Current Affairs in Tamil 27th August 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 27th August 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. சேவையிலிருக்கும் மற்றும் ஓய்வுற்ற அனைத்து இராணுவ வீரர்களுக்கும் கிராமப் பஞ்சாயத்து சொத்து வரியிலிருந்து விலக்கு அளிக்க முடிவு செய்துள்ள மாநிலம் எது?
- தமிழ்நாடு
- கேரளம்
- மகாராஷ்டிரா
- கோவா
Answer & Explanation
Answer:– மகாராஷ்டிரா
Explanation:
சேவையிலிருக்கும் மற்றும் ஓய்வுற்ற இராணுவ வீரர்கள் அனைவருக்கும் கிராமப் பஞ்சாயத்து சொத்து வரியிலிருந்து விலக்கு அளிக்க மகாராஷ்டிரா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, தீர்மானம் ஒன்றையும் அம்மாநில அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. முன்னதாக, இந்த விலக்கு, வீரதீரச் செயலுக்காக விருது பெற்றாேருக்கும் அவர்களைச் சார்ந்தோருக்கும் மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது.
தற்பாேதைய முடிவில், இது அவைத்து சேவையிலுள்ள மற்றும் ஓய்வுற்ற இராணுவ வீரர்களுக்குமாய் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
2.நாடாளுமன்ற அவைத்தலைவர்களின் ஐந்தாவது உலக மாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் யார்?
- நரேந்திர மாேடி
- ஓம் பிா்லா
- நிா்மலா சீதாராமன்
- பியுஷ் கோயல்
Answer & Explanation
Answer:– ஓம் பிா்லா
Explanation:
நாடாளுமன்ற அவைத் தலைவர் ஓம் பிர்லா, ஐந்தாவது உலக நாடாளுமன்ற பேச்சாளர்களின் தொடக்க விழாவில் கலந்து காெண்டார்.
மெய்நிகராக இரண்டு நாட்களுக்கு நடைபெற்ற இந்த மாநாட்டை, நாடாளுமன்றங்களுக்கு இடையேயான சங்கம், ஜெனீவா மற்றும் ஆஸ்திரியாவின் நாடாளுமன்றம் ஆகியவை இணைந்து நடத்திடன.
இதனை ஐ.நா. அவை ஆதரிக்கிறது. “Parliamentary leadership for more effective multilateralism that delivers peace and sustainable development for the people and planet – மக்களுக்கும் காேளுக்கும் அமைதி மற்றும் நீடித்த வளர்ச்சியை வழங்கும் மிகவும் திறமைமிக்க பல தரப்பட்ட நாடாளுமன்ற தலைமை” என்பது இந்த மாநாட்டுக்கான கருப்பாெருளாகும்.
3.நிலவின் சுற்றுப்பாதையில் ஒரு முழு ஆண்டை நிறைவு செய்துள்ள இந்திய விண்வெளித் திட்டம் எது?
- சந்திரயான்–1
- சந்திரயான் –2
- இந்திய சந்திர திட்டம் – 1
- இந்திய சந்திர திட்டம் – 2
Answer & Explanation
Answer:– சந்திரயான் –2
Explanation:
நிலவின் தென் துருவத்தில் ஓர் ஊர்தியை சேதமின்றித் தரையிறக்கும் இந்தியாவின் முதல் திட்டம் சந்திரயான்-2 ஆகும்.
இது, நிலவுக்கு விண்கலம் அனுப்பும் இந்தியாவின் இரண்டாவது திட்டமாகும். இது சமீபத்தில், நிலவின் சுற்றுப்பாதையில் ஒரு முழு ஆண்டை நிறைவு செய்தது.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் அதன் அனைத்துக் கருவிகளும் சிறப்பாக செயல்படுவதாகவும்; மேலும் ஏழு ஆண்டுகள் செயல்படுவற்கு பாேதுமான எரிபாெருள் அதில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
4.மூன்றாம் நிலை செயலாக்க மையங்களை நிறுவுதற்காக, பழங்குடியினர் விகார அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ள திட்டத்தின் பெயரென்ன?
