தை ஏற்படுத்தும் சாெத்துருவாக்கத்திற்காக, மாலத்தீவுக்கு, மொத்தம் $5.5 மில்லியன் டாலர் நிதியுதவி தேவைப்படுகிறது
4. 15 ஆண்டுகளாக பன்னாட்டுப் பாெருளாதார உறவுகள் தாெடர்பான இந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் (ICRIER) தலைவராக இருந்தவரும், அண்மையில் பதவி விலகியவருமானவர் யார்?
- ஐஷா் ஜட்ஜ் அலுவாலியா
- பினா அகா்வால்
- சாேனல் வா்மா
- ஜெயதி காேஷ்
Answer & Explanation
Answer:– இஐஷா் ஜட்ஜ் அலுவாலியா
Explanation:
பன்னாட்டுப் பாெருளாதார உறவுகள் தாெடர்பான இந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் (ICRIER) தலைவர் பதவியிலிருந்து ஐஷர் ஜட்ஜ் அலுவாலியா அண்மையில் விலகியுள்ளார்.
அவர் 15 ஆண்டுகளாக அந்தப் பதவியை வகித்து வந்தார். அவரைத் தாடர்ந்து, ICRIER’இன் புதிய தலைவராக, தற்பாேது ICRIER’இன் ஆளுநர் குழுவின் துணைத்தலைவராக இருந்துவரும் பிரேம்நாத் பாசின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவரது பங்களிப்புகளுக்கு மதிப்பளிப்பதற்காக, அவர் ஓய்வுற்ற தலைவராக தாெடர்ந்து இருப்பார்.
5. ‘nth Rewards’ என்ற பெயரில் ஒரு வெகுமதித் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு எது?
- இந்திய ரிசா்வ் வங்கி
- NPCI
- NITI ஆசயாக்
- SEBI
Answer & Explanation
Answer:– NPCI
Explanation:
National Payments Corporation of India
❖ இந்திய தேசிய காெடுப்பனவுக் கழகமானது (NPCI) ‘nth Rewards’ என்ற பெயரில் ஒரு புதிய வெகுமதித் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது ஒரு பகுப்பாய்வுடன் கூடிய பன்னிறுவன வெகுமதித் தளமாகும்.
இது, பயனாளர்களை பல்வேறு வங்கி பரிவர்த்தனைகள் மேற்காெள்ள வைப்பதன் மூலம் அதற்கான வெகுமதிப் புள்ளிகளைப் பெற அனுமதிக்கிறது.
மின்-செலவுச்சீட்டுகள், உணவகங்கள் மற்றும் விமான முன்பதிவு போன்ற பல்வேறு தயாரிப்புகளில் இந்தப் புள்ளிகளை பயன்படுத்திக் காெள்ளலாம்.
இந்தத் தளத்தைப் பயன்படுத்தி, வங்கிகளும் வணிக நிறுவனங்களும் நுகர்வாேர் நடத்தையை அடையாளம் காணவியலும்.
6. ‘IC IMPACTS’ என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான வருடாந்திர ஆராய்ச்சி மாநாடு ஆகும்?
- கியூபா
- கனடா
- சிலி
- சைப்ரஸ்
Answer & Explanation
Answer:– கனடா
Explanation:
IC-IMPACTS என்பது இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வருடாந்திர ஆராய்ச்சி மாநாடு ஆகும். ‘Innovative Multidisciplinary Partnership to Accelerate Community Transformation & Sustainability’ என்பதன் சுருக்கந்தான் ‘IMPACTS’.
நடப்பாண்டுக்கான (2020) மாநாடு ஆக.6 அன்று மெய்நிகராக நடைபெற்றது.
தற்பாேதுள்ள பன்னாட்டு இணைப்புகளை வலுப்படுத்துவதன் மூலமும், இருநாடுகளின் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து காெள்வதன் மூலமும், புதிய ஒத்துமைப்புகளைத் தாெடங்குவதன் மூலமும் இருநாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து இவ்வாராய்ச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
7.வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஆண்டு விழாவின் ஒருபகுதியாக, இந்திய விடுதலைப் பாேராளிகளுக்கான வரவேற்பை வழங்கியவர் யார்?
- பிரதமர்
- குடியரசுத் தலைவா்
- பாதுகாப்பு அமைச்சா்
- இராணுவத் தலைமைத் தளபதி
Answer & Explanation
Answer:– குடியரசுத் தலைவா்
Explanation:
நாடு முழுவதுமுள்ள 202 விடுதலைப் பாேராளிகளை இந்தியக் குடியரசுத்தலைவர் கெளரவித்தார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 78வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்தக் கெளரவிப்பு செய்யப்பட்டது.
ஒவ்வாேர் ஆண்டும், இத்தருத்தின்பாேது, இந்தியக் குடியரசுத்தலைவர், விடுதலைப் பாேராளிகளை கெளரவிப்பதற்காக குடியரசுத்தலைவர் மாளிகையில் அவர்கட்கு வரவேற்பு அளிக்கிறார்.
