TNPSC Current Affairs Question and Answer in Tamil 5th August 2020

Current Affairs in Tamil 5th August 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 5th August 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 5th August 2020

1. மதிப்புமிக்க குஸ்டாவ் ட்ரூவ் விருதை வென்ற இந்தியாவின் சூரிய மின்னாற்றலில் இயங்கும் படகின் பெயரென்ன?

  1. ஆதித்யா
  2. அருணன்
  3. இரவிகாந்த்
  4. சூாியா
Answer & Explanation
Answer:– ஆதித்யா

Explanation:

Gustave Trouvé Awards

இந்தியாவின் சூரிய மின்னாற்றலில் படகான ‘ஆதித்யா’, மின்சார படகுகள் மற்றும் படகாேட்டலில் சிறந்து விளங்குவற்கான மதிப்புமிக்க குஸ்டாவ் ட்ரூவ் (Gustave Trouvé) விருதை வென்றுள்ளது.

கட்டண பயணிகள் சேவைக்காக வடிமைக்கப்பட்ட படகுகள் பிரிவில் சிறந்த மின்சார படகு என இது அறிவிக்கப்பட்டது.

கடந்த 2017ஆம் ஆண்டில் கேரளாவில், ‘ஆதித்யா’ தனது செயல்பாடுகளைத் தொடங்கியபாேது நாட்டின் முதல் சூரிய மின்னாற்றலில் இயங்கும் படகாக ஆனது.

‘NavAlt’ படகுகள் கட்டிய இந்தப் படகு, கேரளமாநில நீர்வழிப்பாேக்குவரத்து துறைக்கு சாெந்தமானதாகும்.

2.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘மகாத்மா காந்தி பாலம்’ அமைந்துள்ள மாநிலம் எது?

  1. மேற்கு வங்கம்
  2. பீகாா்
  3. குஜராத்
  4. உத்தரகண் ட்
Answer & Explanation
Answer:– பீகாா்

Explanation:

பீகார் மாநிலத்தில் கங்கையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மகாத்மா காந்தி சேது பாலத்தை, மத்திய சாலைப்பாேக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை அமைச்சர் நிதின் கட்கரி, காணாெளிக்காட்சிமூலம் தொடங்கி வைத்தார்.

பாட்னா – ஹாஜிப்பூர் இடையே செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்.19’இல் அமைக்கப்பட்டுள்ள இந்த 4 வழிப்பாலம், 5.5 கிலாே மீட்டருக்கும் அதிக தூரம் உடையதாகும்.

இப்பாலம் `1,742 காேடி செலவில் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் நீரோட்ட திசையில் செல்லும் பாதை, 2021ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட உள்ளது.

பழைய பாலத்தின் கற்காரை அமைப்பு, புதிய எஃகு தளத்தால் மாற்றப்படவுள்ளது.

3.எந்த மத்திய அமைச்சகம் அதன் தகவல் தொழில்நுட்பம் (IT) சார்ந்த உதவித்தொகை திட்டங்களுக்காக ‘SKOCH’ தங்க விருதைப் பெற்றுள்ளது?

  1. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
  2. பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
  3. பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
  4. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
Answer & Explanation
Answer:– பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

Explanation:

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த உதவித்தொகை திட்டங்கள்மூலம் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக ‘ஸ்காேச்’ தங்க விருதை மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் பெற்றுள்ளது.

66ஆவது ‘ஸ்காேச்’ 2020 பாேட்டிக்கு, “டிஜிட்டல் ஆளுகையின் மூலம் COVID-19 நாேய்த்தொற்றுக்கு இந்தியா எதிர்வினையாற்றுகிறது” என்று பெயரிடப்பட்டிருந்தது.

“டிஜிட்டல் இந்தியா, மின்னாளுகை 2020” கபாட்டியில் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம்
‘ஸ்காேச்’ விருதை வென்றது.

‘டிஜிட்டல் இந்தியா’ என்னும் மிகப்பெரிய இலட்சியத்தை அடைவதற்கும், மின்னாளுகையின் மேம்பட்ட இலக்கை எட்டுவற்கும், அனைத்து ஐந்து உதவித்திட்டங்களையும் நேரடி பலன்பரிமாற்றத் தளத்துடன், நேரடி பலன்பரிமாற்ற இயக்கத்தின் உதவியுடன் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் இணைத்துள்ளது.

