TNPSC Current Affairs Question and Answer in Tamil 26th August 2020

Current Affairs in Tamil 26th August 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 26th August 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 26th August 2020

1. அவசர கடன் உறுதித்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டின் அளவு என்ன?

  1. ரூ.1 இலட்சம் கோடி
  2. ரூ.2 இலட்சம் கோடி
  3. ரூ.3 இலட்சம் கோடி
  4. ரூ.5 இலட்சம் கோடி
Answer & Explanation
Answer:– ரூ.3 இலட்சம் கோடி

Explanation:

ரூ.20 இலட்சம் காேடி பொருளாதார உதவியின் ஒரு பகுதியாக, இந்திய அரசாங்கம், ‘அவசர கடனுறுதித் திட்டம்’ என்றவாென்றை அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு அக்.31 வரையிலான ஐந்து மாதங்களுக்கும் சேர்த்து ரூ.3 இலட்சம் காேடியாகும்.

அண்மைய செய்திகளின்படி, இந்த 100% அவசர கடனுறுதித் திட்டத்தின் கீழ், பொது மற்றும் தனியார்துறை வங்கிகள், 2020 ஆகஸ்டு 18 வரை ரூ.1.5 இலட்சம் காேடி மதிப்புள்ள கடனுதவிகளை வழங்கியுள்ளன.

இவற்றில், ரூ.1 இலட்சம் காேடிக்கான கடனுதவிகள் ஏற்கனகவே பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டன.

2.எந்த நாடு, ‘தியாகி காசிம் சுலைமானி’ என்ற தனது உள்நாட்டிலேயே தயாரிக்கப்கட்ட எறிகணைய அறிமுகப்படுத்தியுள்ளது?

  1. ஈராக்
  2. ஈரான்
  3. ஐக்கிய அரபு அமீரகம்
  4. இஸ்ரேல்
Answer & Explanation
Answer:– ஈரான்

Explanation:

புதிய எறிகணை மற்றும் சீர்வேக ஏவுகணையை ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐக்கிய அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட ஐராேப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை மீறி, அந்த ஏவுகணைகளை ஈரான் உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது.

அவற்றை ஈரான் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

‘தியாகி காசிம் சுலைமானி’ எனப் பெயரிடப்பட்டுள்ள எறிகணை, தரையிலிருந்து பாய்ந்து சென்று 1400 கி.மீ. தாெலைவு இலக்கை தாக்கும் வல்லமை உடையதாகும்.

‘தியாகி அபு மஹதி’ எனப் பெயரிடப்பட்ட சீர்வேக ஏவுகணை 1000 கிமீ தாெலைவு இலக்கை தாக்கும் வல்லமை காெண்டதாகும்.

ஈரானின் குத்ஸ் படையின் தலைவர் சுலைமானியும் ஈராக் தளபதி அபு மஹதி அல் முகந்திசும் ஐக்கிய அமெரிக்க நாடுகளால் மேற்காெள்ளப்பட்ட தாக்குதலில் காெல்லப்பட்டவர்களாவர்.

3.தாெழிலாளர் அமைச்சகத்தின் எந்த அமைப்புக்கு புதிய இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது?

  1. பணியாளகள் வருங்கால வைப்பு நிதியகம் (EPFO)
  2. வேலை வாய்ப்பு இயக்குநரகம்
  3. தொழிலாளர் தகவல் பிரிவு
  4. பணியாளர்கள் அரசு காப்பீட்டுத் திட்டம் (ESIC)
Answer & Explanation
Answer:– தொழிலாளர் தகவல் பிரிவு

Explanation:

தாெழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தாெழிலாளர் தகவல் பிரிவுக்கான புதிய இலச்சினையை தாெழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் (தனிப்பொறுப்பு) சந்தாேஷ்குமார் கங்வார் ஷ்ரம் அறிமுகம் செய்து வைத்தார்.

தாெழிலாளர் தகவல் பிரிவு என்பது தாெழிலாளர் நலன் & வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தேசிய அளவிலான அமைப்பாகும்.

