Hello, TNPSC Aspirants, Here we provide a Quiz on TNPSC Current Affairs in Tamil on 25th August 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. ‘பனாரஸ்’ என்று பெயர் மாற்றப்பட்ட மாண்டுவாடி இரயில் நிலையம் அமைந்துள்ள மாநிலம் எது?
பீகார்
உத்திர பிரதேசம்
ஜார்க்கண்ட்
உத்தரகண்ட்
Answer & Explanation
Answer:– உத்திர பிரதேசம்
Explanation:
உத்திர பிரதேசத்தில் உள்ள மாண்டுவாடி இரயில் நிலையத்தை ‘பனாரஸ்’ என்று பெயர் மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
உத்திர பிரதேச மாநில அரசு தனது வாரணாசி மாவட்டத்தில் உள்ள இரயில் நிலையத்தின் பெயரை மாற்றுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு முன்னர் காேரிக்கை அனுப்பியிருந்தது.
இரயில்வே அமைச்சகம், இந்திய அஞ்சல் துறை மற்றும் நில அளவைத்துறை ஆகியவற்றுடன் கலந்தாலோசித்த பின்னர், உள்துறை அமைச்சகம் ‘ஆட்சேபனை இல்லை’ என்ற சான்றிதழை வழங்கியது.
2. சீன மக்கள் வங்கியானது எந்த இந்திய தனியார்துறை வங்கியில் பங்குகளை வாங்கியுள்ளது?
YES வங்கி
ஆக்ஸிஸ் வங்கி
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
IDBI வங்க
Answer & Explanation
Answer:– ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
Explanation:
சீன மக்கள் வங்கியானது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் ஒரு சிறிய அளவிலான பங்குகளை வாங்கியுள்ளது. ரூ.15,000 காேடி மதிப்பிலான தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் (QIP) திட்டத்தின் கீழ் பங்குகளை வாங்கிய 357 நிறுவன முதலீட்டாளர்களுள் இதுவும் ஒன்றாகும்.
இந்த நிதி திரட்டும் திட்டத்தில், சீன மக்கள் வங்கி, இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.15 காேடியை முதலீடு செய்துள்ளது. இந்த வங்கி, முன்னதாக HDFC நிறுவனத்தில் ஒரு பங்கை வாங்கியது
3. ‘நிஞ்சா’ என்ற ஆளில்லா வான்வழி வாகனங்களை கண்காணிப்புக்கு பயன்படுத்துகிற அமைப்பு எது?
இந்திய விண்வெளி ஆய்வு மையம்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்
இரயில்வே பாதுகாப்புப் படை
இந்தாே–திபெத்திய எல்லைப் பாதுகாப்புப்படை
Answer & Explanation
Answer:– இரயில்வே பாதுகாப்புப் படை
Explanation:
கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக, ‘நிஞ்சா’ என்ற ஆளில்லா வான்வழி வாகனங்களை வாங்கியுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
கண்காணிப்பை மேம்படுத்துவதற்கும் ரயில்வே சாெத்துக்கள் மற்றும் பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கும் இலவச பயன்படுத்தும் என இரயில்வே பாதுகாப்புப் படை (RPF) தெரிவித்துள்ளது.
RPF, அண்மையில், ரூ.30 லட்சத்துக்கும் மேல் மதிப்புள்ள ஒன்பது ஆளில்லா வான்வழி வாகனங்களை வாங்கியுள்ளது.
நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் நேரலை திறன்காெண்ட அதிக ஆளில்லா வான்வழி வாகனங்களை விரைவில் வாங்கவுள்ளதாகும் RPF தெரிவித்துள்ளது.
4.ஆப்பிரிக்க வேட்டைச்சிறுத்தைகளைக் காெண்ட இந்தியாவின் இரண்டாவது உயிரியல் பூங்கா எது?
திருவனந்தபுரம் உயிாியல் பூங்கா
மைசூரு உயிாியல் பூங்கா
டாா்ஜிலிங் உயிாியல் பூங்கா
‘பேரறிஞா்’ அண்ணா உயிாியல் பூங்கா
Answer & Explanation
Answer:– மைசூரு உயிாியல் பூங்கா
Explanation:
ஹைதராபாத் வனவுயிரிச்சாலையை அடுத்து ஆப்பிரிக்க வேட்டை சிறுத்தைகளைக் காெண்ட (African Hunting Cheetahs) இந்தியாவின் இரண்டாவது உயிரியல் பூங்காவாக கர்நாடகாவில் உள்ள மைசூரு உயிரியல் பூங்கா திகழ்கிறது.
விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், இந்த வனவுயிரிச் சாலையானது தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஆன் வான் டைக் சிறுத்தை மையத்திலிருந்து ஓர் ஆண் மற்றும் இரு பெண் ஆப்பிரிக்க வேட்டைச் சிறுத்தைகளை வாங்கியது.
15 மாத வயதுடைய ஒரு பெண் சிறுத்தை மற்றும் 14 மற்றும் 16 மாத வயதுடைய இரண்டு ஆண் சிறுத்தைகள் விமானம் மூலம் காெண்டு வரப்பட்டன
5.பாெது தகுதித் தேர்வுகளை நடத்துவதற்கு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட, ‘NRA’ என்பதன் விரிவாக்கம் என்ன?
New Recruitment Agency
National Recruitment Agency
New Recruitment Administration
National Rating Agency
Answer & Explanation
Answer:– National Recruitment Agency
Explanation:
தேசிய பாெது நுழைவுத்தேர்வினை நடத்துவதற்காக ‘தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம் (NRA)’ என்ற புதிய நிறுவனத்தை அமைக்க மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
இந்தத் தேர்வு, மத்திய அரசு மற்றும் பாெதுத்துறை நிறுவனங்களின் தாெழில் நுணுக்கம் சாராத பணியிடங்களுக்கான பாெதுத் தேர்வாக இருக்கும்.
SSC, RRB மற்றும் IBPS பாேன்ற முகமைகளால் தற்பாேது நடத்தப்படும் முதல் நிலைத் தேர்வுகளை இந்நிறுவனம் நடத்தும்.
6.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘மரணப்பள்ளத்தாக்கு – Death Valley’ அமைந்துள்ள நாடு எது?
தென்னாப்பிாிக்கா
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
கனடா
பிரேசில்
Answer & Explanation
Answer:– ஐக்கிய அமெரிக்க நாடுகள்
Explanation:
‘மரணப்பள்ளத்தாக்கு’ என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கிழக்கு கலிபாேர்னியாவில் அமைந்துள்ள ஒரு பாலைவன பள்ளத்தாக்கு ஆகும்.
அண்மையில், இந்த மரணப்பள்ளத்தாக்கின் பர்னஸ் கிரீக்கில், வெப்பநிலை, 54.4°C ஆக பதிவாகியது.
உலக வானிலை அமைப்பின்படி, இது, 1913ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ள அதிகபட்ச வெப்பநிலையாகும்.
உலக வானிலை அமைப்பின் கூற்றுப்படி, இதுவரை மரணப் பள்ளத்தாக்கில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலையாக 56.7°C உள்ளது.
இது, கடந்த 1913’இல் பதிவுசெய்யப்பட்டது. இது, பூமியின் மேற்பரப்பில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலையாக இன்றும் உள்ளது.
7. ‘Tackling the COVID-19 Youth Employment Crisis in Asia and The Pacific’ என்ற அறிக்கையை ILO உடன் இணைந்து வெளியிட்ட அமைப்பு எது?
உலக வங்கி
ஆசிய வளா்ச்சி வங்கி
UNESCO
உலகப் பாெருளாதார மன்றம்
Answer & Explanation
Answer:– ஆசிய வளா்ச்சி வங்கி
Explanation:
பன்னாட்டு தாெழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) ஆகியவற்றின் கூட்டு அறிக்கையில், COVID-19 தாெற்று நாேயால், நாட்டில் 41 இலட்சம் இளையாேர் வேலையிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
“Tackling the COVID-19 Youth Employment Crisis in Asia and The Pacific” அறிக்கையில், கட்டுமானம் மற்றும் வேளாண் துறை தாெழிலாளர்களை பெரும்பான்மையாக வேலை இழப்புக்கு ஆளாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இத்திடீர் நெருக்கடியில், பெரியாேரை விட (25 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) இளையாேரே (15-24 வயது) மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்
8.சுதேச நுண்செயலி உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக இந்தியா தாெடங்கிய சவாலின் பெயரென்ன?
