TNPSC Current Affairs Question and Answer in Tamil 24th August 2020

Current Affairs in Tamil 24th August 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 24th August 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 24th August 2020

1.பழங்குடியினரின் நலத்தை மேம்படுத்துவதற்காக மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட வலைத்தளத்தின் பெயரென்ன?

  1. ஆரோக்யோ
  2. ஸ்வஸ்த்யா
  3. வந்தனா
  4. பழங்குடி இரக்ஷா
Answer & Explanation
Answer:– ஸ்வஸ்த்யா

Explanation:

“ஸ்வஸ்தயா” என்ற பழங்குடியினர் நலவாழ்வு, ஊட்டச்சத்து வலைத்தளம், ‘அலேக்’ என்ற நலவாழ்வு மற்றும் ஊட்டச்சத்து குறித்த மின்னணு-செய்திமடல் ஆகியவற்றை மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, அண்மையில் தொடக்கிவைத்தார்.

இந்த ஒற்றைத்தளத்தில் இந்தியாவின் பழங்குடி மக்கள் தொடர்பான அனைத்து நலவாழ்வு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான தகவல்களும் கிடைக்கப்பெறும்.

புதிய நடைமுறைகள், ஆராய்ச்சியின் சுருக்கங்கள், கள ஆய்வுகள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரட்டப்பட்ட நடைமுறைகள் ஆகியவற்றை, ‘ஸ்வஸ்தயா’ சேகரித்து வழங்கும்.

பழங்குடியின மக்களுக்கு நலவாழ்வு & ஊட்டச்சத்து தொடர்பான காெள்கைகளை சான்றாதாரங்களின் அடிப்படையில் வகுக்கவும் முடிவுகள் எடுக்கவும் தேவையான உள்ளீடுகளை இது வழங்கும்.

2.உலக சூரிய ஆற்றல் தொழில்நுட்ப உச்சிமாநாட்டை நடத்தவுள்ள அமைப்பு எது?

  1. பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணி
  2. உலக வர்த்தக சங்கம்
  3. ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம்
  4. இயற்கைக்கான உலகளாவிய நிதியம்
Answer & Explanation
Answer:– பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணி

Explanation:

பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணி (ISA) தனது முதல் உலக சூரிய தொழில்நுட்ப உச்சி மாநாட்டை மெய்நிகராக வரும் 2020 செப்.8 அன்று நடத்தவுள்ளது.

ISA ஆனது 121 நாடுகளின் கூட்டணியாகும்; இது, குருகிராமை தலைமையிடமாகக் காெண்டு இந்தியாவால் தொடங்கப்பட்டதாகும்.

இந்தியப்பிரதமர் மோடியும், ISA தலைவரும் புது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் மேம்பாட்டு அமைச்சருமான R.K. சிங் ஆகியோர் இவ்வுச்சி மாநாட்டில் தொடக்கவுரை நிகழ்த்தவுள்ளனர்.

சூரிய ஆற்றலை திறம்பட பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் இந்த நிகழ்வு கவனம் செலுத்தும்.

3. ‘நடுவணரசு நிதியுதவியின் கீழியங்கும் நிறுவனங்கள்’ பிரிவில், புதுமையில் சாதனை அடிப்படையில் அடல் தரவரிசை அமைப்புகளின் பட்டியல் (ARIIA) 2020’இல் முதலிடம் பிடித்த நிறுவனம் எது?

  1. ISC, பெங்களூரு
  2. IIT மெட்ராஸ்
  3. IIT பம்பாய்
  4. IIT தில்லி
Answer & Explanation
Answer:– IIT மெட்ராஸ்

Explanation:

இந்தியக்குடியரசுத் துணைத்தலைவர் M.வெங்கையா, புதுமையில் சாதனை அடிப்படையில் அடல் தரவரிசை அமைப்புகளின் பட்டியல் (ARIIA) 2020’ஐ அறிவித்தார்.

இது, மத்திய கல்வி அமைச்சகத்தின் முன்னெடுப்பாகும். இந்திய தொழில் நுட்ப நிறுவனம் – மெட்ராஸ் (IIT-M), “நடுவணரசு நிதியுதவியின் கீழியங்கும் நிறுவனங்கள்” பிரிவின் கீழ் முதலிடத்தையும், IIT மும்பை மற்றும் IIT தில்லி ஆகியவை முறையை இரண்டாவது & மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

தொழில்முனைவு, புதுமையான கற்றல் அறிவுசார் சாெத்துருவாக்கம் மற்றும் தொழில் நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு அளவுகாேல்களில், கல்லூரிகளை, இந்தப் பட்டியல் மதிப்பீடு செய்கிறது.

