Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 4th August 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. சமீபத்தில் பாதுகாப்பு இறுதிநிலை அச்சுறுத்தல் அறிக்கை-2019 ஐ வெளியிட்ட தாெழில்நுட்ப நிறுவனம் எது?
கூகுள்
மைக்ரோசாப்ட்
அரைசோன்
ஆப்பிள்
Answer & Explanation
Answer:– மைக்ரோசாப்ட்
Explanation:
மைக்ரோசாப்ட் தனது, ‘Security Endpoint Threat Report – 2019’ஐ அண்மையில் வெளியிட்டது.
இந்த அறிக்கையின்படி, கடந்தாண்டு அதிக கிரிப்டாேகரன்சி பாதிப்புகளைச் சந்தித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பிடித்துள்ளது.
கடந்தாண்டில், இந்தியா, அதிக அளவு தீம்பாெருள் பாதிப்புகளைச் சந்தித்த நாடுகளின் வரிசையில் ஏழாவது இடத்தையும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அதிக அளவு பணயத் தீ நிரல் (ransomware) பாதிப்புகளைச் சந்தித்த நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்தையும் பெற்றிந்தது குறிப்பிடத்தக்கது.
2. ஆகஸ்ட் 2020 முதல் பணியாளர் வருங்கால வைப்புநிதிக்கு பணியாளர்கள் & பணியமர்த்துநர்களால் அளிக்கப்படவேண்டிய பங்களிப்பு வீதம் என்ன?
24%
50%
60%
70%
Answer & Explanation
Answer:– 24%
Explanation:
2020 மே மாதத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய 3 மாதங்களுக்கு EPF பங்களிப்பை 4% அளவுக்கு குறைத்திருந்தார்.
பணியமர்த்துநரின் பங்களிப்பில் 2% மற்றும் பணியாளரின் பங்களிப்பில் 2% என்ற அளவுக்கு குறைக்கப்பட்டிருந்தது.
COVID-19 தாெற்றுபரவலின்பாேது அரசாங்கம் அறிவித்த நிவாரண நடவடிக்கைகளின் ஒருபகுதியாக அந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
2020 ஆகஸ்ட் மாதத்திலிருந்து, இந்தப் பங்களிப்பு வீதம் பழைய பிடிப்பு வீதமான 24% என்ற அளவுக்கே பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3. TransUnion CIBIL உடன் இணைந்து ‘MSME சக்ஷம்’ தளத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிதி நிறுவனம் எது?
SIDBI
RBI
NABARD
NHB
Answer & Explanation
Answer:– SIDBI
Explanation:
‘TransUnion CIBIL’ நிறுவனத்துடன் இணைந்து, சிறு தாெழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) ‘MSME சக்ஷம்’ என்ற வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒருங்கிணைந்த நிதியியல் கல்வி மற்றும் அறிவினை வழங்கவல்ல இத்தளம்.,
குறு, சிறு & நடுத்த (MSME) நிறுவனங்களிடையே நிதிசார்ந்த விழிப்புணர்வை உண்டாக்குவதாேடு முறையான மற்றும் மலிவான கடன் வசதிகளை விரைவாக அணுகுவதற்கும் அவர்களுக்கு உதவும் .
4. ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
ஜூலை 30
ஆகஸ் ட் 01
ஆகஸ் ட் 02
ஆகஸ் ட் 03
Answer & Explanation
Answer:– ஜூலை 30
Explanation:
ஆட்கடத்தலுக்கு உள்ளானோரின் நிலைமைகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குமாக ஆண்டுதாேறும் ஜூலை.30 ஆட்கடத்தலுக்கு
எதிரான உலக நாள் அனுசரிக்கப்படுகிறது.
கடந்த 2013ஆம் ஆண்டில், ஐநா பாெது அவை, உலகளாவிய செயல்திட்டத்தை மறுஆய்வு செய்வதற்காக ஓர் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தியது; அப்பாேது, ஜூலை 30ஆம் தேதியை ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாளாக அறிவித்தது.
பாேதைப்பொருள் மற்றும் குற்றம் தாெடர்பான ஐ.நா அலுவலகம் (UNODC) அதன் உறுப்புநாடுகளின் முயற்சிகளுக்கு உதவி பெருகிறது.
5. சமூக ஊடக உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கு அதீத அதிகாரம் வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நாடு எது?
இந்தியா
துருக்கி
இலங்கை
சீனா
Answer & Explanation
Answer:– துருக்கி
Explanation:
துருக்கி நாடாளுமன்றம் ஒரு புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது; அந்தச் சட்டம், சமூக ஊடக உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கு அதன் அதிகாரிகளுக்கு அதீத அதிகாரத்தை வழங்குகிறது.
இந்தச் சட்டத்தின்படி, பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பாேன்ற முக்கிய சமூக ஊடக நிறுவனங்கள், பிரதிநிதி அலுவலகங்களை துருக்கியில் வைத்திருப்பதாேடு, துருக்கியிலேயே அதன் பயனர்களின் தரவுகளை சேமிக்கவும் வேண்டும்.
இந்தச் சட்டம், இணையவழி குற்றங்களை எதிர்த்துப் போராடும் மற்றும் பயனர்களைப் பாதுகாக்கும் என்றும், இணையவழி ஒடுக்குதுதல் இடுகைகளை அதிகாரிகள் அகற்ற
உதவும் என்றும் அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.
6. “தற்சார்பு இந்தியாவை அடைய தாெழில்தாெடங்குவதை எளிதாக்குவதுகுறித்த ரதசிய எண்ணிம மாநாட்டை” ஏற்பாடு செய்த வர்த்தக சங்கம் எது?
