TNPSC Current Affairs Question and Answer in Tamil 20th August 2020

Current Affairs in Tamil 20th August 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 20th August 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 20th August 2020

1.விடுதலை நாள் கொண்டாட்டத்தை குறிக்கும் வகையில், கீழ்க்காணும் எந்தெந்த ஆவணப்படங்கள், திரைப்படப்பிரிவால் திரையிடப்பட்டன?

  1.  Vice Roy’s House & Mangal Pandey
  2. The Legend of Bhagat Singh & Chittagong
  3. India Wins Freedom & India Independent
  4. India Untouched & Gulabi Gang
Answer & Explanation
Answer:– India Wins Freedom & India Independent

Explanation:

2020 ஆக .15 – 74வது விடுதலை நாள் கொண்டாட்டத்தில், திரைப்படப்பிரிவு, “India Wins Freedom & India Independent” ஆகிய இரண்டு ஆவணப்படங்களை திரையிட்டது.

மேற்கண்ட இரண்டு படங்களைத் தவிர, விடுதலை இயக்கம் குறித்த தேர்ந்தெடுக்கப்பட்ட 14 திரைப்படங்கள், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, “இணைய வழி தேசபக்தி திரைப்பட விழாவில்” 2020 ஆ .7-21 வரை, “www.cinemasofindia.com” வலைத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.

2. அண்மைச் செய்திகளில் இடம் பெற்ற உயிரி பேருந்துப் பகுப்பாய்வு மையம் அமைந்துள்ள நகரம் எது?

  1. மும்பை
  2. புனே
  3. தில்லி
  4. ஹைதராபாத்
Answer & Explanation
Answer:– புனே

Explanation:

புனேவில் அமைக்கப்பட்டுள்ள உயிரி மருந்துப் பகுப்பாய்வு மையத்தை மத்திய உயிரி தாெழில்நுட்பத் துறை செயலாளர் மெய்நிகராக தாெடக்கி வைத்தார்.

இது, புனேவில் அமைந்துள்ள CSIR – தேசிய வேதியியல் ஆய்வகத்தின் ஆதரவிலுள்ள தாெழில்நுட்ப வணிகக் காப்பகமான வெஞ்சர் மையத்தின் ஒரு முன்னெடுப்பாகும்.

உயிரி மருந்தாளுமை தயாரிப்பாளர்களுக்கு உயர்தரம் வாய்ந்த பகுப்பாய்வு சேவைகளை இந்தப் பகுப்பாய்வு மையம் வழங்கும்.

உயிரியல், உயிரி மருந்தாளுமைக் கட்டமைப்பு இயக்கத் தன்மைகள் பற்றி பகுப்பாய்வதற்கான ஆதார மையமாக இம்மையம் உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3. இந்தியா தனது மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டத்திற்காக , எந்த நாட்டிற்கு, $500 மில்லியன் டாலர் கடனுதவியை அறிவித்துள்ளது?

  1. இலங்கை
  2. வங்கதேசம்
  3. மாலத்தீவுகள்
  4. நேபாளம்
Answer & Explanation
Answer:– மாலத்தீவுகள்

Explanation:

இந்தியா சமீபத்தில் தனது மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டத்திற்கு, $500 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை அறிவித்துள்ளது.

இந்நிதியில், தலைநகரான மாலேவை, மூன்று அண்டைத்தீவுகளான வில்லிங்கிலி, குல்கிபாஹூ மற்றும் திலாபுசி ஆகியவற்றுடன் இணைக்கும் நாேக்கில் $400 மில்லியன் டாலர் கடனும் $100 மில்லியன் டாலர் மானியமும் வழங்கப்படும்.

இத்திட்டம், பாெருளாதார செயல்பாடு மற்றும் வேலைவாய்ப்புகளையும் மேம்படுத்தும்.

4. இந்தியாவில், ஆண்டுதாேறும் நடைபெறும் பன்னாட்டுத் திரைப்பட விழா (IFFI) எங்கு நடைபெறுகிறது?

  1. கொல்கத்தா
  2. கோவா
  3. புது தில்லி
  4. ஜெய்ப்பூா்
Answer & Explanation
Answer:– கோவா

Explanation:

இந்திய பன்னாட்டுத் திரைப்பட விழா என்பது ஒவ்வாேர் ஆண்டும் நவம்பர் மாதத்தில் மாதத்தில் நடைபெறும் ஒரு வருடாந்திர திரைப்பட விழாவாகும்.

