TNPSC Current Affairs Question and Answer in Tamil 3rd August 2020

Current Affairs in Tamil 3rd August 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 3rd August 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 3rd August 2020 e-Raksha Bandhan

1. சிசிடிவி கேமராக்களை உலக அளவில் அதிகம் பயன்படுத்தும் முதல் 20 நகரங்களில் 16- வது இடமும், இந்திய அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ள நகரம் எது ?

  1. சென்னை
  2. டெல்லி
  3. ஹைதராபாத்
  4. மும்பை
Answer & Explanation
Answer:– ஹைதராபாத்

Explanation:

சிசிடிவி கேமராக்களை உலக அளவில் அதிகம் பயன்படுத்தும் முதல் 20 நகரங்களில் 16- வது இடத்திலும், இந்திய அளவில் முதலிடத்திலும் ஐதராபாத் உள்ளது.

ஐதராபாத் முழுவதும் 3 லட்சம் சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்புக்கு பொருத்தப்பட்டுள்ளன.

இந்த தரவரிசை பட்டியலை இங்கிலாந்தின் கம்பாரிடெக் (Comparitech) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மேலும் உலக அளவில் 21ஆவது இடத்திலும், இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் சென்னை உள்ளது.

அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள முதல் 20 நகரங்களில் 18 இடங்கள் சீனாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

2. சமீபத்தில் இ-ரக்ஷாபந்தன் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?

  1. குஜராத்
  2. உத்தரப்பிரதேசம்
  3. தெலுங்கானா
  4. ஆந்திரப்பிரதேசம்
Answer & Explanation
Answer:– ஆந்திரப்பிரதேசம்

Explanation:

இ-ரக்ஷாபந்தன் (e-raksha-bandhan) என்ற புதிய திட்டத்தை ஆந்திரப்பிரதேச அரசு தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் இணையக் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகும்.

மேலும் இணையவெளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

3. ரபேல் பாேர்விமானங்களின் முதல் தொகுதி வந்திறங்கிய அம்பாலா விமானத்தளம் அமைந்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

  1. உத்தரகண்ட்
  2. ஹரியானா
  3. லடாக்
  4. மேற்கு வங்கம்
Answer & Explanation
Answer:– ஹரியானா

Explanation:

பிரான்சில் இருந்து ஐந்து ரபேல் பாேர்விமானங்களைக் காெண்ட முதல் தொகுதி, ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள அம்பாலா விமானத்தளத்தில் தரையிரங்கியுள்ளது.

வான்படை தளபதியான RKS பதெளரியா, பாேர் விமானங்களை வரவேற்றார்.

இந்த விமானங்கள் 17ஆவது படைப்பிரிவான, ‘Golden Arrows’- ல் சேர்க்கப்படஉள்ளன.

4. மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது யாருக்கு வழங்கப்பட்டது?

  1. அன்ன மணி
  2. வி.வி.எஸ்.எஸ். சர்மா
  3. இந்திர சேகர் சென்
  4. அசோக் சாஹ்னி
Answer & Explanation
Answer:– அசோக் சாஹ்னி

Explanation:

மத்திய புவி அறிவியல் அமைச்சகம், புவி அமைப்பு அறிவியலில் சிறந்து விளங்குவதற்கான தேசிய விருதுகளை சமீபத்தில் அறிவித்துள்ளது.

  • அதன்படி அசோக் சாஹ்னிக்கு உயிர்ப் பாறைப்படிவியல் (பயோஸ்டிராடிகிராபி), புவியியல் (Geology) மற்றும் முதுகெலும்பு தொல்லுயிரியல் (Vertebrate Palaeontology) ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்பு செய்ததற்காக 2020 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.
  • பெருங்கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய விருதானது டாக்டர் வி.வி.எஸ்.எஸ். சர்மா அவர்களுக்கும்,
  • கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய விருது எம்.ரவிச்சந்திரன் அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

5. இந்தியா எந்த நாட்டுடன் இணைந்து புதிய நுண்ணுயிர் எதிர்ப்பாற்றல் திட்டங்களை செயல்படுத்த உள்ளது?

  1. அமெரிக்கா
  2. ரஷ்யா
  3. இஸ்ரேல்
  4. ஐக்கியப் பேரரசு
Answer & Explanation
Answer:– ஐக்கியப் பேரரசு (UK)

Explanation:

நுண்ணுயிர் எதிர்ப்பாற்றலை (AMR) கையாள, எட்டு மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ஐந்து புதிய திட்டங்களுக்கு, இந்தியா, ஐக்கியப் பேரரசுடன் கூட்டிணைந்துள்ளது.

அனுமதி கிடைத்த பிறகு, இந்த ஐந்து திட்டங்களும் இந்த ஆண்டு (2020) செப்டம்பர் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன.

இதற்காக, இங்கிலாந்து ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க நிதியத்திலிருந்து நான்கு மில்லியன் பவுண்டுகளை ஐக்கியப் பேரரசு வழகங்கவுள்ளது.

COVID-19 தொற்றுக்கான தடுப்பூசியை தயாரிக்க, இங்கிலாந்து, இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.





6. சமீபத்தில் கயானா (Guyana) நாட்டின் புதிய அதிபராக தேர்வுசெய்யப்பட்டுள்ளவர்?

  1. தியரி பொல்லூர்
  2. இர்ஃபான் அலி
  3. ஜிம்மி லாய்
  4. பரமசிவம் பிள்ளை
Answer & Explanation
Answer:– இர்ஃபான் அலி (Mohamed Irfaan Ali)

Explanation:

கயானா (Guyana) நாட்டின் அதிபராக முகமது இர்ஃபான் அலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

7. ‘பத்து கருத்தியல்கள்’ (Ten Ideologies) என்ற புத்தகத்தை எழுதியவர்?

  1. எஸ்.ஜெய்ப்பால் ரெட்டி
  2. எம்.வெங்கையா நாயுடு
  3. ஷர்மிளா தாக்குர்
  4. நவீன் குமார்
Answer & Explanation
Answer:– எஸ்.ஜெய்ப்பால் ரெட்டி

Explanation:

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்ப்பால் ரெட்டி எழுதிய ‘பத்து கருத்தியல்கள்’ (Ten Ideologies) என்ற புத்தகமானது தெலுங்கில் “பாடி பவஜலலு” (Padi Bhavajaalalu) என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

8. உலக நுரையீரல் புற்றுநோய் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. ஆகஸ்ட்-1
  2. ஆகஸ்ட்-2
  3. ஆகஸ்ட்-2
  4. ஆகஸ்ட்-2
Answer & Explanation
Answer:– ஆகஸ்ட்-1

Explanation:

மேலும் உலக புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 அன்று அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

More TNPSC Current Affairs



Leave a Comment