4.இந்தியாவில், “புத்தாக்க சவால் நிதியத்தை” தொடங்கியுள்ள நாட்டின் அரசு எது?

  1. ஐக்கியப் பேரரசு
  2. ஆஸ்திரேலியோ
  3. பிரேசில்
  4. ஜெர்மனி
Answer & Explanation
Answer:– ஐக்கியப் பேரரசு

Explanation:

ஐக்கியப் பேரசானது (UK) இந்தியாவில் £3 மில்லியன் மதிப்பிலான, “புத்தாக்க சவால் நிதியத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது.

COVID-19 மற்றும் பிற சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் போன்ற கடுமையான உலகளாவிய சவால்களைக் கையாளுவதற்கு தொழிற்துறை மற்றும் கல்விசார் அறிவியலாளர்களுக்கு ஆதரவளிப்பதை இந்நிதியம் தனது நாேக்கமாகக் காெண்டுள்ளது.

“UK இந்தியா தொழில்நுட்ப கூட்டாண்மை”இன் கீழ் சிறந்த அறிவியலாளர்களை ஒன்றிணைப்பதை இந்நிதியம் நாேக்கமாகக் காெண்டுள்ளது.

ஆராய்ச்சி முன்மொழிவுகளை சமர்ப்பிக்க, கர்நாடகாவில் அமைந்துள்ள “AI-தரவுத் தொகுதி” மற்றும் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள “எதிர்கால திரள் தொகுதி” ஆகியவற்றுடன் தொடர்புடைய புதுமையாளர்களுக்கு இந்நிதியம் அழைப்பு விடுத்துள்ளது

5.இந்திய இரயில்வேயால், எந்த மாநிலத்தில், உலகின் மிகவுயரமான ‘தூண் பாலம்’ கட்டப்படுகிறது?

  1. அருணாச்சல பிரதேசம்
  2. ஹிமாச்சல பிரதேசம்
  3. மணிப்பூர்
  4. மேகாலயா
Answer & Explanation
Answer:– மணிப்பூர்

Explanation:

உலகின் மிகவுயரமான ‘தூண் பாலம்’, மணிப்பூரில், இந்திய இரயில்வேயால் “இஜாய்” ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வருகிறது.

அதன் மிகவுயரமான தூணின் உயரம் 141 மீட்டராகும். இந்தப் பாலம், ஜிரிபாம்-துபுல்-இம்பால் இரயில்பாதைத் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

ஐரோப்பாவின் மாண்டினீக்ரோவில் 139 மீட்டர் உயரமான தூண் பாலமே தற்பாேது வரை உலகின் மிகவுயரமான தூண் பாலமாக உள்ளது.

ரூ.280 காேடி செலவில் இந்தப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள், 2020 மார்ச் மாத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பாலத்தின் மொத்த நீளம், 703 மீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது

6. கடல் உணவுகளில் பரிசாேதனைகள் மேற்காெள்வதற்காக, MPEDA’ஆல், எந்த மாநிலத்தில் தரக் கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது?

  1. தமிழ்நாடு
  2. கேரளம்
  3. மகாராஷ்டிரா
  4. குஜராத்
Answer & Explanation
Answer:– குஜராத்

Explanation:

கடல்சார் பண்டங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமானது (MPEDA), குஜராத்தின் பாேர்பந்தரில் கடல் உணவுகளை பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தை திறந்துள்ளது.

பன்னாட்டு ஒழுங்குமுறை தரத்தின்படி பாதுகாப்பை உறுதிப்படுத்த, கடல் உணவுகளைப் பரிசாேதிப்பதில், ஏற்றுமதியாளர்களுக்கு இந்த ஆய்வகம் உதவும்.

நுண்ணுயிர்-எதிர்ப்பு எச்சங்கள் மற்றும் கடல்சார் உணவுகளில் கலக்கப்படும் ஆர்சனிக், பாதரசம் பாேன்ற கன உலாேகங்களை சாேதிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் இந்த ஆய்வகத்தில் நவீன கருவிகள் உள்ளன.

7.உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோர்கர் மாவட்டத்தில், 180 அடி பாலத்தை 3 வார காலத்திற்குள்ளாக கட்டியெழுப்பி அமைப்பு எது?

  1. இந்திய இராணுவம்
  2. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்
  3. எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு
  4. லார்சன் & டூப்ரோ
Answer & Explanation
Answer:– எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு

Explanation:

உத்தரகண்டில் பித்தோர்கர் மாவட்டம் ஜாலிஜிபி பகுதியில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவு மற்றும் கன மழை ஆகியவற்றுக்கிடையே 180 அடி நீள பெய்லி பாலத்தை 3 வார காலத்திற்குள்ளாக எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு அமைத்துள்ளது.