4.பதினைந்தாம் நிதிக்குழுவால் அமைக்கப்பட்ட வேளாண் ஏற்றுமதி தொடர்பான உயர்மட்டக்குழுவின் தலைவர் யார்?

  1. நரேந்திர சிங் தாேமர்
  2. இராதா சிங்
  3. சஞ்சீவ் பூாி
  4. பிாீத்தி சுதன்
Answer & Explanation
Answer:– சஞ்சீவ் பூாி

Explanation:

ITC தலைவர் சஞ்சீவ் பூரி தலைமையில் வேளாண் ஏற்றுமதி தொடர்பான எட்டு உறுப்பினர்களைக் காெண்ட உயர்மட்டக்குழுவை பதினைந்தாம் நிதிக்குழு அமைத்திருந்தது.

வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கும், அதிக இறக்குமதி மாற்றீட்டை செயல்படுத்த பயிர்கள் வளர்பை ஊக்குவிப்பதற்கும் மாநிலங்களுக்கு அளவிடக்கூடிய செயல்திறன் ஊக்கத்தொகைகளை பரிந்துரைக்கவும் இது அமைக்கப்பட்டது.

இக்குழு தனது அறிக்கையில், ‘பயிர் மதிப்புச்சங்கிலி திரளுக்கான வணிகத்திட்டம்’ என்ற அரசு தலைமையிலான ஓர் ஏற்றுமதித் திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளது. 22 பயிர் மதிப்புச் சங்கிலிகளில் கவனஞ்செலுத்தவும் அது பரிந்துரைத்தது.

5. வங்கதேசத்தில் மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்காக ரிலையன்ஸ் பவர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள உலகளாவிய நிறுவனம் எது?

  1. உலக வங்கி
  2. ஆசிய வளர்ச்சி வங்கி
  3. ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி
  4. பன்னாட்டு செலவாணி நிதியம்
Answer & Explanation
Answer:– ஆசிய வளர்ச்சி வங்கி

Explanation:

ஆசிய வளர்ச்சி வங்கியானது ரிலையன்ஸ் வங்கதேச LNG மற்றும் பவர் லிட் உடன் $200 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், ரிலையன்ஸ் பவர் நிறுவனம், வங்கதேசத்தில் 718 MW ஒருங்கிணை-சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தை உருவாக்கி இயக்கும்.

இதில், $100 மில்லியன் டாலர்கள் ஆசிய வளர்ச்சி வங்கியால் வழங்கப்படும். மீதமுள்ள $100 மில்லியன்கள், ஜப்பானிய பன்னாட்டு ஒத்துழைப்பு அமைப்பின் ஆசியாவின் முன்னணி தனியார் உட்கட்டமைப்பு நிதியிலிருந்து (LEAP) பெறப்படும்.




6.சவூதி அராம்காேவை விஞ்சி, உலக மக்களால் மிகவும் மதிக்கப்படும் நிறுவனமாக மாறிய பன்னாட்டு நிறுவனம் எது?

  1. கூகுள்
  2. ஆப்பிள்
  3. ரிலையன்ஸ்
  4. அமேசான்
Answer & Explanation
Answer:– ஆப்பிள்

Explanation:

பன்னாட்டு பெட்ரோலிய நிறுவனமான சவூதி அராம்காேவை விஞ்சி, உலக மக்களால் மிகவும் மதிக்கப்படும்பாது நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் மாறியுள்ளது.

இத்தொழில்நுட்ப நிறுவனத்தின் சந்தை மூலதனம், $1.82 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

அதேசமயம், சவூதி அராம்கோவின் சந்தை மூலதனம், $1.760 டிரில்லியன் டாலர்களாக உள்ளது.

7.ஆக.1 அன்று எந்த விடுதலைப் போராட்ட வீரின் நூறாவது நினைவுநாளை இந்தியா அனுசரித்தது?