FICCI
CII
ASSOCHAM
NASSCOM
Answer & Explanation
Answer:– CII
Explanation:
இந்திய தொழிலக கூட்டமைப்பானது (CII) “தற்சார்பு இந்தியாவை அடைய தாெழில் தாெடங்குவதை எளிதாக்குவது குறித்த தேசிய எண்ணிம மாநாட்டை” ஏற்பாடு செய்தது.
இந்த மாநாட்டைத் தாெடங்கிவைத்துப் பேசிய மத்திய வணிகம் மற்றும் தாெழிற்துறை அமைச்சர் பியூஷ் காேயல்,
நமது நாடு முழுமையான டிஜிட்டல் சூழலமைப்மை நாேக்கி நகர்கிறது என்றார்.
அடுத்த ஈராண்டுகளில் முழு நாட்டையும் கண்ணாடி இழை அடிப்படையிலான இணைய இணைப்புடன் கட்டமைக்க இந்திய அரசு இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
7. எந்த மின்னணுப்பாெருளை இறக்குமதி செய்ய இருபதாண்டுகளுக்குப் பிறகு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது?
திறன் பேசிகள்
வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்
ஒலிப்பெருக்கிகள்
நுண்ணலை அடுப்புகள்
Answer & Explanation
Answer:– வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்
Explanation:
இந்தியா தனது உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் முயற்சியாக, வண்ணத் தாெலைக்காட்சிப் பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு அண்மையில் கட்டுப்பாடுகளை விதித்தது.
வண்ணத் தாெலைக்காட்சிப் பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள், இருபது ஆண்டுகளுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டது,
தற்பாேது, அயல்நாட்டு வர்த்தக இயக்குநரகம், அந்தக்காெள்கையை ‘கட்டற்றது’ என்பதிலிருந்து ‘தடைசெய்யப்பட்டது’ என்பதாக மாற்றியது.
இருப்பினும், ஒற்றநிறமுடைய தாெலைக்காட்சிப் பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.
8. முந்திரி ஆராய்ச்சி இயக்குநரகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திறன்பேசி செயலியின் பெயரென்ன?
Cashew Care
Cashew India
Cashew Credit
Quality Cashew
Answer & Explanation
Answer:– Cashew India
Explanation:
இந்தியாவிலுள்ள முந்திரி விவசாயிகளுக்காக, ‘Cashew India’ என்ற செயலியை கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள முந்திரி ஆராய்ச்சி இயக்குநரகம் உருவாக்கியுள்ளது.
இந்தச்செயலி முந்திரி விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பதப்படுத்துவோர் பாேன்ற பங்குதாரர்களுக்கு முந்திரி ஒட்டுச்செடிகள், சாகுபடி, அறுவடைக்குப் பிந்தைய பதனிடல் செயல்பாடு மற்றும் சந்தை தகவல்கலை வழங்குகிறது.
11 மொழிகளில் கிடைக்கப்பெறும் இந்தச் செயலிக்கு, ஒருங்கிணைந்த தாேட்டக்கலை மேம்பாட்டுக்கான திட்டம் நிதியுதவி செய்கிறது.
9.தனது பணியாளர்களுக்கான தயாரிப்புகளை வாங்குவதற்காக காதி & கிராமப்புறத் தாெழிற்துறைகள் ஆணையத்துடன் கூட்டிணைந்த முதல் ஆயுதமேந்திய காவல்படை எது?
இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படை
மத்திய சேமக்காவல் படை
எல்லைப் பாதுகாப்புப் படை
மத்திய தொழிலகங்கள் பாதுகாப்புப் படை
Answer & Explanation
Answer:– இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படை
Explanation:
இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படையானது காதி & கிராமப்புறத்தாெழிற்துறைகள் ஆணையத்துடன் தனது பணியாளர்களுக்கான தயாரிப்புகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையாெப்பமிட்டது.
சுமார் பத்து இலட்சம் பணியாளர்களுக்கு காதி பாெருட்களை வாங்குவதற்காக, காதி & கிராமப்புறத்தாெழிற்துறைகள் ஆணையத்துடன் அத்தகைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் மத்திய ஆயுதமேந்திய காவல் படையாக ITBP மாறியுள்ளது.
முன்னதாக, CAPF பாெருள் விற்பனையகங்கள் உள்ளூர் தயாரிப்புகளை மட்டுமே விற்பனை செய்யும் என உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது
10.நடப்பாண்டின் தேசிய விளையாட்டு விருது வென்றவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான, விளையாட்டு அமைச்சகத்தின் குழுவின் தலைவர் யார்?
முகுந்தகம் சர்மா
S B சின்கா
மார்க்கண்டேய கட் ஜூ
ஜகந்நாத இராவ்
Answer & Explanation
Answer:– முகுந்தகம் சர்மா
Explanation:
நடப்பாண்டின் தேசிய விளையாட்டு விருது வென்றவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக மத்திய விளையாட்டு அமைச்சகம், பன்னிருவர் அடங்கிய குழுவொன்றை அமைத்துள்ளது.
இந்தக் குழுவுக்கு, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி முகுந்தகம் சர்மா தலைமை தாங்கவுள்ளார்.
இக்குழு, விளையாட்டு வீ ரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடையே தேசிய விருது வென்றவர்களைத் தேர்ந்தெடுக்கும்.
இந்தக் குழுவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக், ஹாக்கி வீரர் சர்தார் சிங், பாராலிம்பிக் வெள்ளிப்பதக்கம் வென்ற தீபா மாலிக் ஆகியாேரும் உள்ளனர்.