TNPSC Current Affairs Question and Answer in Tamil 1st August 2020

Current Affairs in Tamil 1st August 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 1st August 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 1st August 2020

1. பின்வரும் எந்த நாட்டில் ”பராக்கா” ( “Barakah” ) என்ற அணு மின்சக்தி நிலையம் அமைந்துள்ளது?

  1. இந்தியா
  2. ஐக்கிய அரபு எமிரேட்
  3. ஆப்கானிஸ்தான்
  4. நேபாளம்
Answer & Explanation
Answer:– ஐக்கிய அரபு எமிரேட்

Explanation:

1400 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட ”பராக்கா” ( “Barakah” ) என்ற ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் (அபுதாபி) முதல் அணு உலை  சமீபத்தில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இதனை தென் கொரியாவின் ”Korea Electric Power Corporation (KEPCO)” உதவியுடன் அந்நாட்டின் “Emirates Nuclear Energy Corporation (ENEC)” இணைந்து சுமார் 24.4 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கியுள்ளது.

2. சென்னை புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திற்கு யாருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது?

  1. ஜெயலலிதா
  2. எம்.ஜி.ஆர்
  3. அண்ணா
  4. காமராஜர்
Answer & Explanation
Answer:– ஜெயலலிதா

Explanation:

சென்னையில் ஆலந்தூர், சென்டிரல், கோயம்பேட்டில் உள்ள 3 மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர் சூட்டப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி,

ஆலந்தூர் மெட்ரோ என்பது “அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ” என்றும்,

சென்னை சென்டிரல் மெட்ரோ என்பது “புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்டிரல் மெட்ரோ” என்றும்,

புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ என்பது “புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ” என்றும் பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

3. ஆந்திர மாநிலத்தின் புதிய தலைமை செயலகம் எங்கு அமைக்கப்பட உள்ளது?

  1. அமராவதி
  2. கர்னூல்
  3. விசாகப்பட்டினம்
  4. ஹைதராபாத்
Answer & Explanation
Answer:– விசாகப்பட்டினம்

Explanation:

ஆந்திராவில் 3 தலைநகரங்கள் செயல்படுவதற்கான சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பிஸ்வபூஷண் ஹரிசந்தன் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்படி அமராவதியில் சட்டப்பேரவையும், விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகமும், கர்னூலில் உயர் நீதிமன்றமும் செயல்பட உள்ளன.

TNPSC Group 1 Model Papers – Download

4. பின்வரும் எந்த தொழிலார்களுக்காக ”கிராமோத்யோக் விகாஸ் யோஜனா” என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது?

  1. பட்டாசு தொழிலாளர்
  2. தீப்பெட்டி தொழிலாளர்
  3. அகர்பத்தி தொழிலாளர்
  4. உப்பு தொழிலாளர்
Answer & Explanation
Answer:– அகர்பத்தி தொழிலாளர்

Explanation:

Gramodyog Vikas Yojana

அகர்பத்தி (Agarbatti) தயாரிக்கும் தொழிலாளர்களுக்காக ”கிராமோத்யோக் விகாஸ் யோஜனா” என்ற திட்டத்தை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் சமீபத்தில் தொடங்கியுள்ளது.

இதன்படி.,

”அகர்பத்தி தொழிலாளர்களுக்கு 200 தானியங்கி அகர்பத்தி தயாரிப்பு இயந்திரங்களையும் 40 கலப்பு இயந்திரங்களையும் வழங்கப்பட உள்ளது.

5.ஆகஸ்டு 2020 நிலவரப்படி ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் இணைந்துள்ள மாநிலங்களின் எண்ணிக்கை ?

  1. 20
  2. 22
  3. 23
  4. 24
Answer & Explanation
Answer:– 24

Explanation:

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் இதுவரை 24 மாநிலங்கள் இணைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மணிப்பூர், உத்தரகாண்ட், நாகாலாந்து ஆகிய மாநிலங்களும், காஷ்மீர் யூனியன் பிரதேசமும் இந்த திட்டத்தில் சமீபத்தில் இணைந்ததைத் தொடர்ந்து தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் இணைந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்து உள்ளது.

மீதமுள்ள மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களும் அடுத்த ஆண்டு (2021) மார்ச் மாதத்துக்குள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்.,

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில்சோதனை முறையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 2 மாவட்டங்களில் கடந்த 1.1.2020 முதல் 29.2.2020 வரை அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

6. சமீபத்தில் காலமான சா.கந்தசாமி அவர்களின் பின்வரும் எந்த நாவல் 1997 ஆம் ஆண்டின் சாகித்திய அகாடமி விருதைப் பெற்றது?

  1. சாயாவனம்
  2. விசாரணை கமிஷன்
  3. காவல் தெய்வங்கள்
  4. சுடுமண் சிலைகள்
Answer & Explanation
Answer:– விசாரணை கமிஷன்

Explanation:

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி (80) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் பிறந்த இவர் எழுத்துலகில் பிரபலமானவர். 1968ம் ஆண்டு இவருடைய ‘சாயாவனம்’ என்ற புதினம் வெளிவந்ததில் இருந்து இவர் தமிழ் எழுத்துலகில் பிரபலமானார்.

1997 ஆண்டு இவர் எழுதிய விசாரணை கமிஷன் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றார்.




7. பெய்டோவ்-3 (BeiDou-3) என்ற செயற்கைக்கோளை உருவாக்கியுள்ள நாடு?

  1. ஜப்பான்
  2. வடகொரியா
  3. தென்கொரியா
  4. சீனா
Answer & Explanation
Answer:– சீனா

Explanation:

பெய்டோவ்-3 (BeiDou-3) எனும் உலக புவியிடங்காட்டி செயற்கைக் கோள்கள் அமைப்பு (Navigation Satellite System) முற்றிலுமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதன் திறப்பு விழா ஜூலை 31ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

பெய்டோவ் புவியிடங்காட்டி அமைப்பு சீனாவிலேயே சொந்தமாக ஆய்ந்து உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

தற்போது வரை, இந்த அமைப்புடனான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் 137 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

அமெரிக்காவின் ஜி.பி.எஸ், ரஷியாவின் குளோனாஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் கலிலியோ ஆகியவற்றோடு சீனாவின் பெய்டோவ் புவியிடங்காட்டி அமைப்பு முறையும் சேர்ந்து உலகின் 4 முக்கிய புவியிடங்காட்டி அமைப்புகளாக திகழ்கின்றன.

8. 6-வது பிரிக்ஸ் சுற்றுசூழல் அமைச்சர்கள் கூடுகைக்கு தலைமையேற்ற நாடு?

  1. இந்தியா
  2. பிரேசில்
  3. சீனா
  4. ரஷ்யா
Answer & Explanation
Answer:– ரஷ்யா

Explanation:

6 வது பிரிக்ஸ் சுற்றுசூழல் அமைச்சர்கள் கூடுகை (Sixth BRICS Environment Ministers’ Meeting) 30-7-2020 அன்று இணைய வழியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தை ரஷியா நாடு தலைமையேற்று நடத்தியது. இந்த கூடுகையில், இந்தியாவின் சார்பாக மத்திய சுற்றுசூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டார்.

More TNPSC Current Affairs



4 thoughts on “TNPSC Current Affairs Question and Answer in Tamil 1st August 2020”

  1. Sir or mam ithu matiri current affairs neriya poda mudiuma …my kind request … this is very useful for me to learn … very good step take by your website .. I am daily visiting your website …keep goo …plss post more current affairs … thanking you with love 💖💖💖

    Reply

Leave a Comment