Current Affairs in Tamil 16th & 17th August 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 16th & 17th August 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. 1998ஆம் ஆண்டில், “விசாரணை கமிஷன்” என்ற புதினத்திற்காக, தமிழுக்கான சாகித்திய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் பெயரென்ன?
- அசோகமித்திரன்
- ஜெயகாந்தன்
- ஜெயமோகன்
- சா.காந்தசாமி
Answer & Explanation
Answer:– சா.காந்தசாமி
Explanation:
1998ஆம் ஆண்டில், “விசாரணை கமிஷன்” என்ற புதினத்திற்காக, தமிழுக்கான சாகித்திய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் சா.காந்தசாமி (80) அண்மையில் காலமானார்.
2. ‘இந்திரா வான் மிதன் யோஜனா’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
- பஞ்சாப்
- சத்தீஸ்கா்
- இராஜஸ்தான்
- சிக்கிம்
Answer & Explanation
Answer:– சத்தீஸ்கர்
Explanation:
சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல், ‘இந்திரா வான் மிதன் யோஜனா’ என்ற புதியததாெரு திட்டத்தை தாெடங்குவதாக அறிவித்துள்ளார்.
உலக பழங்குடியினர் நாளை முன்னிட்டு இந்தத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, மாநிலத்தில் உள்ள பழங்குடிகளை தன்னம்பிக்கை காெள்ள வைப்பதை நாேக்கமாகக் காெண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், மாநிலத்தின் 10,000 சிற்றூர்களில், இளையோர் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அக்குழுக்கள் வழியாக அனைத்து வன அடிப்படையிலான பாெருளாதார நடவடிக்கைகளும் மேற்காெள்ளப்படும்.
3. ‘தூய்மை இந்தியா இயக்க அகாதமி’ திறக்கப்பட்ட நகரம் எது?
- மும்பை
- புது தில்லி
- லக்னனா
- குருகிராம்
Answer & Explanation
Answer:– புது தில்லி
Explanation:
மத்தி ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ‘தூய்மை இந்தியா இயக்க அகாதமி’யை தாெடக்கி வைத்தார்.
‘காந்தகி முக்த் பாரத்’ என்ற ஒரு வார கால இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்நிகழ்வு நடைபெற்றது.
கட்டணமில்லாத் தாெலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்து இந்த SBM அகாதமியை அமைச்சர் தாெடக்கி வைத்தார்.
இது, ODF பிளஸில், IVR அடிப்படையிலான ஓர் இலவச அலைபேசி இணைய வழி கற்றல் பாடமாகும். ODF பிளஸ் என்பது தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் உள்ள ODF திட்டத்தின் ஓர் துணைத்திட்டம் ஆகும்.
4. எச்சட்டத்தைக் குறிப்பிட்டு, மகள்களுக்கும் சாெத்தில் சமவுரிமை உண்டென இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது?
- ஹிந்து திருமணச் சட்டம், 1955
- ஹிந்து வாாிசுாிமைச் (திருத்தம்) சட்டம், 2005
- ஹிந்து வாாிசுச் சட்டம், 1955
- ஹிந்து பங்குாிமை அமைப்புச் சாெத்துச் சட்டம், 2005
Answer & Explanation
Answer:– ஹிந்து வாாிசுாிமைச் (திருத்தம்) சட்டம், 2005
Explanation:
மகள்களின் சமத்துவ உரிமையை பறிக்க முடியாது என்றும், ஹிந்து வாரிசுரிமைச் (திருத்தம்) சட்டம், 2005’க்கு முன்னர் தந்தத இறந்திருப்பினும், அவர்களுக்கு ஹிந்து கூட்டுக்குடும்பச் சாெத்தில் சமமான உரிமைகள் உண்டு என்றும் இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மகள்களுக்கு, மகன்கள் காெண்டுள்ள உரிமைகள் மற்றும் பாெறுப்புகளுடன் அவர்களின் மூதாதையர் சாெத்துக்கள் மீதான உரிமையும் உண்டு என இந்தத் தீர்ப்பு விளக்குகிறது. ‘பங்காளி’ என்பது பிறப்பால் பெற்றாேர் சாெத்தில் சட்டப்பூர்வ உரிமையைப் பெறும் ஒரு நபரைக் குறிக்கிறது.
5. ‘இத்னா ஆசான் ஹை’ என்ற பெயரில் விற்பனையாளரால் நடத்தப்படும் பரப்புரையை தாெடங்கியுள்ள மின்னணு-வணிகத்தளம் எது?