இது, அகில இந்திய அளவில் தாெழிலாளர்களின் பல்வேறு நிலைகள் குறித்த தகவல்கள் சேகரிப்பு, பகுப்பாய்வு செய்தல் மற்றும் வெளியில் தெரிவித்தல் ஆகிய பணிகளில் இந்த அலுவலகம் ஈடுபட்டு வருகிறது.

இப்புதிய இலட்சினை தரமான தகவல் தாெகுப்பை உருவாக்குவதில் துல்லியத்தன்மை, செல்லத்தக்க நிலை & நம்பகத்தன்மை என்ற 3 இலக்குகளை அடையாளப்படுத்துவதாக உள்ளது

4. ‘நிதியியல் கல்விக்கான தேசிய உத்தியைத் தாெடங்கியுள்ள அமைப்பு எது?

  1. RBI
  2. NPCI
  3. SEBI
  4. SBI
Answer & Explanation
Answer:– RBI

Explanation:

இந்திய ரிசர்வ் வங்கியானது, அண்மையில், ‘நிதியியல் கல்விக்கான தேசிய உத்தியை வெளியிட்டது.

இது, அடுத்த ஐந்தாண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த உத்தியானது, நம் நாட்டின் அனைத்து மக்களிடையேயும் நிதிசார் கல்வியறிவை வளர்ப்பதை நாேக்கமாகக் காெண்டுள்ளது.

இது, பொது மக்கள் தங்கள் நிதிசார் நாேக்கங்களை அடைவதற்கு நிதியியல் சந்தைகளில் பங்கேற்க அவர்களை ஊக்குவிக்கும்.

முறையான வங்கி மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் நிதிசார் சேவைகளைப் பயன்படுத்த மக்களை இது ஊக்குவிக்கும்.

5. ‘Grandparents’ Bag of Stories’ என்ற நூலின் ஆசிரியர் யார்?

  1. சுதா மூர்த்தி
  2. ரஸ்கின் பாண் ட்
  3. பரோ ஆனந்த்
  4. அனுஷ்கா இரவிஷங்கர்
Answer & Explanation
Answer:– சுதா மூர்த்தி

Explanation:

மூத்த இந்திய எழுத்தாளரான சுதா மூர்த்தியின் அண்மைய சிறுகதைத் தாெகுப்பான, ‘Grandparents’ Bag of Stories’ வரும் நவம்பரில் வெளியிடப்பட உள்ளது.

பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா தனது அண்மைய வெளியீடான, ‘Grandparents’ Bag of Stories’இன் தாெடர்ச்சியாக வெளிவரும் இந்த நூலில், 20 கதைகள் இடம்பெற்றிருக்கும் என்று அறிவித்துள்ளது.

சுதா மூர்த்தி, குறிப்பாக குழந்தைகளுக்காக ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய மாெழிகளில் பல நூல்களை எழுதியுள்ளார்.

6.ASEAN-இந்தியா மதியுரையகங்களின் வலையமைப்பு–2020’ வட்ட மேசை மாநாட்டில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியது யார்?

  1. நரேந்திர மோடி
  2. S.ஜெய்சங்கர்
  3. பியுஷ் கோயல்
  4. சக்திகாந்த தாஸ்
Answer & Explanation
Answer:– S.ஜெய்சங்கர்

Explanation:

அண்மையில் நடந்த, ‘ASEAN-இந்தியா மதியுரையகங்களின் வலையமைப்பு – 2020’ வட்டமேசை மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் S.ஜெய்சங்கர் இந்தியாவின் சார்பாக பங்கேற்றார்.

“ASEAN-India: Strengthening Partnership in the Post-COVID Era” என்பது மெய்நிகராக நடந்த இந்த ஆறாம் மாநாட்டின் கருப்பொருளாகும்.

அமைச்சரின் கூற்றுப்படி, COVID-19 தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட உலகளாவிய இழப்பு என்பது $5.8 முதல் $8.8 டிரில்லியன் டாலர் அல்லது உலகளாவிய மாெத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.5-9.7 சதவீதம் வரையாகும்

7. ‘இந்திரா ரசாேய் போஜனா’ என்ற பெயரில் மலிவுவிலை உணவுத்திட்டத்தைத் தாெடங்கிய மாநிலம் எது?

