Current Affairs in Tamil 21st August 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 21st August 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1.மத்திய எஃகு அமைச்சகமானது எந்த அமைப்போடு இணைந்து, “வீட்டுவசதி மற்றும் கட்டட கட்டுமானம் & வானூர்தி துறைகளில் எஃகுப் பயன்பாட்டை வளர்த்தெடுப்பது” என்ற தலைப்பில் ஓர் இணையவழிக் கருத்தரங்கை நடத்தவுள்ளது?
- CII
- FICCI
- ASSOCHAM
- L&T
Answer & Explanation
Answer:– CII
Explanation:
“தற்சார்பு இந்தியா: வீட்டு வசதி, கட்டடக்கட்டுமானம் மற்றும் விமானத்துறையில் எஃகுப் பயன்பாட்டை அதிகரித்தல்” என்னும் தலைப்பிலான இணையக் கருத்தரங்கை இந்தியத் தாெழில் கூட்டமைப்புடன் (CII) இணைந்து, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துடன் எஃகு அமைச்சகம் நடத்தவிருக்கிறது.
எஃகு சார்ந்த வடிவமைப்பு மற்றும் கட்டடம், வீடுகள் மற்றும் வானூர்தி நிலையம் ஆகியவற்றின் கட்டுமானங்களில் எஃகுப் யன்பாட்டை அதிகரித்தல் குறித்த பயனர்களின் எண்ணங்கள் மீது இந்த இணையவழிக் கருத்தரங்கு தனது கவனத்தைச் செலுத்தும்.
2.எந்த நிறுவனத்தின் ஆதரவின் கீழ், அண்மைச் செய்திகளில் இடம் பெற்ற விலைக்கண்காணிப்பு மற்றும் ஆதாரவளப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது?
- தேசிய மருந்துக்கல்வி ஆராய்ச்சி நிறுவனம்
- தேசிய மருந்து விலை ஆணையம்
- இந்திய பொதுத்துறை மருந்து நிறுவனங்களின் பணியகம்
- ஹிந்துஸ்தான் இயற்கை வேதிகள் லிட்
Answer & Explanation
Answer:– தேசிய மருந்துக்கல்வி ஆராய்ச்சி நிறுவனம்
Explanation:
கர்நாடக மாநிலத்தில், மத்திய வேதியியல் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் NPPA’இன் (தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம்) கீழ், புதிய விலைக் கண்காணிப்பு மற்றும் ஆதாரவளப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
சந்தையில் மருந்துகளின் விலையை கண்காணிக்க NPPA’க்கு உதவுவதும் அவற்றின் கிடைப்பை உறுதிசெய்வதும் இந்தப் பிரிவின் முக்கிய செயல்பாடாகும்.
NPPA அதன் நுகர்வாேர் விழிப்புணர்வு, விளம்பரம் மற்றும் விலைக் கண்காணிப்பு (CAPPM) என்னும் மத்தியத் துறைத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே பன்னிரெண்டு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் விலைக்கண்காணிப்பு மற்றும் ஆதாரவளப்பிரிவை (PMRU) அமைத்துள்ளது.
3.அண்மையில் தாெடங்கப்பட்ட, மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் செயல்திறன் தகவல் பலகையின் பெயரென்ன?
- பழங்குடியினருக்கு அதிகாரம்; இந்தியாவில் மாற்றம்
- பழங்குடியினாின் தகவல் பலகைக்கு செல்லுங்கள்
- பழங்குடிகளின் மாற்றம் குறித்த தகவல் பலகை
- இந்திய பழங்குடியினாின் தகவல் பலகை
Answer & Explanation
Answer:– பழங்குடியினருக்கு அதிகாரம்; இந்தியாவில் மாற்றம்
Explanation:
மத்திய பழங்குடியின விவகாரங்கள் அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள, “ பழங்குடியினருக்கு அதிகாரம்; இந்தியாவில் மாற்றம்” என்ற இணையவழி செயல்திறன் தகவல் பலகை ஒன்றை NITI ஆயாேக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், NITI ஆயாேக் உறுப்பினர் ரமேஷ் சந்த் ஆகியாேர் தாெடக்கி வைத்தனர்.
நீடித்த வளர்ச்சி இலக்குகளை (SDG) அடைவது பற்றி பதினாெரு திட்டங்களுக்கு மேற்காெள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து இந்தத் தகவல் பலகையில் உடனுக்குடன் பதிவுசெய்யப்படும்.
ஐந்து உதவித் தாெகை திட்டங்கள் குறித்தும், இந்தத் தகவல் பலகையில் விவரங்கள் வெளியிடப்படும்.
4.போர்ப்ஸ் பட்டியலில், உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் ட்டியலில் முதலிடம் பிடித்த நடிகர் யார்?