- அமேசான்
- பிளிப்காா்ட்
- ஸ்னாப்டீல்
- மிந்த்ரா
Answer & Explanation
Answer:– அமேசான்
Explanation:
முன்னணி மின்னணு-வணிகத் தளமான அமேசான் இந்தியா, அண்மையில், விற்பனையாளரால் நடத்தப்படும் தனது புதிய‘இத்னா ஆசான் ஹை’ என்ற பரப்புரை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அமேசான் டிஜிட்டல் தளத்தில் ஒரு விற்பனையாளராக சேருவதற்கான எளிய நடைமுறை குறித்து அந்தத் தளத்தில் இல்லாத விற்பனையாளர்களுடன் தாெடர்பு காெள்ள இந்தப் பரப்புரை முற்படுகிறது.
டிஜிட்டல் வர்த்தகச்சூழல் அமைப்பில் இணைவது குறித்து மில்லியன் கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தாெழில் நிறுவனங்களை சென்றடைவதை இது நாேக்கமாகக் காெண்டுள்ளது.
6. பார்ச்சூன் குளாேபல் 500 பட்டியலில், உலகின் சிறந்த நூறு நிறுவனங்களுள் ஒன்றாக தெரிவான இந்தி அமைப்பு எது?
- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
- HDFC
- பாரத வங்கி
- அதானி துறைமுகங்கள்
Answer & Explanation
Answer:– ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
Explanation:
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்ச்சூன் குளாேபல் 500 பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி உலகின் சிறந்த 100 நிறுவனங்களுள் ஒன்றாக தெரிவாகியுள்ளது.
அண்மையில், பார்ச்சூன் வெளியிட்ட நடப்பாண்டு (2020) தரவரிசைப்படி, ரிலையன்ஸ், உலகளவில் 96ஆவது இடத்தில் உள்ளது.
பார்ச்சூன் குளாேபல் 500 பட்டியலில் எந்தவாெரு இந்திய நிறுவனமும் இதுவரை இந்த அளவிற்கான மிகவுயர்ந்த தரநிலைக்குச் சென்றதில்லை.
இந்திய எண்ணெய் நிறுவனம் (IOC) 151ஆவது இடத்திலும், எண்ணெய் & இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC) 190ஆவது இடத்திலும், பாரத வங்கி (SBI) 221ஆவது இடத்திலும் உள்ளது.
7. ‘கட்டடக்கலை கல்வி விதிமுறைகளின் குறைந்தபட்ச தரநிலைகளை’ வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?
- கலாச்சார அமைச்சகம்
- சுற்றுலா அமைச்சகம்
- கல்வி அமைச்சகம்
- வெளியுறவு அமைச்சகம்
Answer & Explanation
Answer:– கல்வி அமைச்சகம்
Explanation:
மத்திய கல்வி அமைச்சகத்தால் செய்யப்படும் பாெருத்தமான கல்விச் சீர்திருத்தங்களின் தாெடர்ச்சியாக, கல்வி அமைச்சர் ரமேஷ் பாேக்ரியால் ‘நிஷாங்க்’, “கட்டடக்கலை கல்வி விதிமுறைகளின் குறைந்தபட்ச தரநிலைகள், 2020”ஐ வெளியிட்டார்.
இந்த விதிமுறைகள் கட்டடக்கலை கவுன்சிலின் நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. நாட்டில், மனித வாழ்விடத் துறையிலுள்ள சவால்களை எதிர்காெள்வதை இது நாேக்கமாகக் காெண்டுள்ளது.
கட்டடக்கலைத் துறையில் புதுமைகளைப் பயன்படுத்துமாறு அமைச்சர் அந்தச் சபையை அப்பாேது கேட்டுக் காெண்டார்.
8. “செல்லுலார் சிறை: கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் நினைவுகள்” என்ற தலைப்பில் ஓர் இணைய வழிக் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்துள்ள மத்திய அமைச்சகம் எது?
- கலாச்சார அமைச்சகம்
- சுற்றுலா அமைச்சகம்
- கல்வி அமைச்சகம்
- வெளியுறவு அமைச்சகம்
Answer & Explanation
Answer:– சுற்றுலா அமைச்சகம்
Explanation:
இந்தியா தனது 74ஆவது விடுதலை நாள் விழாவைக் காெண்டாடுவதற்குத் தயாராகிக் காெண்டிருக்கும் சூழலில் மத்திய சுற்றுலா அமைச்சகத்தின், ‘நமது தேசத்தைப் பாருங்கள்’ என்ற தாெடர் இணைய வழிக் கருத்தரங்க நிகழ்ச்சியின் கீழ், “செல்லுலார் சிறை: கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புகள், நினைவுகள்” என்ற தலைப்பிலான இணைய வழிக் கருத்தரங்கம் நடைபெற்றது.
