Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 28th August 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. COVID-19 தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சரால் தொடங்கப்பட்ட ஊடாடும் காணொளி ஆட்டத்தின் பெயரென்ன?
Healthy Fighter
Social Warriors
Corona Warriors
Corona Fighters
Answer & Explanation
Answer:– Corona Fighters
Explanation:
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் Dr. ஹர்ஷ் வர்தன் COVID-19 குறித்த ஊடாடும் விளையாட்டு ஒன்றை தொடங்கி வைத்தார்.
இந்த வகையில் முதல் விளையாட்டான கொரோனா போராளிகள் (www.thecoronafighters.in) மற்றும் COVID-19’க்கு உரிய நடத்தையைப் பின்பற்றுவதை வலியுறுத்தும் இரண்டு புதிய காணொளிகளையும் அவர் வெளியிட்டார்.
இவ்விளையாட்டு, COVID-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்துக்கு உரிய நடத்தைகள் மற்றும் சரியான கருவிகளை மக்களுக்கு கற்பிக்கும் சிறந்த, புதிய படைப்பாற்றலை வழங்குகிறது.
இத்துடன் வெளியிடப்பட்டு இரண்டு காணொளிகள், பொதுமக்களுக்கு பரந்த அளவில் முக்கியமான தகவல்களை, சுவாரசியமான முறையில் வழங்கும் ஊடகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
ESI திட்டத்தின்கீழ் பயன்பெறும் தொழிலாளர்கள், வேலையில்லாமல் இருக்கும்போது, அவர்களுக்கு அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் நிவாரணத்தொகை அளிக்கப்படுகிறது.
இத் திட்டத்தை , 2021 ஜூன்.30 வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதென ESI நிறுவனம் தீர்மானித்துள்ளது.
COVID-19 தொற்றுக் காலத்தில் தமது வேலைகளை இழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை அளிப்பதற்காக, இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள தற்போதைய நிபந்தனைகளை தளர்த்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தளர்த்தப்பட்ட நிபந்தனைகளின்படி, அதிகரிக்கப்பட்ட நிவாரணத்தொகை 24.03.2020’லிருந்து 31.12.2020 வரையிலான காலத்திற்கு வழங்கப்படும்.
அதற்கு பிறகு, அதாவது 01.01.2021 – 30.06.2021 வரையிலான காலத்திற்கு தளர்த்தப்படாத முந்தைய நிபந்தனைகளுடன் இத்திட்டம் தொடரும். 31.12.2020’க்கு பிறகு தளர்த்தப்பட்ட நிபந்தனைகள் குறித்து மீளாயப்படும்.
3. தேசிய ஆட்சேர்ப்பு முகமையின் பொதுத்தேர்வு மூலம், ஆட்சேர்ப்பு செய்யவுள்ள முதல் மாநிலம் எது?
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
மத்திய பிரதேசம்
உத்திர பிரதேசம்
Answer & Explanation
Answer:– மத்திய பிரதேசம்
Explanation:
ரகசிய ஆட்சேர்ப்பு முகமை (NRA) தேர்வின் அடிப்படையில் அரசுப்பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நாட்டின் முதல் மாநிலமாக மத்திய பிரதேசம் திகழவுள்ளது.
இந்த முடிவை முதலமைச்சர் சிவராஜ் சிங் செளகான் அறிவித்துள்ளார். தற்போது IBPS, RRB, SSC ஆகியவற்றால் தனித்தனியே நடத்தப்படும் தேர்வுகளுக்கு பதிலாக எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரே பொதுத் தகுதித் தேர்வை (CET) நடத்துவதற்கு, NRA’ஐ அமைக்க, மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
4. அண்மையில் எந்த நாட்டுடனான கலாச்சார ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது?
சவுதி அரேபியா
இஸ்ரேல்
ஆஸ்திரேலியா
ஜப்பான்
Answer & Explanation
Answer:– இஸ்ரேல்
Explanation:
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை ஒத்துழைத்து வலுப்படுத்தும் மூன்றாண்டு வேலைத்திட்டத்திற்காக, இந்தியா, இஸ்ரேலுடனான கலாச்சார ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒத்துழைப்பு, இரு நாடுகளின் வரலாறு மற்றும் கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2020-23ஆம் ஆண்டு வரையிலான இந்த இந்தியா மற்றும் இஸ்ரேல் ஒத்துழைப்புத்திட்டம், கடந்த 1993 வரை.18 அன்று இவ்விரு நாடுகளுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட கலாச்சார ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
5. ரெலிகேர் மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்தின் புதிய பெயரென்ன?
ஹெல்த் கேர் லிட்
கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் லிட்
ரெலி ஹெல்த் இன்சூரன்ஸ் லிட்
யூனியன் ஹெல்த் இன்சூரன்ஸ் லிட்
Answer & Explanation
Answer:– கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் லிட்
Explanation:
ரெலிகேர் எண்டர்பிரைசஸின் துணை நிறுவனமான, ‘ரெலிகேர் ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி லிட்’இன் பெயர் ‘கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் லிட்’ என மாற்றப்பட்டுள்ளது.
இந்தப் பெயர்மாற்றம், 2020 ஆக.19 முதல் நடைமுறைக்கு வந்தது.