- வில் ஸ்மித்
- ஜாக்கி சான்
- அமீர்கான்
- டுவைன் ஜான்சன்
Answer & Explanation
Answer:– டுவைன் ஜான்சன்
Explanation:
‘தி ராக்’ என அழைக்கப்படும் டுவைன் ஜான்சன், உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் முதல் பத்து நடிகர்கள் இடம் பெற்ற போர்ப்ஸ் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
‘ராக்’, 2020ஆம் ஆண்டில் வாங்கிய சம்பளம் மட்டும் $87.5 மில்லியனாகும். $48.5 மில்லியன் சம் ளத்துடன் நடிகர் அக்சய்குமார் ஆறாவது இடத்தில் உள்ளார்.
இந்தப் ட்டியலில் உள்ள ஒரே இந்திய நடிகர் இவர்தான்.
5. ‘Air Bubble’ ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா மேற்கொண்ட முதல் அண்டை நாடு எது?
- இலங்கை
- வங்கதேசம்
- மாலத்தீவுகள்
- நேபாளம்
Answer & Explanation
Answer:– மாலத்தீவுகள்
Explanation:
‘Air Bubble’ ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா போக்குவரத்து சேவைகளை இயக்கும் முதல் அண்டை நாடாக மாலத்தீவுகள் உள்ளது.
அண்மையில், உள்நாட்டு வான்போக்குவரத்து இயக்குநரகம், எந்ததவாரு செல்லுபடியாகும் நுழைவு இசைவை (visa) வைத்திருக்கும் இந்தியர்கள், ‘Air Bubble’ ஒப்பந்தத்தின் கீழ் ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஐக்கியப் பேரரசு, கனடா ஆகிய நாடுகளுக்கு விமானம் வழியாக பயணிக்க முடியும் என்று அறிவித்தது.
6. யாருக்கு அவரின் வீரமறைவுக்குப்பின், ‘கீர்த்தி சக்ரா’ விருதை வழங்கி இந்தியக் குடியரசுத் தலைவர் கெளரவித்தார்?
- அப்துல் ரஷீத் கலாஸ்
- கிருஷன் சிங் ராவத்
- அனில் அா்ஸ்
- அலாேக் குமாா் துபே
Answer & Explanation
Answer:– அப்துல் ரஷீத் கலாஸ்
Explanation:
ராணுவப்படைகளின் தலைமைத் தளபதியாக இருக்கக்கூடிய குடியரசுத்தலைவர் ராம்நாத் காேவிந்த் ராணுவப் படை வீரர்களுக்கும், துணை ராணுவப் படை வீரர்களுக்கும் 84 விருதுகள் & பதக்கங்களை வழங்குவதற்கு அனுமதி அளித்துள்ளார்.
இவற்றில் 1 கீர்த்தி சக்ரா விருது, 9 சௌர்யா சக்ரா விருதுகள், சேனா பதக்கம் பெற்ற ஐந்து வீரர்களுக்கு ஆடைப்பட்டயம் (தீரச்செயல்), அறுபது சேனா பதக்கங்கள் (தீரச்செயல்), 4 நவசேனா பதக்கங்கள் (தீரச்செயல்) மற்றும் ஐந்து வாயுசேனா பதக்கங்கள் (தீரச்செயல்) ஆகியன அடங்கும்.
இதில், “ஆபரேஷன் மேகதூத்” மற்றும் “ஆபரேஷன் ரக்சஷக்” ஆகியவற்றில் உயிர் இழந்த எட்டு வீரர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்குவதும் அடங்கும்.
7.பிரதமர் தனது விடுதலை நாள் உரையில் கீழ்க்கண்ட எவ்விரு விலங்கினங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு புதிய திட்டத்தை பரிந்துரைத்தார்?
- சிறுத்தைப்புலி மை்றும் காண்டாமிருகம்
- சிங்கம் மற்றும் ஓங்கில்
- காண்டாமிருகம் மற்றும் கலைமான்
- வங்கப்புலி மற்றும் ஆமை
Answer & Explanation
Answer:– சிங்கம் மற்றும் ஓங்கில்
Explanation:
இந்தியப் பிரதமர் மோடி, அண்மையில் 2020 ஆகஸ்ட்.15 அன்று தனது விடுதலை நாள் உரையை ஆற்றினார்.
அவ்வுரையில், சிங்கத்திட்டம் மற்றும் ஓங்கில் திட்டம் ஆகிய இரண்டு புதிய திட்டங்களடித் தாெடங்குவது குறித்து அவர் குறிப்பிட்டார்.
