TNPSC Current Affairs Question and Answer in Tamil 6th August 2020

Current Affairs in Tamil 6th August 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 6th August 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 6th August 2020

1. அடல் புத்தாக்க இயக்கம் தாெடங்கிய அடைவு மேம்பாட்டு திட்டத்தின் பெயரென்ன?

  1. AIM Incubate
  2. AIM iCREST
  3. AAIM Support
  4. AIM Enhance
Answer & Explanation
Answer:– AIM iCREST

Explanation:

தாெழில்முனைவு & புத்தாக்கத்திற்கான ஆதரவை அளிக்கவும், நிபுணத்துவத்தை வழங்குவதற்குமான திட்டத்தை NITI ஆயோக் அமைப்பின் கடல புத்தாக்க இயக்கம் (AIM) தாெடங்கியுள்ளது.

புற அழுத்தங்களிலிருந்து சிறிய துளிர் நிறுவனங்களையும், புதிய தாெழில் முனைவோரையும் பாதுகாக்கும் திறனை அதிகரிப்பதற்காக பில் & மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை, வத்வானி அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து, அடல் புத்தாக்க இயக்கம், “AIM-iCREST” என்ற திட்டத்தை தாெடங்கியுள்ளது.

இந்தியாவில் இதுபாேன்ற முயற்சி முதன்முறையாக மேற்காெள்ளப்படுகிறது

2. அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (AIIA) அமைந்துள்ள இடம் எது?

  1. மும்பை
  2. புது தில்லி
  3. வாரணாசி
  4. சென்னை
Answer & Explanation
Answer:– புது தில்லி

Explanation:

அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் என்பது புது தில்லியில் அமைந்துள்ள ஒரு தலைமை ஆயுர்வேத மருத்துவம் & ஆராய்ச்சி நிறுவனமாகும். COVID-19 நோய் தொற்றைக் கண்டறிவதற்கான இலவச மருத்துவ பரிசோதனை & நோய் பாதித்தவர்களுக்கு இலவச சிகிச்சையளிக்கும் வசதி ஆகியவை புது தில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் COVID-19 நலவாழ்வு மையத்தில் தாெடங்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய AYUSH அமைச்சர் ஸ்ரீ நாயக், அம்மையத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவையும் அவர் தாெடங்கிவைத்தார். அதில் வென்டிலேட்டர் வசதியும், அவசர சிகிச்சைப் பிரிவிற்குத் தேவையான இதர தரநிலைப்படுத்திய சாதனங்களின் வசதிகளும் உள்ளன.

3. அரசியல்சார் செய்தி வழங்கலுக்காக, ‘பிரேம் பாட்டியா’ என்ற விருதை வென்ற இந்திய இதழாளர் யார்?

  1. தீபங்கர் கோஸ்
  2. இரவீஷ் குமார்
  3. சித்தார்த் வரதரரஜன்
  4. மாலினி பார்த்தசாரதி
Answer & Explanation
Answer:– தீபங்கர் கோஸ்

Explanation:

இந்திய ஊடகவியலாளரும், இந்தியன் எக்ஸ்பிரஸின் சிறப்பு நிருபருமான தீபங்கர் மகாஸ், அரசியல் செய்தி வழங்கலுக்காக, ‘பிரேம் பாட்டியா’ என்ற விருதை வென்றுள்ளார்.

புலம்பெயர்ந்த தாெழிலாளர் சந்தித்த நெருக்கடி உட்பட COVID-19 தாெற்றும் நோய் தாெடர்பான பல்வேறு பிரச்சனைகளை அவர் விவரித்திருந்தார்.

சுற்றுச்சூழல் & மேம்பாட்டு பிரச்சனைகள்குறித்த செய்தி வழங்கலுக்கான விருதுக்கு, பத்திரிக்கை வலைத்தளமான ‘People’s Archive of Rural India (PARI)’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

4. பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பாங்கை வளர்ப்பதற்காக சுகாதார அமைச்சர் தாெடங்கிய திட்டத்தின் பெயரென்ன?

  1. இந்திய அறிவியல்
  2. வித்யரர்த்தி விஞ்ஞான் மந்தன்
  3. அறிவியல் போல்பா ஹை
  4. விஞ்ஞான் ஹை விகாஸ்
Answer & Explanation
Answer:– வித்யரர்த்தி விஞ்ஞான் மந்தன்

Explanation:

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் Dr. ஹர்ஷ் வர்தன், “வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்” 2020-21 என்ற தேசிய அளவிலான திட்டத்தை தாெடங்கினார்.