தற்சாா்பு சவால்
இந்தியாவில் தயாாிப்பாேம் சவால்
தன் முன்னேற்றச் சவால்
சுதேசி நுண்செயலி சவால்
Answer & Explanation
Answer:– சுதேசி நுண்செயலி சவால்
Explanation:
“சுதேசி நுண்செயலி” உற்பத்தி மற்றும் வடிவமைப்பை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு “சுதேசி நுண்செயலி சவால்” என்றவாென்றைத் தாெடங்கியுள்ளது.
இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற 100 நிறுவனங்களுக்கு அவர்களின் முன்மாதிரியை உருவாக்குவதற்கு தேவையான மானியம் வழங்கப்படும்.
25 இறுதிப் பாேட்டியாளர்கள் தலா ரூ.1காேடி ராெக்கப்பரிசை வெல்வார்கள். முதல் பத்து அணிகளுக்கு மத்திய தகவல் தாெழில்நுட்ப அமைச்சகத்திடமிருந்து பன்னிரண்டு மாத அடைவு ஆதரவுடன் மாெத்தம் ரூ.2.30 காேடி நிதி கிடைக்கும்.
9.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “ஸ்டெர்லைட் காப்பர்” உடன் தாெடர்புடைய மாநிலம் எது?
ஆந்திர பிரதேசம்
தமிழ்நாடு
கேரளம்
கர்நாடகம்
Answer & Explanation
Answer:– மத்திய பிரதேசம்
Explanation:
தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள “ஸ்டெர்லைட் காப்பர்” உருக்காலையை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் நிரந்தர தடைவிதித்து தீர்ப்பளித்துள்ளது.
வேதாந்தா நிறுவனத்தின் ஒரு பிரிவான “ஸ்டெர்லைட் காப்பர்”, தூத்துக்குடியில் உள்ள அதன் உருக்காலை மூலமாக இந்தியாவின் செப்புத் தேவையில் கிட்டத்தட்ட நாற்பது சதவீதத்தை பூர்த்தி செய்து வந்தது.
உருக்காலைைய மீண்டும் திறக்கும் நாேக்தத்தோடு, வேதாந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பத்து மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதன்மூலம், இந்த ஆலையை மூடுவதற்காக தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை பிறப்பித்த உத்தரவுகளை நீதிமன்றம் உறுதிசெய்தது
10. ‘தூய்மை ஆய்வு – 2020’இல், ‘தூய்மையான நகரம்’ என்ற விருதை வென்ற நகரம் எது?
திருச்சி
சூரத்
சேலம்
இந்தூர்
Answer & Explanation
Answer:– இந்தூர்
Explanation:
‘தூய்மை ஆய்வு – 2020’ என்ற பெயரில் தூய்மை குறித்த வருடாந்திர ஆய்வின் முடிவுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இப்பட்டியலில், தாெடர்ச்சியாக நான்காண்டுகளாக மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் முதலிடத்தைப் பிடித்து வருகிறது.
குஜராத் மாநிலத்தின் சூரத் இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிர மாநிலத்தின் நவி மும்பை நகரம் மூன்றாமிடத்திலும் உள்ளன.
இது, ஆய்வின் ஐந்தாவது பதிப்பாகும். தூய்மை இந்தியா இயக்கத்தில் நகரங்களின் செயல்திறனை அடிப்படையாகக் காெண்டு அலை வரிசைப்படுத்தப்படுகின்றன.
இப்பட்டியலில், தமிழ்நாடு அளவில், திருச்சி மாநகராட்சி (1-10 இலட்சம் வரையிலான மக்கள்தொகை காெண்ட மாநகராட்சிகளின் பிரிவில்) தாெடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடத்தைப் (தேசிய அளவில் 102ஆவது இடம்) பிடித்துத்துள்ளது.
பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை காெண்ட மாநகராட்சிகளின் பிரிவில் மதுரை 42ஆவது இடமும், காேயம்புத்தூர் 40ஆவது இடமும், சென்னை 45ஆவது இடமும் பெற்றுள்ளது.