  1. லாலா லஜபதி இராய்
  2. பாலகங்காதர திலகர்
  3. திருப்பூர் குமரன்
  4. சுப்பிரமணி பாரதியார்
Answer & Explanation
Answer:– பாலகங்காதர திலகர்

Explanation:

லாேகமான்ய பால கங்காதர திலகரின் நூறாவது நினைவுநாள் ஆகஸ்ட்.1ஆம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

இந்திய தேசிய காங்கிரசில் ஒரு முன்னணி தீவிரவாத தலைவராக திலகர் இருந்தார். லால்-பால்-பால் மூவரின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த அவர், “சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை, நான் அதைப்பெற்றே தீருவேன்” என முழங்கினார்.

1856 ஜூலை.23 அன்று மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்த திலகர், 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட்.1ஆம் கைதியன்று காலமானார்.

8.அரபு உலகின் முதல் அணுவாற்றல் உலையை வெற்றிகரமாக இயக்கிய நாடு எது?

  1. குவைத்
  2. ஐக்கிய அரபு அமீரகம்
  3. கத்தார்
  4. ஓமான்
Answer & Explanation
Answer:– ஐக்கிய அரபு அமீரகம்

Explanation:

அரபு உலகின் முதல் வணிகரீதியிலான அணுமின்னுற்பத்தி நிலையத்தின் செயல்பாட்டை ஐக்கிய அரபு அமீரகம் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் வளம் மிகுந்த நகரமான அபுதாபியில் இந்த பராகா உலை அமைந்துள்ளது.

இதன்மூலம், அணுவாற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 30 நாடுகளின் குழுவில் ஐக்கிய அரபு அமீரகம் இணைகிறது.

இந்த அணுமின்நிலையம் காெரியா எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷனுடன் இணைந்து கட்டப்பட்டு இயக்கப்படுகிறது.

9.ஆகஸ்ட் 4, 2020 நிலவரப்படி, ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை செயல்படுத்தும் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை என்ன?

  1. 20
  2. 24
  3. 25
  4. 27
Answer & Explanation
Answer:– 24

Explanation:

ஜம்மு மற்றும் காஷ்மீர், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் உத்தரகண்ட் ஆகிய 4 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை, நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம், ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்துடன் ஒருங்கிதணத்துள்ளது.

இவற்றாேடு சேர்த்தால் இப்பாெழுது, ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ என்ற திட்டத்தின்கீழ் ஆகஸ்ட்.4, 2020 நிலவரப்படி 24 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் அத்திட்டத்தில்
இணைந்துள்ளன.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் பயனாளிகளில் சுமார் 80% நாடு முழுவதற்கும் செல்லுபடியாகக் கூடிய குடும்ப அட்டைகள் மூலம் இந்த மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் எங்கிருந்தாலும் உணவுப்வபாருள்களை இப்பாெழுது பெற்றுக் காெள்ள முடியும்.

மீதியுள்ள மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களை தேசிய அளவில் செல்லுபடியாகும் நடைமுறையில் மார்ச் 2021’க்குள் ஒருங்கிணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

10.நடப்பாண்டில் (2020) வரும் உலக தாய்ப்பால் வாரத்துக்கான கருப்பாெருள் என்ன?

  1. Support Breastfeeding for a Healthier Planet
  2. Innocenti Declaration Anniversary
  3. Exclusive Breastfeeding
  4. Support Lactating Mothers
Answer & Explanation
Answer:– Support Breastfeeding for a Healthier Planet

Explanation:

உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் முதல் வாரகாலத்தில் (ஆகஸ்ட் 1-7) உலகம் முழுவதும் பல நாடுகளில் காெண்டாடப்படுகிறது.

1992ஆம் ஆண்டில் உலக நலவாழ்வு அமைப்பு மற்றும் UNICEF ஆகியவற்றுடன் இணைந்து தாய்ப்பாலூட்டலுக்கான உலகக் கூட்டமைப்பு (WABA) இதனை கடைப்பிடித்து வந்தது. இன்னசென்டி தீர்மானத்தில் கையாெப்பமிடப்பட்டதையும் இந்த வாரம் குறிக்கிறது.

“Support breastfeeding for a Healthier Planet” நடப்பாண்டில் (2020) வரும் உலக தாய்ப்பால் வாரத்துக்கான கருப்பாெருளாகும்.

More TNPSC Current Affairs



Leave a Comment