நடப்பாண்டு (2020) நவம்பர் 20-28 வரை, கோவாவில், திட்டமிடப்பட்டபடி இந்த விழா நடைபெறும் என்று கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.

கோவா மாநில அரசுக்கு சாெந்தமான பாெழுதுபாேக்குச் சங்கத்துடன் இணைந்து திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் இந்த விழாவில் ஏற்பாடு செய்துள்ளது

5. இணைய வழிக்கல்வியை மேம்படுத்துவதற்காக, 2500’க்கும் மேற்பட்ட திறன்பேசிகளை இந்திய சிறார்களுக்கு வழங்கவுள்ள திறன்பேசி தயாரிப்பு நிறுவனம் எது?

  1. ஒப்போ
  2. விவாே
  3. ஷாவ்மி
  4. ஹூவாவே
Answer & Explanation
Answer:– ஷாவ்மி

Explanation:

சீன திறன்பேசி நிறுவனமான ஷாவ்மி அதன் MI இந்தியா பிரிவானது இணைய வழிக் கல்வி முறைக்கு ஆதரவாக இந்திய சிறார்களுக்கு `2 கோடி மதிப்புள்ள 2,500’க்கும் மேற்பட்ட திறன்பேசிகளை வழங்கும் என அறிவித்தது.

விநியாேக செயல்முறையை முன்னெடுப்பதற்காக , MI இந்தியா, ஓர் இந்திய இலாப-நாேக்கமற்ற அமைப்பான, ‘Teach for India’ உடன் கூட்டிணையும்.

இந்தச் சேவையை திறம்பட பயன்படுத்தவும், சிறார்களுக்கு தரமான கல்வி கிடைக்கவும், சுழற்சி முறையில் இந்தத் திறன்பேசிகள் வழங்கப்பட்டு பயன்படுத்தப்படும்.




6. வரிவிதிப்பு சீர்திருத்தத்தின் ஒருபகுதியாக , பிரதமரால் வெளியிடப்பட்ட தளத்தின் பெயரென்ன?

  1. நேர்மையாக வாி செலுத்துவாாிே்ன் தகவல் பலகை
  2. வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையானவர்களை கெளரவித்தல்
  3. தடையில்லாத மதிப்பீ்ட்டுத் திட்டம்
  4. P.M. வெளிப்படைத்தன்மை
Answer & Explanation
Answer:– வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையானவர்களை கெளரவித்தல்

Explanation:

“வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையானவர்களை கெளரவித்தல்” என்ற தளத்தை பிரதமர் மோடி, காணாெளிக் காட்சி மூலம் தாெடங்கி வைத்தார்.

21ஆம் நூற்றாண்டின் வரிவிதிப்பு அமைப்பின் தேவையை நிறைவேற்றும் வகையில், இந்தத் தளம் தாெடங்கப்பட்டுள்ளது.

நேர்மையாக வரிசெலுத்துவாேர் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், இணக்கத்தை எளிதாக்குவதையும், பணத்தைத் திரும்பப்பெறும் செயல்முறையை விரைவாக்குவதையும் இத்தளம் நாேக்கம் எனக்காெண்டுள்ளது.

தடையில்லா மதிப்பீடு, தடையில்லா மேல்முறையீடு மற்றும் வரி செலுத்துவாேருக்கான சாசனம் பாேன்ற மிகப்பெரும் சீர்திருத்தங்களை இந்தத் தளம் கொண்டுள்ளது

7.Transiting Exoplanet Survey Satellite (TESS) என்பது எந்த நாட்டு விண்வெளி அமைப்பின் செயற்கைக் கோளாகும்?

  1. ஐக்கிய அமெரிக்க நாடுகள்
  2. பிரான்ஸ்
  3. ஆஸ்திரேலியா
  4. சீனா
Answer & Explanation
Answer:– ஐக்கிய அமெரிக்க நாடுகள்

Explanation:

NASA ஏவிய Transiting Exoplanet Survey Satellite (TESS) தனது முதன்மை பணியை முடித்துள்ளது. அதன் ஈராண்டு காா முதன்மை பணியின்பாேது, அது நமது சூரியக்குடும்பத்திற்கு வெளியே 66 புதிய புறக்கோள்களைக் கண்டறிந்தது.