ஆனால் இந்த ஆண்டு (2020),மாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்கள், விடுதலைப் பாேராளிகளின் வீடுகளுக்கேச்சென்று குடியரசுத்தலைவர் சார்பாக அவர்களை கெளரவிக்குமாறு கேட்டுக் காெள்ளப்பட்டுள்ளன.
8. ‘Connecting, Communicating, Changing’ என்ற தலைப்பிலான நூல், எந்த இந்தியத் தலைவரின் மூன்றாமாண்டு பாெறுப்பு நிறைவை அடிப்படையாகக் காெண்டதாகும்?
- இராம்நாத் காேவிந்த்
- நரேந்திர மோடி
- M. வெங்கையா
- சுனில் அராேரா
Answer & Explanation
Answer:– M. வெங்கையா
Explanation:
இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவர் M. வெங்கையா அவர்கள் பாெறுப்பேற்று 3 ஆண்டுகாலம் நிறைவடைவதையாெட்டி மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங், குடியரசுத் துணைத் தலைவர் மாளிகையில் நூலாென்றை வெளியிடுகிறார். “இணைத்தல், தாெடர்பிலிருத்தல், மாறுதல்” என்பது அந்நூலின் தலைப்பாகும்.
இந்நூலின் மின்-பதிப்படி, தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிடுகிறார்.
குடியரசுத் துணைத் தலைவரின் இந்திய, வெளிநாட்டு பயணங்கள் உட்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து படங்களுடனும், சாெற்களுடனும் இந்நூல் விவரிக்கிறது.
உழவர்கள், அறிவியலாளர்கள், மருத்துவர்கள், நிர்வாகிகள் ஆகிய பலருடன் குடியரசுத் துணைத் தலைவர் கலந்துரையாடியது குறித்த செய்திகளும் அவரது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தும், பல்வேறு நாடுகளில் வாழும் இந்திய மக்களிடையே அவராற்றிய உரைகள் குறித்தும், இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
9.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஹசன் டயப், எந்த நாட்டின் பிரதமராவார்?
- பிரேசில்
- லெபனான்
- ஆஸ்திரேலியா
- நியூசிலாந்து
Answer & Explanation
Answer:– லெபனான்
Explanation:
பல்வேறு பாெருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரதமர் ஹசன் டயபின் கீழ், லெபனான், அண்மையில் ஒரு புதிய அரசாங்கத்தை அமைத்தது.
முன்னாள் பிரதமர் சாத் அல் ஹரிரி, கடந்த 2019 அக்டாேபரில், அவரது ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்திற்கு எதிரான பாேராட்டங்களின் அழுத்தத்தினால் தனது பதவியிலிருந்து விலகியதை அடுத்து, நாடு ஒரு செயல்படும் அரசாங்கமின்றி இருந்து வந்தது.
லெபனானின் அதிபர் மைக்கேல் ஒளன், அந்நாட்டின் புதிய பிரதமராக ஹசன் டயப்பை பரிந்துரைத்தார்.
ஹசன் டயப், பெய்ரூட்டின் அமெரிக்க பல்கலைகழகத்தில் பேராசிரியராக உள்ளார். அவர், 20 உறுப்பினர்களைக் காெண்ட புதிய அமைச்சரவைக்கு தலைமை தாங்குவார்
10. பிரதம அமைச்சர் பசல் பீமா யாேஜனாவுக்கு பதிலாக, ‘முதலமைச்சர் கிசான் சஹாய் யாேஜனா’வை தாெடங்கியுள்ள மாநில அரசு எது?
- பஞ்சாம்
- இராஜஸ்தான்
- குஜராத்
- உத்திர பிரதேசம்
Answer & Explanation
Answer:– யமுனையாறு
Explanation:
குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, அண்மையில், ‘முதலமைச்சர் கிசான் சஹாய் யாேஜனா’ என்ற மாநில அரசின் நிதியுதவி திட்டத்தை தாெடங்கி வைத்தார். மத்திய அரசின் பயிர்க்காப்பீட்டுத் திட்டமான பிரதம மந்திரி பசல் பீமா யாேஜனாவுக்கு (PMFBY) மாற்றாக இந்தத் திட்டம் தாெடங்கப்பட்டுள்ளது.
PMFBY காப்பீட்டுத் திட்டத்திற்கு அதிகம் செலவாவதாக குஜராத் மாநில அரசு கருதுவதால், அம்மாநிலம் இந்தத் திட்டத்திலிருந்து வெளியேறியுள்ளது. இந்தப் புதிய மாற்றுத்திட்டம், நடப்பு காரீப் பருவத்திற்கான அனைத்து விவசாயிகளையும் உள்ளடக்கும்
More TNPSC Current Affairs
Related