- Trifood
- Tribe India
- MFP Enhance
- Tribal Value
Answer & Explanation
Answer:– Trifood
Explanation:
பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா, பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பு இந்தியா நிறுவத்தின் “முவ்வுணவு (Trifood) திட்டத்தின்” மூன்றாம் நிலை செயலாக்க மையங்களை மகாராஷ்டிரத்தில் உள்ள இராய்காட் மற்றும் சத்தீஸ்கரில் உள்ள ஜகதல்பூர் ஆகிய இடங்களில் மெய்நிகராக திறந்துவைத்தார்.
த்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்துடன் இணைந்து பழங்குடியினர் நல அமைச்கத்தின், TRIFED நிறுவனத்தால் செயல்படுத்தப்படுவதால்,
பழங்குடியின சேகரிப்பாேரால் சேகரிக்கப்பட்ட சிறு வனவுற்பத்தியை, சிறப்பாகப் பயன்படுத்துவதன் மூலமும், அதன் மதிப்பைக் கூட்டுவதன் மூலமும் பழங்குடியினரின் வருமானத்தை மேம்படுத்துவதை “TRIFOOD” திட்டம் நாேக்கமாகக் காெண்டுள்ளது
5.இலவச டிஜிட்டல் திறன் பயிற்சி அளிப்பதற்காக தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் (NSDC) கூட்டு சேர்ந்துள்ள நிறுவனம் எது?
- மைக்ராேசாப்ட்
- கூகிள்
- IBM
- ஆப்பிள்
Answer & Explanation
Answer:– IBM
Explanation:
முன்னணி பன்னாட்டு நிறுவனமான IBM இந்தியா, தேசியதிறன் மேம்பாட்டுக் கழகத்துடன் (NSDC) கூட்டிணைந்து இலவச டிஜிட்டல் கல்வி குறித்த பயிற்சியை வழங்கவுள்ளது.
இணைய பாதுகாப்பு, தொகுப்புச் சங்கிலி, செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரக்கற்றல் மற்றும் தொழிற்முறை மேம்பாட்டுத் திறன் பாேன்ற அண்மைய தொழில்நுட்பங்களில் இந்தப் பயிற்சி தனது கவனத்தைச் செலுத்துகிறது.
IBM உருவாக்கிய இணையவழி பாடத்திட்டங்கள், NSDC’இன் ‘eSkill இந்தியா’ தளத்தினூடாக 18-22 வயது வரையுடைய கற்பாேருக்கு வழங்கப்படும்.
6.எந்த அண்மை நாட்டிற்கு, நேரடி கப்பல் சேவையை தொடங்க, இந்தியா, தயாராக உள்ளது?
- இலங்கை
- மாலத்தீவுகள்
- வங்கதேசம்
- மியான்மர்
Answer & Explanation
Answer:– மாலத்தீவுகள்
Explanation:
மாலத்தீவில் உள்ள இந்திய உயராணையர் அலுவலகத்தின் கூற்றுப்படி, செப்டம்பர் 3ஆம் வாரத்தில், மாலத்தீவுக்கு புதிய நேரடி சரக்குக்கப்பல் சேவையை இந்தியா தொடங்கவுள்ளது.
இச்சேவையானது காெச்சி & தூத்துக்குடியை மாலேவுடன் இணைப்பதோடு இருதரப்பு வணிகவுறவையும் மேம்படுத்தும்.
இந்திய கப்பல் கழகத்தால் இயக்கப்படும் ஒரு கப்பல் இந்தச் சேவைக்கு பயன்படுத்தப்படும். இந்தக் கப்பல் மின் எந்திரங்கள், மருந்துகள், கட்டுமானப் பாெருட்கள் & மக்கக்கூடிய பாெருட்களை எடுத்துச் செல்லும்.