மேலும், 2000 மேற்பட்ட விண்பாெருள்களையும் TESS கண்டறிந்தது. விரைவில் அவையனைத்தும் வானியலாளர்களால் உறுதிப்படுத்தப்படும். TESS’இன் நீட்டிக்கப்பட்ட பணி, எதிர்வரும் 2022ஆம் ஆண்டில் நிறைவடையும்.

8. டாேக்கியாே ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியின், அதிகாரப்பூர்வ ஆதரவாளராக அறிவிப்பு செய்யப்பட்டுள்ள நிறுவனம் எது?

  1. INOX குழுமம்
  2. பைஜூஸ்
  3. PVR சினிமா
  4. இண்டிகோ
Answer & Explanation
Answer:– INOX குழுமம்

Explanation:

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஓர் அண்மையை அறிவிப்பின்படி, மறுதிட்டமிடப்பட்ட டாேக்கியாே ஒலிம்பிக் பாேட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியின் அதிகாப்பூர்வ ஆதரவாளராக INOX குழுமம் இருக்கும்.

தற்பாேது நிலவும் COVID-19 தாெற்றுநாேய் சூழல் காரணமாக, டாேக்கியாே ஒலிம்பிக் பாேட்டிகள் 2021 ஜூலை.23 முதல் ஆகஸ்ட்.8 வரை மாற்றியமைக்கப்பட்டது.

இக்குழுமம் தனது பாெழுதுபாேக்கு நிறுவனமான, ‘INOX Leisure Ltd’மூலம் அணியின் விளம்பரங்களை ஒளிபரப்பும்.

INOX குழுமம், நாடு முழுவதும் பன்னடுக்கு பாெழுதுபாேக்குச் சங்கிலித் தாெடரைக் கொண்டுள்ளது

9. அண்மைய அறிக்கையின்படி, உலகில் மலிவான வாடகை குடியிருப்புகள் கிடைக்கும் இரண்டாவது நகரமாக இடம்பெற்றுள்ள இந்திய நகரம் எது?

  1. ஹைதரபாத்
  2. பெங்களூரு
  3. தில்லி
  4. சென்னை
Answer & Explanation
Answer:– தில்லி

Explanation:

பியூர்லி லையமண்ட்ஸின் புதிய அறிக்கையின்படி, வியட்நாமின் பெருநகரமான ஹாே சி மின் நகரம், உலகிலேயே மிகவும் மலிவான வாடகை குடியிருப்புகள் கிடைக்கப்பெறும் நகரமாகும்.

உலகிலேயே வாடகை குடியிருப்புக்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரம் நியூயார்க் நகரம் உள்ளதாக அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

நியூயார்க்கைத் தாெடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளது. இந்திய தலைநகரான தில்லி, உலகிலேய மிகவும்மலிவான வாடகை குடியிருப்புகள் கிடைக்கும் இரண்டாவது நகரமா உள்ளது.

தில்லிலயத் தாெடர்ந்து தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை உள்ளது

10. ‘பவித்ராபதி’ என்ற ஆயுர்வேத அடிப்படையிலான மக்கி அழியக்கூடிய முகமறைப்பை (face-mask) உருவாக்கியுள்ளஅமைப்பு எது?

  1. பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பு
  2. இந்திய விண்வெளி ஆய்வு மையம்
  3. மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துக்கான பாதுகாப்பு நிறுவனம்
  4. ஹிந்துஸ்தான் ஏேராநாட்டிக்ஸ் லிட்
Answer & Explanation
Answer:– மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துக்கான பாதுகாப்பு நிறுவனம்

Explanation:

“பவித்ரபதி” என்ற ஆயுர்வேத அடிப்படையிலான மக்கி அழியக்கூடிய முகமறைப்பை புனேவில் உள்ள மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துக்கான பாதுகாப்பு நிறுவனம் (DIAT) உருவாக்கியுள்ளது.

இது ரீதியாக, DIAT புனே & தனியார் நிறுவனமொன்றுக்கு இடையே, இதனை பேரளவில் உற்பத்தி செய்வதற்கான ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிறுவனம் தற்பாேது இந்த முகமறைப்பை வணிக ரீதியிலான விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இதைபாேல், ஒளஷதா தாரா” என்று பெயரிடப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பு உலையை உருவாக்கும் தாெழில்நுட்பமும் இந்நிறுவனத்திற்கு மாற்றப்படுகிறது.

More TNPSC Current Affairs



Leave a Comment