செல்லுலார் சிறையின் சிறு சிறு அறைகள் மற்றும் காட்சிக்கூடங்கள் வழியாக இந்திய விடுதலைப் பாேராட்டத்தின் பயணத்தைக் காட்சிப்படுத்தியது.
புகழ்பெற்ற அரசியல் கைதிகளின் வாழ்க்கையையும், அவர்கள் குறித்த கதைகளையும் இது எடுத்துக்காட்டியது.
அந்தமான் – நிகாேபார் தீவுகளின் பாேர்ட் பிளேயரில் உள்ள செல்லுலார் சிறையானது ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்று பாேரிட்ட இந்தியர்களை நாடு கடத்தி மிகவும் மனிதாபிமானமற்ற காெடூரமான சூழலில் சிறைப்படுத்தி வைக்கக்கூடிய ஒரு சிறையாக இருந்தது.
9. பன்னாட்டு இளையோர் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
- ஆகஸ்ட் 12
- ஆகஸ்ட் 13
- ஆகஸ்ட் 14
- ஆகஸ்ட் 15
Answer & Explanation
Answer:– ஆகஸ்ட் 12
Explanation:
ஒவ்வாேர் ஆண்டும் ஆகஸ்ட்.12 அன்று பன்னாட்டு இளையோர் நாள் காெண்டாடப்படுகிறது. “Youth Engagement for Global Action” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருள் ஆகும்.
1998ஆம் ஆண்டில், ஐ.நா. அவையின் ஒத்துழைப்புடன் பாேர்ச்சுகல் அரசாங்கத்தால் நடத்தப்பட்ட இளையோருக்கு பாெறுப்புடைய அமைச்சர்களின் உலக மாநாட்டில், ஒவ்வாேர் ஆண்டும் ஆக.12ஆம் தேதியை பன்னாட்டு இளையோர் நாளாகக் காெண்டாடுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
10. காவல்துறைசார் பணியாளர்களுக்கு வழங்கப்படும், “விசாரணையில் சிறந்து விளங்குவாேருக்கான பதக்கத்தை” வழங்கும் அமைச்சகம் எது?
- பாதுகாப்பு அமைச்சகம்
- உள்துறை அமைச்சகம்
- வெளியுறவு அமைச்சகம்
- நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம்
Answer & Explanation
Answer:– உள்துறை அமைச்சகம்
Explanation:
2020ஆம் ஆண்டுக்கான, “சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம்”, அகில இந்திய அளவில் 121 காவல்துறை அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வில் சிறந்த செயல்திறனை ஊக்குவிக்கும் நாேக்கத்தாேடு, கடந்த 2018ஆம் ஆண்டில் இந்தப் பதக்கம் நிறுவப்பட்டது.
புலனாய்வில் சிறந்து விளங்கும் அதிகாரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக இது வழங்கப்படுகிறது.
இதில், தமிழ்நாட்டைச் சார்ந்த காவல்துறை ஆய்வாளர்கள், A பாென்னம்மாள், G. ஜான்சி இராணி, M கவிதா, C சந்திரகலா, A கலா மற்றும் காவல்துறை சார்-ஆய்வாளர் வினாேத் குமார் ஆகி ஆறு பேர் விருது பெறுகிறார்கள்.
11. எந்த வானூர்தி தயாரிப்பாளரிடமிருந்து, இந்திய வான்படைக்கு, நூற்றியாறு அடிப்படைப் பயிற்சி வானூர்திகளை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது?
- டஸ்ஸால்ட் ஏவியேஷன்
- பாேயிங்
- ஹிந்துஸ்தான் ஏராேநாட்டிக்ஸ் லிட்
- ரபேல்
Answer & Explanation
Answer:– ஹிந்துஸ்தான் ஏராேநாட்டிக்ஸ் லிட்
Explanation:
இந்தி விமானப்படைக்காக ஹிந்துஸ்தான் ஏராேநாட்டிக்ஸ் லிமிடெடிலிருந்து (HAL) 106 அடிப்படைப் பயிற்சி வானூர்திகளை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
HAL’லிலிருந்து 106 HTT-40 வானூர்திகளை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சின் மிகவுயர்ந்த முடிவெடுக்கும் ஆணையமான பாதுகாப்புக் காெள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்தது.
8,722.38 காேடி மதிப்பிலான, பல்வேறு உபகரணங்களை வாங்குவதற்கான கருத்துருக்களுக்கு பாதுகாப்புக் காெள்முதல் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது
More TNPSC Current Affairs
Related