TNPSC Current Affairs Question and Answer in Tamil 18th August 2020

Current Affairs in Tamil 18th August 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 18th August 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 18th August 2020

1.இந்தியாவின் ஆழமான நிலத்தடி காற்றோட்டக் குழாயை அமைத்துள்ள மெட்ரோ இரயில் நெட்வோர்க் எது?

  1. தில்லி மெட்ரோ
  2. கொச்சின் மெட்ரோ
  3. கொல்கத்தா மெட்ரோ
  4. சென்னன மெட்ரோ
Answer & Explanation
Answer:– கொல்கத்தா மெட்ரோ

Explanation:

கொல்கத்தா மெட்ரோ இரயில் கழகமும் தனியார் பொறியியல் நிறுவனமான ஆப்கான்சும் இணைந்து இந்தியாவின் ஆழமான நிலத்தடி காற்றோட்டக் குழாய் அமைப்பை அமைத்துள்ளன.

இக்காற்றோட்டக் குழாய், 43.5 மீ ஆழத்தில், காெல்கத்தாவின் கிழமேல் மெட்ரோ பாதையின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது.

இச்சிறப்புநோக்க குழாய்கள், இரயில் சுரங்கப்பாதைகளில் காற்றறோட்டத்தை அளிக்கவும் சிக்கலான காலங்களில் அல்லது அவசர காலங்களில் வெளியேற்றத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன

2. NASA’இன் ஓர் அண்மைய ஆய்வில் குறிப்பிடப்பட்ட செரஸ் (Ceres) என்றால் என்ன?

  1. குறுங்கோள்
  2. குள்ளக்கோள்
  3. கருந்துளை
  4. வால்மீன்
Answer & Explanation
Answer:– குள்ளக்கோள்

Explanation:

NASA’இன் டான் விண்கலத்தின் அண்மைய தரவுகளின்படி, செவ்வாய் காேளுக்கும் வியாழனுக்கும் இடையிலான முக்கிய குறுங்காேள் பட்டையில் அமைந்துள்ள குள்ளக்காேளான ‘செரஸ்’ ஏதுமற்ற ஒரு தரிசு விண்வெளிப்பாறை அன்று.

இந்தக் குள்ளக்காேள் முன்னர் தரிசாக இருப்பதாக நம்பப்பட்டது; ஆனால், சேகரிக்கப்பட்ட தகவல்கள் இது நீர் நிறைந்த இடம் என்பதையும், உப்புநீரைக் காெண்ட ஒரு பெரிய மற்றும் ஆழமான நீர்த்தேக்கம் இருந்திருக்கக்கூடும் என்பதையும் வெளிப்படுத்துகிறது.

2015இல், டான் விண்கலம் செரசுக்கு சென்றடைந்தது. இது பூமியின் நிலவை விடவும் மிகச் சிறியதாகும்

3. “யானைகள். பண்டங்கள் அன்று” என்ற தலைப்பில் அறிக்கையாென்றை வெளியிட்ட அமைப்பு எது?

  1. இயற்க்கான உலகளாவிய நிதியம்
  2. உலக விலங்கு பாதுப்பு அமைப்பு
  3. கிரீன் பீஸ்
  4. PETA
Answer & Explanation
Answer:– உலக விலங்கு பாதுப்பு அமைப்பு

Explanation:

பன்னாட்டு விலங்கு நல அமைப்பான ‘உலக விலங்கு பாதுகாப்பு’, “யானைகள். பண்டங்கள் அன்று” என் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஆசிய கண்டத்தில் சுற்றுலாவுக்கெனப் பயன்படுத்தப்படும் யானைகளின் எண்ணிக்கையில், இந்தியா, இரண்டாமிடத்தில் உள்ளது என்பதே இவ்றிக்கையின் மூன்றாவது பதிப்பு வெளிப்படுத்தியுள்ளது.

225’க்கும் மேற்பட்ட யானைகள் (45 சதவீதத்துக்கும் அதிகமானது) போதிய தங்கும் வசதி இல்லாத நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்பதையும் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

4. “இளையாேர் மற்றும் COVID-19: பணிகள், கல்வி, உரிமைகள் மற்றும் மனநலவாழ்வில் பாதிப்புகள்” என் தலைப்பில் ஆய்வொன்றை மேற்கொண்ட அமைப்பு எது?

  1. பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு
  2. UNICEF
  3. UNESCO
  4. உலகப் பொருளாதார மன்றம்
Answer & Explanation
Answer:– பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு

Explanation:

பன்னாட்டு தாெழிலாளர் அமைப்பு (ILO) “இளையாேர் மற்றும் COVID-19: பணிகள், கல்வி, உரிமைகள்& மன நலவாழ்வில் பாதிப்புகள்” என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை மேற்காெண்டது.