ரெலிகேர் ஹெல்த் இன்சூரன்ஸை ரெலிகேர் எண்டர்பிரைஸ் லிட், யூனியன் பாங்க் ஆப் இந்தியா மற்றும் கார்ப்ரேஷன் வங்கி ஆகியவை கடந்த 2012ஆம் ஆண்டில் நிறுவின. இந்நிறுவனத்தின் தலைமையகம் ஹரியானாவின் குருகிராமில் அமைந்துள்ளது.
6.பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான பன்னாட்டு நினைவு & அஞ்சலி நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
ஆகஸ்ட் 21
ஆகஸ்ட் 22
ஆகஸ்ட் 23
ஆகஸ்ட் 24
Answer & Explanation
Answer:– ஆகஸ்ட் 21
Explanation:
ஐ.நா. பொது அவையானது ஆகஸ்ட்.21ஆம் தேதியை பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான பன்னாட்டு நினைவு மற்றும் அஞ்சலி நாளாக அறிவித்து அனுசரித்து வருகிறது.
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் தப்பிப் பிழைத்தவர்களையும் கெளரவிப்பதற்கும் ஆதரவளிப்பதற்குமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாள், அவர்களின் மனிதவுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பாடுபடுகிறது.
நடப்பாண்டில் (2020), ஐக்கிய நாடுகளின் பொது அவையானது, இந்த நாளின் மூன்றாவது ஆண்டு தினத்தை அனுசரித்தது.
7.பாரத வங்கியின் (SBI) புதிய மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
இரஜ்னிஷ் குமாா்
உா்ஜித் படேல்
அஸ்வானி பாட்டியா
ஷியாம் சீனிவாசன்
Answer & Explanation
Answer:– அஸ்வானி பாட்டியா
Explanation:
இந்தியப் பிரதமர் தலமையிலான அமைச்சரவையின் நியமனக் குழுவால் அஸ்வானி பாட்டியா பாரத வங்கியின் (SBI) மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். P.K. குப்தாவைத் தொடர்ந்து அவர் இந்தப் பதவிக்கு வரவுள்ளார்.
இந்நியமனத்திற்கு முன், அஸ்வனி பாட்டியா, SBI பரஸ்பர நிதியத்தின் துணை மேலாண்மை இயக்குநராகவும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பணியாற்றி வந்தார்.
SBI’இன் தலைமைச் பொது மேலாளராகவும், SBI மூலதன சந்தைகளின் முழுநேர இயக்குநராகவும் இவர் பணிபுரிந்துள்ளார்.
8. கேல் ரத்னா விருது பெற்ற மணிகா பத்ராவுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
ஹாக்கி
டேபிள் டென்னிஸ்
டென்னிஸ்
தடகளம்
Answer & Explanation
Answer:– டேபிள் டென்னிஸ்
Explanation:
ஐந்து விளையாட்டு வீரர்கள் இராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்களாகவும், 27 விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் அர்ஜுனா விருது பெற்றவர்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மதிப்புமிக்க கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா (கிரிக்கெட்), இராணி இராம்பால் (ஹாக்கி), பாரா தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு, வினஷ் போகத் (மல்யுத்தம்), மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்) ஆகியாேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆக.29 – ரகசிய விளையாட்டு நாளன்று அவர்களுக்கு விருது வழங்கப்படும்
9.கருங்கடற்கரையில் பேரளவில் இயற்கை எரிவாயு இருப்பைக் கண்டறிந்துள்ள நாடு எது?
துருக்கி
ஜார்ஜியா
பல்கேரியா
ருமேனியா
Answer & Explanation
Answer:– துருக்கி
Explanation:
கருங்கடற்கரையில் பேரளவில் இயற்கை எரிவாயு இருப்பைக் கண்டறிந்துள்ளதாக துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் அண்மையில் அறிவித்தார்.
சுமார் 302 பில்லியன் கன மீட்டர் பரப்பபளவுகக்கு இயற்கை எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இது, இயற்கை எரிவாயுக்காக அந்நாடு பிறநாட்டை சார்ந்திருப்பதை பேரளவுக்கு குறைக்கும்.
அந்நாட்டின் அறிவிப்பின்படி, துருக்கி குடியரசு நிறுவப்பட்டு நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் எதிர்வரும் 2023ஆம் ஆண்டளவில், அந்த இயற்கை எரிவாயுவைப் பிரித்தெடுக்கவும் பயன்படுத்தவும் அந்நாடு தொடங்கும்.
10.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சொஜிலா சுரங்கப்பாதையானது ஜம்மு-காஷ்மீரை எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்துடன் இணைக்கிறது?
பஞ்சாப்
சண்டிகர்
லடாக்
ஹிமாச்சல பிரதேச
Answer & Explanation
Answer:- லடாக்
Explanation:
ஆசியாவின் மிகநீளமான இருதிசை சுரங்கமாக சொஜிலா சுரங்கப்பதை திட்டத்திற்கு, பிரதமர் மோடி, கடந்த 2018ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டினார்.
ரூ.4,509 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பிராந்தியத்துக்கு இடையே தரைவழி இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமீபத்தில், மேகா பொறியியல் மற்றும் உட்கட்டமைப்பு நிறுவனம், இந்தச் சொஜிலா கணவாய் சுரங்கப்பாதையை நிர்மாணிக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டம் ஆறு ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
very usfull sir