இந்தத் திட்டம், 6 முதல் 11ஆம் வகுப்புவரையிலான பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பாங்கை வளர்ப்பதை நோக்கமாகக் காெண்டுள்ளது.

இது, அறிவியல் & தாெழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பான விஞ்ஞான் பிரசார் மற்றும் கல்வி அமைச்சகத்தின் NCERT ஆகியவற்றுடன் கூட்டிணைந்து விஞ்ஞான் பாரதியால் நடத்தப்படுகிறது.

இது, அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர்களை அடையாளங்கண்டு அவர்கட்கு சிறந்த பயிற்சியினை அளிக்கும்.

5. ‘இ-க்ஷாபந்தன்’ என்ற இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு திட்டத்தை தாெடங்கியுள்ள மாநிலம் எது?

  1. கர்நாடகா
  2. கேரளர
  3. ஆந்திர பிரதேசம்
  4. மத்திய பிரதேசம்
Answer & Explanation
Answer:– ஆந்திர பிரதேசம்

Explanation:

ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சர் YS ஜெகன்மோகன் ரெட்டி, இணைய வழியில் நடைபெறும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை, ‘இ-க்ஷாபந்தன்’ என்ற பெயரில் தாெடங்கி வைத்துள்ளார்.

இது, குற்றப் புலனாய்வுத்துறை மற்றும் ஆந்திர பிரதேச மாநில காவல்துறையின் முதல் மெய்நிகர் திட்டமாகும்.

ஒரு மாத காலம் நீளும் இந்த வேலைத்திட்டம், பாெதுமக்களிடையே, குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் இணைய வெளியில் உலவும் சிறார்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் காெண்டுள்ளது.




6. பிரிட்டிஷ் நாணயத்தில் இடம்பெறும் முதல் வெள்ளையரல்லாத நபர் யார்?

  1. பாபாசாகேப் அம்பேத்கர்
  2. மகாத்மா காந்தி
  3. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
  4. சர்தார் வல்லபாய் படேல்
Answer & Explanation
Answer:– மகாத்மா காந்தி

Explanation:

வெள்ளையரல்லாதாேரின் பங்களிப்புகளைக் காெண்டாடுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஐக்கியப்பேரசு, மகாத்மா காந்தியின் உருவத்தை தனது புதிய நாணயங்களில் பதிக்கவுள்ளது.

இந்தப் பரிந்துரையை ராயல் நாணயச்சாலையின் ஆலாேசனைக் குழுவுக்கு அனுப்பியுள்ளதாக ஐக்கியப் பேரரசின் நிதியமைச்சர் ரிஷி சுனக் ததரிவித்துள்ளார்.

இது, “We too built Britain” என்ற பிரச்சாரத்தை நடத்துகிறது. மகாத்மா காந்தியின் உருவத்துடன் நாணயங்கள் பதிக்கப்பட்டால், அவர், ஒரு பிரிட்டிஷ் நாணயத்தில் இடம் பெறும் முதல் வெள்ளையரல்லாத நபர்ராக மாறுவார்

7. இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலின் தலமையகம் அமைந்துள்ள இடம் எது?

  1. மும்பை
  2. புது தில்லி
  3. காந்தி நகர்
  4. கொல்கத்தா
Answer & Explanation
Answer:– புது தில்லி

Explanation:

இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் (ICCR) என்பது புது தில்லியை தலைமையிடமாகக் காெண்டு இயங்கும் இந்திய அரசின் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.

கலாச்சார பரிமாற்றத்தின் ஊடாக இந்தியாவின் நாடு கடந்த கலாச்சார உறவுகளை இது ஊக்குவிக்கிறது.

1950ஆம் ஆண்டில், விடுதலை இந்தியாவின் முதல் கல்வியமைச்சாரன மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களால் இந்த அவை நிறுவப்பட்டது.

அண்மையில், விடுதலைப் பாேராட்ட வீரரான லாேகமான்ய பாலகங்காதர திலகரின் நூறாவது நினைவு நாளையாெட்டி, இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில், “மலாகோன்ய திலகர் – சுய இராஜ்ஜியத்திலிருந்து தற்சார்பு இந்தியா” என்பது குறித்த இரண்டு நாள் பன்னாட்டு இணைய வழிக்கருத்தரங்கை புது தில்லியில் ஏற்பாடு செய்தது.