சிங்கத்திட்டமானது ஆசிய சிங்கங்களையும் அதன் வசிப்பிடத்தையும் ஒரு முழுமையான முறையில் பாதுகாப்தை நாேக்கைமாகக் காெண்டுள்ளது.
இது மனித-வனவுயிரி மோதலைச் சமாளிக்கவும் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்கவும் உதவும். ஓங்கில் திட்டமானது ஆறுகள் & பெருங்கடல்களில் வாழும் ஓங்கில்களைப் பாதுகாப்பதை நாேக்கமாகக் கொண்டுள்ளது.
8. COVID-19 தொற்றுநோயை சிறப்புற எதிர்த்துப் போராடியதற்காக, தமிழ்நாட்டு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டவர் யார்?
- சுந்தர் பிச்சை
- செளமியா சுவாமிநாதன்
- கமலா ஹாாிஸ்
- சத்யா நாதெல்லா
Answer & Explanation
Answer:– செளமியா சுவாமிநாதன்
Explanation:
COVID-19 (கொராேனா) நாேய்த்தடுப்புப் பணியில் சிறப்பான பங்களிப்பை ஆற்றியதற்காக, உலக நலவாழ்வு அமைப்பின் (WHO) முதன்மை ஆராய்ச்சியாளர் செளமியா சுவாமிநாதனுக்கு ‘தமிழ்நாட்டு முதலமைச்சரின் சிறப்பு விருது’ அளிக்கப்பட்டது.
‘முதலமைச்சரின் சிறந்த நடைமுறைகள் விருது’ கருவூலத்துறைக்கு அளிக்கப்பட்டது. COVID-19 தாெற்றுக்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியமைக்காக பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் ஆகியவற்றுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
9.மூன்று ICC காேப்பைகளையும் வெல்வதற்கு தனது அணியை வழி நடத்திய உலகின் ஒரே கிரிக்கெட் அணித்தலைவர் யார்?
- ரிக்கிபாண்டிங்
- கபில்தேவ்
- மகேந்திர சிங் தோனி
- வக்கார் யூனஸ்
Answer & Explanation
Answer:– மகேந்திர சிங் தோனி
Explanation:
இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் அணித்தலைவருமான மகேந்திர சிங் தாேனி (MSD), பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
39 வயதான மகேந்திர சிங் தோனி, மூன்று ICC காேப்பைகளையும் வெல்வதற்கு தனது அணியை வழிநடத்திய உலகின் ஒரே கிரிக்கெட் அணித் தலைவராக திகழ்கிறார்.
அவரது தமைமையின் கீழ், இந்தியா, 2007’இல் ICC உலக T20, 2010 மற்றும் 2016’இல் ஆசியக்காேப்பை , 2011’இல் ICC கிரிக்கெட் உலகக்காேப்பை மற்றும் 2013ஆம் ஆண்டில் ICC சாம்பியன்ஸ் காேப்பை ஆகியவற்றை வென்றது.
மகேந்திர சிங் தோனியைத் தொடர்ந்து மற்றொரு கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
10.எல்லையாேர டற்றும் கடலோர மாவட்டங்களை உள்ளடக்கும் எந்த இளையாேர் சேவைப்பிரிவடி விரிவுபடுத்த, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்?
- நாட்டு நலப் பணித் திட்டம் (NSS)
- தேசிய மாணவா் படை (NCC)
- இந்திய சாரணர் சங்கம்
- காவலா் நண்பர்கள்
Answer & Explanation
Answer:– தேசிய மாணவா் படை (NCC)
Explanation:
அனைத்து எல்லை மற்றும் கடலோர மாவட்டங்களில் உள்ள இளையாேரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்காக, தேசிய மாணவர் படையை (NCC) பேரளவில் விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
இத்திட்டம் குறித்த பரிந்துரையை பிரதமர் நரேந்திர மோடி, ஆக.15 அன்று தனது விடுதலை நாள் உரையில் அறிவித்தார்.
ஒட்டுமொத்தமாக 173 எல்லையாேர மற்றும் கடலோர மாவட்டங்களில் உள்ள 1 இலட்சம் பேர், தேசிய மாணவர் படையில் (NCC) சேர்க்கப்படுவார்கள்.
இதில், மூன்றில் ஒரு பங்கினர் சிறுமிகளாக இருப்பர். விரிவாக்கத் திட்டத்தின் ஓர் அங்கமாக, எல்லை மற்றும் கடலோரப் பகுதிகளில், படையினருக்கு NCC பயிற்சியளிப்பதற்காக ஒட்டு மொத்தமாக 83 தேசிய மாணவர் படைப்பிரிவுகள் (ராணுவம் 53, கடற்படை 20, விமானப் படை 10) மேம்படுத்தப்படும்.
More TNPSC Current Affairs
Related