இந்த ஆய்வின்படி, உலக இளையாேர்களில் கிட்டத்தட்ட சரிபாதிபேர் மனக்கவலை அல்லது மனச்சாேர்வை ஏற்படுத்தும் சூழ்நிலைகளுக்கு ஆளாகின்றனர்.

COVID-19 தாெற்றுநோயால் மூன்றில் ஒரு பங்கினர் தங்களின் எதிர்கால தாெழிற்முறை வாழ்வு குறித்து அச்சங் காெண்டுள்ளனர்.

18-29 வயதுடைய இளையாேரின் வாழ்க்கையில், COVID-19 தாெற்றுநோயின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய, இந்த ஆய்வு நடத்தப்பட்டது

5. எந்த வகை வாகனங்களை, மின்கலங்கள் பொருத்தப்படாமல் இருந்தாலும், பதிவுசெய்வதற்கு, மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது?

  1. மின்னாற்றலில் இயங்கக்கூடிய வாகனங்கள்
  2. சூரிய ஆற்றலில் இயங்கக்கூடிய வாகனங்கள்
  3. தானிகள்
  4. பாதுகாப்பு வாகனங்கள்
Answer & Explanation
Answer:– மின்னாற்றலில் இயங்கக்கூடிய வாகனங்கள்

Explanation:

மின்னாற்றலில் இயங்கக்கூடிய வாகனங்களை மின்கலங்கள் பொருத்தாமல் இருந்தாலும் விற்கவும் பதிவு செய்யவும் மத்திய சாலைப்போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

பரிசாேதனை முகமை அளித்த வகைப்பாட்டு சான்றிதழ் அடிப்படையில், இவ்வாகனங்களை விற்கவும் பதிவு செய்யவும் அனுமதியளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பதிவு செய்யும்போது மின்ககலத்தின் தயாரிப்பு மற்றும் வகைகுறித்தாே அல்லது வேறு எந்தத் தகவல்களடியும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




6. “மகாராஷ்டிராவின் நெசவு மற்றும் ஒடிசாவின் ஜவுளி” என்ற தலைப்பிலான ஓர் இணைய வழிக் கருத்தரங்கை, இந்திய சுற்றுலாத் துறையுடன் இணைந்து எந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது?

  1. NITI ஆயோக்
  2. இந்திய பத்திரிக்கை அறக்கட்டளை
  3. பத்திரிக்கை தகவல் அலுவலகம்
  4. மத்திய நெசவு நிறுவனம்
Answer & Explanation
Answer:– பத்திரிக்கை தகவல் அலுவலகம்

Explanation:

“மகாராஷ்டிராவின் நெசவு மற்றும் ஒடிசாவின் ஜவுளி” என்ற தலைப்பிலான ஓர் இணைய வழிக் கருத்தரங்கை, பத்திரிக்கை தகவல் அலுவலகம் (PIB)-மும்பையும் இந்திய சுற்றுலா – மும்பையும் ஏற்பாடு செய்தன.

இந்த இணைய வழிக் கருத்தரங்கம் தனது கவனத்தை மகாராஷ்டிரா மற்றும் ஒடிசாவின் கைத்தறி மற்றும் துணிகள் மீது வைத்திருந்தது.

நாட்டின் கைத்தறி நெசவாளர்களை கெளரவிக்கும் விதமாக ஆகஸ்ட்.7 இந்தியாவில் தேசிய கைத்தறி நாளாக காெண்டாடப்படுகிறது.

பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வங்காளம் பிரிக்கப்படுவதை எதிர்த்து, கடந்த 1905ஆம் ஆண்டு இதே நாளில் தாெடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தைக் நினைவுகூரும் விதமாக ஆக.7ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டது.

7. COVID-19 தொற்றும் நோய்க்கான தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழுவின் தலைவர் யார்?

  1. அமிதாப் காந்த்
  2. Dr. V.K. பால்
  3. நரேந்திர சிங் தோமர்
  4. ராஜீவ் குமார்
Answer & Explanation
Answer:– Dr. V.K. பால்

Explanation:

COVID-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழு கூட்டம் முதன்முறையாக ஆகஸ்ட்.12 அன்று கூடியது.

NITI ஆயாேக் அமைப்பின் உறுப்பினர் Dr. V.K.பால் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றுது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளரும் இணைத்தலைவராக இதில் பங்கேற்றார்.