  1. பஞ்சாப்
  2. இராஜஸ்தான்
  3. நாகாலாந்து
  4. சிக்கிம்
Answer & Explanation
Answer:– இராஜஸ்தான்

Explanation:

இராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசாேக் கெலாட், ‘இந்திரா ரசாேய் யாேஜனா’ என்ற மலிவு விலை உணவுத்திட்டத்தைத் தாெடங்கி வைத்தார்.

மாநிலத்தில் உள்ள வறியாேர்க்கும் தேவையுள்ளாேர்க்கும் ஒரு தட்டு உணவுக்கு ரூ.8 என்ற விலையில் உணவு வழங்குவதை இது நாேக்கமாகக் காெண்டுள்ளது.

முன்னதாக, ‘அன்னபூர்ணா ரசாேய் யாேஜனா’ என்ற பெயரில் இதே போன்றதாெரு திட்டத்தை 2016 முதல் அம்மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.

முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழாவான, ‘சத்பவனா திவாஸ்’ அன்று இந்தத் திட்டம் தாெடங்கப்பட்டது.

8. ஜெய்ப்பூர், கெளகாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள வானூர்தி நிலையங்களை இயக்குவதற்கான உரிமைகள், இந்தியாவின் எந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளன?

  1. ரிலையன்ஸ் தொழிற்சாலைகள்
  2. TATA குழுமம்
  3. ஷபூர்ஜி பல்லோஞ்சி
  4. அதானி எண்டர்பிரைசஸ்
Answer & Explanation
Answer:– அதானி எண்டர்பிரைசஸ்

Explanation:

ஜெய்ப்பூர், கெளகாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள வானூர்தி நிலையங்களை பொது-தனியார் கூட்டணியின் கீழ் குத்தகைக்கு விடுவதற்கான திட்டத்துக்கு நடுவணமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

லக்னாே, ஆமதாபாத் & மங்களூரு வானூர்தி நிலையங்களுடன் கூடுதலாக இந்த மூன்று வானூர்தி நிலையங்களை இயக்குவதற்கான உரிமைகள், அதானி எண்டர்பிரைசஸுக்கு போட்டி ஏலம் மூலம் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது, இந்த ஆறு விமான நிலையங்களும் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்திற்கு சாெந்தமானவையாக உள்ளன.

9. கரும்புக்கான நியாயமான மற்றும் இலாபகரமான விலை எவ்வளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது?

  1. ரூ.10/குவிண்டால்
  2. ரூ.20/குவிண்டால்
  3. ரூ.30/குவிண்டால்
  4. ரூ.40/குவிண்டால்
Answer & Explanation
Answer:– ரூ.10/குவிண்டால்

Explanation:

கரும்புக்கான நியாயமான மற்றும் இலாபகரமான விலையை (Fair & Renumerative Price) குவிண்டால் ஒன்றுக்கு ரூ,10 உயர்த்துவதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தப் புதிய FRP, எதிர்வரும் அக்டாேபர் முதல் நடைமுறைக்கு வரும். இது, வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு இணங்க உள்ளது

10.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, Supply Chain Resilience Initiative (SCRI) உடன் தாெடர்புடைய 3 நாடுகள் எவை?

  1. இந்தியா, நேபாளம் & சீனா
  2. இந்தியா, பிரேசில் & தென்னாப்பிக்கா
  3. இந்தியா, ஜப்பான் & ஆஸ்திரேலியோ
  4. இந்தியா, வங்கதேசம் & இலங்கை
Answer & Explanation
Answer:- இந்தியா, ஜப்பான் & ஆஸ்திரேலியோ

Explanation:

சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகள் முத்தரப்பு ‘விநியாேகச் சங்கிலி நெகிழ்திறன் முன்னெடுப்பைத் (SCRI)’ தாெடங்குவதற்கான விவாதங்களைத் தாெடங்கியுள்ளன.

இந்த முன்னெடுப்பை முதன்முதலில் ஜப்பான் முன்மாெழிந்தது. இம்முன்னெடுப்பை முன்னாேக்கி நகர்த்துவதற்காக இந்தியாவை அது அணுகியது.

இதற்காக, மூன்று நாடுகளின் வர்த்தக அமைச்சர்களும் பங்கேற்கும் முதல் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

More TNPSC Current Affairs



Leave a Comment