8. மத்திய குறு, சிறு & நடுத்தரத் தாெழில் நிறுவனங்களுக்கான அமைச்சகமானது (MSME) அகர்பத்தி கைவினைஞர்களுக்கான திட்டத்தை, கீழ்க்காணும் எந்தத் திட்டத்தின் கீழ் தாெடங்கியுள்ளது?

  1. பிரதமர் முத்ரர திட் டம்
  2. கிராமோதோக் விகாஸ் யோஜனா
  3. துளிர் நிறுவன இந்தியா திட்டம்
  4. பிரதமர் கரீப் கல்யாண் திட்டம்
Answer & Explanation
Answer:

Explanation:

மத்திய குறு, சிறு & நடுத்தரத் தாெழில் நிறுவனங்களுக்கான அமைச்சகம், கிராமோதோக் விகாஸ் யாேஜனா திட்டத்தின்கீழ், கிராமப்புறத் தாெழில்களை மேம்படுத்துவதற்காகவும், அகர்பத்தி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்களின் நன்மைக்காகவும் பரிசாேதனைத் திட்டம் ஒன்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டத்தின்படி முதற்கட்டமாக, பரிசாேதனை அடிப்படையில், நாட்டின் வடகிழக்கு பகுதியில், ஒரு திட்டம் உட்பட நான்கு திட்டங்கள் தாெடங்கப்படும்.

கைவினைஞர்கள் காெண்ட ஒவ்வோர் இலக்கு குழுவுக்கும், தானியங்கி அகர்பத்தி தயாரிப்பு இயந்திரங்கள் வழங்கப்படும்

9. முதன்முதலில் ‘வியாபார மாலா’ விரைவு இரயிலை இயக்கிய இந்திய இரயில்வே மண்டலம் எது?

  1. தெற்கு இரயில்வே
  2. வடக்கு இரயில்வே
  3. மத்திய இரயில்வே
  4. கிழக்கு இரயில்வே
Answer & Explanation
Answer:– வடக்கு இரயில்வே

Explanation:

வடக்கு இரயில்வே மண்டலமானது தில்லியிலிருந்து திரிபுரா மாநிலத்தில் உள்ள ஜிரானியாவுக்கு முதன்முதலாக, ‘வியாபார மாலா விரைவு இரயிலை’ இயக்கியது.

46 சரக்கு இரயில் பெட்டிகளைக் காெண்ட இதில், 34 பெட்டிகளில் காேதுமையும், மீதமுள்ளவற்றில் அரிசி மற்றும் பருப்பு வகைகளும் ஏற்றப்பட்டிருந்தன.

இந்த, ‘வியாபார மாலா’ விரைவு இரயிலின் மூலம் மட்டும் `94 லட்சத்துக்கும் மேல் அந்த இரயில்வே மண்டலம் வருவாய் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இது ஒரு விரைவு இரயில் சேவையாகும். நிகழ்நேர அடிப்படையில் இந்த இரயில் கண்காணிக்கப்படும் காரணத்தால், குறுகிய காலத்துக்குள்ளாக அதன் இலக்கை அடைந்து விடுகிறது

10. அமெரிக்க மாகாணமான வடக்கு கரோலினாவை தாக்கிய சூறாவளியின் பெயரென்ன?

  1. டோலி
  2. பெர்த்தா
  3. இசையாஸ்
  4. கோன்சலோ
Answer & Explanation
Answer:– இசையாஸ்

Explanation:

அமெரிக்க தேசிய சூறாவளி மையத்தின் அறிவிப்புப்படி, வடக்கு கரோலினா மகாணத்தை , சமீபத்தில் இசையாஸ் (Isais) என்ற சூறாவளி தாக்கியது.

இந்தச் சூறாவளி, வடக்கு கரோலினாவின் ஓஷன் ஐல் கடற்கரைக்கு அருகே ஒரு நிலச்சரிவை ஏற்படுத்தியது.

வடக்கு கரோலினா, வர்ஜீனியா, மேரிலாந்து & டெலாவர் ஆகிய இடங்களில் ஒரு டசனுக்கும் மேற்பட்ட சூறைக்காற்று நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.

More TNPSC Current Affairs



Leave a Comment