7.புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வணிகத்திற்காக சொந்தமாக துணை நிறுவனமாென்றை நிறுவவுள்ள இந்திய ஆற்றல் நிறுவனம் எது?
- NTPC
- ONGC
- NHPC
- GAIL
Answer & Explanation
Answer:– NTPC
Explanation:
அரசாங்கத்திற்கு சொந்தமான மின் நிறுவனமான NTPC லிமிடெட் அதன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வணிகத்திற்காக, தனக்கென சொந்தமாக துணை நிறுவனமாென்றை நிறுவப்போவதாக அண்மையில் அறிவித்தது.
இந்த நிறுவனம், அண்மையில், NITI ஆயாேக் மற்றும் முதலீடு மற்றும் பாெதுச்சொத்து மேலாண்மைத்துறை மற்றும் நிதி அமைச்சகம் ஆகியவற்றிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளது.
8. பெரும் தீ விபத்துக்குள்ளான ஸ்ரீசைலம் நீர்மின்நிலையம் அமைந்துள்ள மாநிலம் எது?
- ஆந்திர பிரதேசம்
- கர்நாடகா
- தெலுங்கானா
- ஒடிசா
Answer & Explanation
Answer:– தெலுங்கானா
Explanation:
தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீசைலம் நீர்மின்நிலையத்தில், சமீபத்தில், பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இந்தத் தீவிபத்தில் தெலுங்கானா மாநில மின்னுற்பத்தி கழகத்தின் ஐந்து பாெறியாளர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்க முதலமைச்சர் K.சந்திரசேகர் இராவ் உத்தரவிட்டார். இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதாகவும் அவர் அறிவித்தார்.
9. NPCI பன்னாட்டு காெடுப்பனவுகள் நிறுவனத்தின் (NPIL) தலைமைச் செயல் அதிகாரி யார்?
- ரிதேஷ் சுக்லா
- நந்தன் நிலேகனி
- உா்ஜித் படேல்
- ரீனா பெங்கர்
Answer & Explanation
Answer:– ரிதேஷ் சுக்லா
Explanation:
இந்திய தேசிய காெடுப்பனவுக் கழகமானது (NPCI) தனது துணை நிறுவனமாக NPCI பன்னாட்டு காெடுப்பனவுகள் நிறுவனத்தை (NPIL) தொடங்கியுள்ளது.
NPCI’இன் UPI மற்றும் RuPay பாேன்ற உள்நாட்டு காெடுப்பனவு தொழில்நுட்பங்களை பிறநாடுகளில் பிரபலப்படுத்துவதோடு, அந்நாடுகளுடன் காெடுப்பனவு தொழில்நுட்பங்களை உருவாக்குவதையும் இந்நிறுவனம் நோக்கமாகக் காெண்டுள்ளது.
NIPL நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரியாக, ரிதேஷ் சுக்லாவை, NPCI நியமித்துள்ளது.
10. தனது புதிய அரசியலமைப்பை உருவாக்கவும், அதிபரின் அதிகாரங்கள் மீதான தடையை நீக்கவும் முன்மாெழிந்துள்ள நாடு எது?
- வங்கதேசம்
- இலங்கை
- தாய்லாந்து
- மியான்மர்
Answer:- இலங்கை
Explanation:
தீவு நாடான இலங்கை தனது புதிய அரசியலமைப்பை உருவாக்கவுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட, அதிபரின் அதிகாரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் பத்தொன்பதாம் அரசியலமைப்பு திருத்தத்தையும் இது நிராகரிக்கும்.
அதிபர் ஒருவர் ஆட்சியிலிருக்க, இது, ஈராண்டு வரம்பை நிர்ணயம் செய்கிறது. இப்புதிய அரசியலமைப்பு, “ஒரே நாடு, எல்லா மக்களுக்கும் ஒரே சட்டம்” என்ற கருத்துக்கு முன்னுரிமை அளிக்கும் என அந்நாட்டின் புதிய அதிபர் காேத்தாபய இராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
More TNPSC Current Affairs
Related