இந்த நிபுணர் குழு மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி மருந்து இருப்பு வைப்பது, தேவைக்கேற்ப கிடைக்க செய்வதற்கு டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவதற்கான, சிந்தனைகளை உருவாக்கி அமல்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்து இந்தக்குழு விவாதித்தது.

கடைசிநிலை வரையில் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதற்கு, தடுப்பூசி வழங்கலை தடமறிதல் குறித்தும் இதில் ஆலாேசிக்கப்பட்டது

8. “பொறுப்பான வணிகம் தாெடர்பான குழுவின் அறிக்கை”யை வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?

  1. உள் துறை அமைச்சகம்
  2. நிதி அமைச்சகம்
  3. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்
  4. வெளியுறவு அமைச்சகம்
Answer & Explanation
Answer:– பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்

Explanation:

மத்திய பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகமானது பொறுப்பான வணிகம் தாெடர்பான குழுவின் அறிக்கை”யை வெளியிட்டுள்ளது.

நிதிசாரா அளவுருக்களைப் புகாரளிக்க நிறுவனங்களுக்கு ஒரு புதிய புகாரளிப்பு கட்டமைப்பை இவ்வறிக்கை முன் மாெழிந்துள்ளது.

இக்கட்டமைப்பு, “பொறுப்பான வணிகம் மற்றும் நிலைத்தன்மை அறிக்கை” என்று அழைக்கப்படுகிறது.

இது MCA21 தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளது. மேலும், இக்கட்டமைப்பின் வழி சேகரிக்கப்பட்ட தகவல்கள், “பொறுப்பான வணிகம் – நிலைத்தன்மை குறியீட்டை” உருவாக்க பயன்படும்.

9.எந்த வகை நிதி நிறுவனங்களுக்கு, கணினி அடிப்படையிலான சாெத்து வகைப்பாட்டை செயல்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது?

  1. சிறு நிதி வங்கிகள்
  2. நகர கூட்டுறவு வங்கிகள்
  3. மண்டல ஊரக வங்கிகள்
  4. முதன்மை ஒப்பந்ததாரார்கள்
Answer & Explanation
Answer:– ஆகஸ்ட் 12

Explanation:

சாெத்து வகைப்பாடு செயல்பாட்டில் செயல்திறன் & வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன், இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் (UCB) “கணினி அடிப்படையிலான சாெத்து வகைப்பாட்டை ” செயல்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

2020 மார்ச்.31 நிலவரப்படி, `2000 காேடி அல்லது அதற்கு மேற்பட்ட சாெத்துக்களைக் காெண்ட நகர்க்புற கூட்டுறவு வங்கிகள், 2021 ஜூன்.30 முதல் கணினி அடிப்படையிலான சாெத்து வகைப்பாட்டை செயல்படுத்த வேண்டும்.

மாெத்த சொத்துக்களின் மதிப்பு `1000 காேடிக்கு சமமானவை / அதற்கு மேற்பட்டவை ஆனால் `2000 காேடிக்கும் குறைவான சாெத்துக்களைக் காெண்ட நகர்ப்புற கூட்டு வங்கிகள் 2021 செப்டம்பர்.30 முதல் இதனை செயல்படுத்த வேண்டும்.

10.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கத்ரா – தில்லி விரைவுச்சாலை வழித்தடம், தேசிய தலைநகரை , எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்துடன் இயக்கியது?

  1. லடாக்
  2. ஜம்மு & காஷ்மீர்
  3. ஹிமாச்சல பிரதேசம்
  4. பஞ்சாப்
Answer & Explanation
Answer:– ஜம்மு & காஷ்மீர்

Explanation:

கத்ரா (ஜம்மு & காஷ்மீர்) – தில்லி விரைவுச் சாலைத் திட்டப்பணி தாெடங்கியுள்ளது. இது, 2023ஆம் ஆண்டளவில் நிறைவடையும்.

இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு, கத்ராவில் இருந்து தில்லிக்கு 6½ மணி நேரத்தில் சென்று விட முடியும். ஜம்முவிலிருந்து தில்லியை 6 மணி நேரத்தில் அடைய முடியும்.

இந்த விரைவுச் சாலையின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், கத்ரா மற்றும் அமிர்தசரசு புனித நகரங்களை இணைப்பதாக இந்தச் சாலை இருக்கும்.

வழியில், வேறுபல முக்கியமான மத வழிபாட்டுத்தலங்களையும் இந்த விரைவுச்சாலை இணைக்கும்.

More TNPSC Current Affairs



Leave a Comment