Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 2nd August 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. சமீபத்தில் பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட துடியுருளிப்பாறை மலை எங்கு அமைந்துள்ளது?
தமிழ்நாடு
கேரளா
கர்நாடகா
தெலுங்கானா
Answer & Explanation
Answer:– கேரளா
Explanation:
கேரள மாநிலத்தின் பிரமதோம் சிற்றூரில் அமைந்துள்ள துடியுருளிப்பாறை மலைபல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநில பல்லுயிர் வாரியத்தின் பரிந்துரைகளின்பேரில், சுற்றுச்சூழல் ரீதியாக வளம்மிக்க இம்மலையை, ஒரு பல்லுயிர் பாரம்பரிய தளமாக பல்லுயிர் மேலாண்மைக் குழு முறையாக அறிவித்துள்ளது.
உலக இயற்கைப் பாதுகாப்பு நாளை (ஜூலை-28) முன்னிட்டு இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2. சமீபத்திய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிக்கையின்படி, அதிக புலிகள் எண்ணிக்கையைக் கொண்டுள்ள மாநிலம் எது?
தமிழ்நாடு
கர்நாடகா
மத்திய பிரதேசம்
உத்தரகண்ட்
Answer & Explanation
Answer:– மத்திய பிரதேசம்
Explanation:
சமீபத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள “அனைத்திந்திய புலிகள் மதிப்பீடு – 2018” என்ற அறிக்கையின்படி இந்தியாவில் மொத்தமாக 2967 புலிகள் உள்ளன.
மேலும் இந்திய அளவில் மத்திய பிரதேச மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான (526) புலிகள் உள்ளன. அதைத் தொடர்ந்து கர்நாடகா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் அதிக எண்ணிக்கையிலான புலிகளைக் கொண்டுள்ளன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ள தனிமைப்படுத்தும் மருத்துவப் படுக்கையின் பெயர்?
ஆஷ்ரே
அபிமன்யூ
ஏக்-ரோ
ஆா்யா
Answer & Explanation
Answer:– ஆஷ்ரே
Explanation:
Defence Institute of Advanced Technology
புனேவைச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனமான DIAT ’ஆஷ்ரே-Aashray’ என்ற பெயரில் தனிமைப்படுத்தும் மருத்துவப் படுக்கையை (Bed Isolation System ) உருவாக்கியுள்ளது.
நோயாளியிடமிருந்து மற்றவர்களுக்கு வைரஸ் பரவுவதைத் தடுக்கும் சிறப்புப்பொருட்களால் ஆன தனிப்பட்ட உறைகள் இந்த அமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இது, மூச்சுவிடும் இடத்திற்கு அருகே எதிர்மறை அழுத்த உறிஞ்சி மற்றும் தூசுப்படலத்தை வடிகட்ட மற்றும் கிருமிநீக்கம் செய்வதற்கான கருவி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
4. சமீபத்தில் உள்நாட்டு வான் போக்குவரத்து இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட, இந்தியாவின் முதல் ஆளில்லா வானூர்தி இயக்கப் பயிற்சிப் பள்ளி?
Madras Flying Club
Bombay Flying Club
Kolkata Flying Club
Delhi Flying Club
Answer & Explanation
Answer:– Bombay Flying Club
Explanation:
இந்தியாவின் பழமையான பறக்கும் சங்கங்களுள் ஒன்றான பம்பாய் பறக்கும் சங்கம், உள்நாட்டு வான் போக்குவரத்து இயக்குநரகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஆளில்லா வானூர்தி இயக்கப் பயிற்சிப் பள்ளிக்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
அதாவது ஆளில்லா வானூர்தி அமைப்புகளுக்கு பயிற்சியளிப்பதற்கான அச்சங்கத்தின் விண்ணப்பத்திற்கு உள்நாட்டு வான் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஒப்புதல் அளித்துள்ளது.
5. இந்திய-இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சர்களின் உரையாடல் நடைபெற்ற நகரம் எது?
புது தில்லி
கோவா
ஹைதராபாத்
கொல்கத்தா
Answer & Explanation
Answer:– புது தில்லி
Explanation:
இந்தியா-இந்தோனேசியா இடையிலான பாதுகாப்பு அமைச்சர்களின் சந்திப்பு புது தில்லியில் நடைபெற்றது.
இந்திய தூதுக்குழுவிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். அதேபோல், இந்தோனேசிய தூதுக்குழுவிற்கு அதன் பாதுகாப்புஅமைச்சர் ஜெனரல் பிரபோவோ சுபியான்டோ தலைமை தாங்கினார்.
6. எந்த நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக தியரி பொல்லூர் நியமிக்கப்பட்டுள்ளார்?
மெர்சிடிஸ் பெனஸ்
ஜாகுவாா் லேண்ட் ரோவா்
BMW
ஆஸ்டன் மாா்டின்
Answer & Explanation
Answer:– ஜாகுவாா் லேண்ட் ரோவா்
Explanation:
TATA’இன் பிரிட்டிஷ் சொகுசு வாகன நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவரின் (JLR) புதிய தலைமைச் செயல் அதிகாரியாக தியரி பொல்லூர் நியமிக்கப்படுவார் என TATA சன்ஸ் தலைவர் N. சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.
முன்னதாக ரெனால்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த தியரி பொல்லூர், செப்.10 அன்று பதவியேற்றுக் கொள்வார். இவருக்கு முன் அந்தப் பதவியிலிருந்த பேராசிரியர் சர் ரால்ப் ஸ்பெத், ஜாகுவார் லேண்ட் ரோவரின் நிர்வாகமற்ற துணைத்தலைவராக செயல்படுவார்.
7. உலக தாய்ப்பால் வாரம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
ஜூலை 25-30
ஜூலை 26-31
ஆகஸ்ட் 1-7
ஆகஸ்ட் 2-8
Answer & Explanation
Answer:– ஆகஸ்ட் 1-7
Explanation:
தாய்ப்பாலைக் குழந்தைகளுக்கு அவசியம் தர வேண்டும் என்பதை வலியுறுத்த ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
கருப்பொருள்: ஆரோக்கியமான உலகிற்கு தாய்ப்பாலை ஆதரிப்போம் (Support Breastfeeding for a Healthier Planet))
8. Greenlights என்ற புத்தகத்தை எழுதியவர்?
இப்ராஹிம் ஆல்காஷி
கொலின் ஃபாரெல்
மேத்தீவ் எம்சி கோனாகே
அன்னே ஹாத்வே
Answer & Explanation
Answer:– மேத்தீவ் எம்சி கோனாகே
Explanation:
பிரபல ஹாலிவுட் நடிகர் மேத்தீவ் எம்சி கோனாகே (Matthew McConaughey) தனது வாழ்க்கையில் நடைபெற்ற சுவாரஸ்யமான விசயங்களை தொகுத்து Greenlights என்ற பெயரில் புத்தகம் ஓன்றை எழுதியுள்ளார்.
Thank you, sir!! uggalukku therinchatha yallarukkum share panringalea great SIR