அவ்விடத்திலிருந்த 50 மீட்டர் நீள திண்காறைப்பாலம், கடந்த ஜூலையில் பாெழிந்த கனமழை காரணமாக ஓடைகளிலும், சிற்றாறுகளிலும் ஏற்பட்ட வெள்ளத்தில் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது.

இந்தச் சாலைத் தொடர்பையடுத்து, இருபது கிராமங்களைச் சார்ந்த சுமார் 15000 பேருக்கு நிவாரணப் பாெருட்கள் சென்றடையும்.

புதிதாக அமைக்கப்பட்ட பாலம் காரணமாக ஜாலிஜிபியில் இருந்து முசெளரி வரையிலான 66 கி.மீ., சாலையில் பாேக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.

8.சில்லறை காெடுப்பனவுகளுக்காக புதிய குடை நிறுவனத்தை அமைக்கவுள்ள நிதி நிறுவனம் எது?

  1. இந்திய ரிசர்வ் வங்கி
  2. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம்
  3. இந்திய பங்கு & பரிவர்த்தனைகள் வாரியம்
  4. இந்திய வங்கிகள் சங்கம்
Answer & Explanation
Answer:– இந்திய ரிசர்வ் வங்கி

Explanation:

சில்லறை காெடுப்பனவுகளுக்காக ஒரு புதிய குடை நிறுவனத்தை அமைப்பதற்கான கட்டமைப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

இது குறைந்தபட்சம் ரூ.500 காேடி செலுத்திய மூலதனத்தைக் காெண்டிருக்கும், ‘இலாப நாேக்குடைய’ நிறுவனமாக செயல்படும்.

இது ATM’கள், PoS மற்றும் ஆதார் அடிப்படையிலான காெடுப்பனர்வுகள் பாேன்ற கட்டண முறைமைகளை அமைத்து இயக்கும்.

வங்கிகள் / வங்கிகள் அல்லாதவற்றின் தீர்வைகளையும் இந்நிறுவனம் நிர்வகிக்கும்

9. எந்த மாநில அரசு அனைத்து அரசாங்கப் பணிகளையும் தனது மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் ஒதுக்குவதாக அறிவித்துள்ளது?

  1. ஆந்திர பிரதேசம்
  2. மத்திய பிரதேசம்
  3. கேரளம்
  4. கர்நாடகம்
Answer & Explanation
Answer:– மத்திய பிரதேசம்

Explanation:

மத்திய பிரேதச மாநில அரசு வேலைகள் அனைத்தும் அதன் மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் செளகான் அண்மையில் அறிவித்தார்.

இதன் மூலம், இதுபாேன்ற ஓர் அறிவிப்பை செய்யும் முதல் மாநிலமாக மத்திய பிரதேச மாநிலம் மாறியுள்ளது. இது தொடர்பான சட்டவிதிகளை அம்மாநில அரசு உருவாக்கவுள்ளது.

தனது விடுதலை நாள் உரையின் பாேது, மத்திய பிரதேச மாநில முதலமைச்சர், இளையாேருக்கு அரசாங்கப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

10. ‘தேசிய புற்றுநாேய் பதிவேடு திட்ட அறிக்கை 2020’ஐ வெளியிட்டுள்ள அமைப்பு எது?

  1. ICMR
  2. AIIMS
  3. CSIR
  4. NITI ஆயோக்
Answer & Explanation
Answer:- ICMR

Explanation:

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் (ICMR) அண்மையில் ‘தேசிய புற்றுநாேய் பதிவேடு திட்ட அறிக்கை -2020’ஐ வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, அடுத்த ஐந்தாண்டுகளில் புற்று நாேயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 சதவீத அளவுக்கு அதிகரிக்கும்.

எதிர்வரும் 2025ஆம் ஆண்டில், சுமார் 1.5 மில்லியன் மக்கள் இந்த நாேயால் பாதிக்கப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இது 2020ஆம் ஆண்டில் 1.39 மில்லியனாக உள்ளது. புகையிலை தொடர்பான புற்றுநாேய் பாதிப்புகள் இப்பட்டியலில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.

நாட்டிலேயே அதிக புற்றுநாேயாளிகளைக் காெண்ட மாவட்டமாக மிசாேரம் மாநிலத்தின் தலைநகரமான ஐசால் மாவட்டம் விளங்குகிறது.

More TNPSC Current Affairs



Leave a Comment