6th October 2020 – Current Affairs in Tamil | One Liner

TNPSC Current Affairs in Tamil: 06-10-2020

  • நீர்மூழ்கி கப்பல்களை தகர்க்கும் டார்பிடோ சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை ஒடிசாவில் இருக்கும் அப்துல்கலாம் தீவில் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது
  • 2020-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஹார்வே ஜே.ஆல்டர், மைக்கேல் ஹங்டன், சார்லஸ் எம்.ரைஸ் ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெபாடிடிஸ் சி வைரஸ் கிருமியை கண்டுபிடித்தற்காக மூன்று பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது
  • 42வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலிக் காட்சி மூலம் நேற்று நடந்தது. இதில் உடனடியாக ரூ.20,000 கோடி ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்
  • பஹ்ரைனுக்கான இந்தியாவின் புதிய தூதர் பியுஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் பஹ்ரைனின் நிதி மற்றும் தேசிய பொருளாதார அமைச்சர் ஷேக் சல்மான் பின் கலீஃபா அல் கலீஃபா 2020 அக்டோபர் 4-ம் தேதி இரு நாடுகளுக்கும் இடையிலான நிதி மற்றும் வணிகத்துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த பல வழிகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்
  • இந்தியாவிற்கான ஆப்கனின் முதல் பெண் தூதரான சகியா வர்தக் மும்பையில் உள்ள ஆப்கன் தூதரகத்தில் பொறப்பேற்றுக் கொண்டார்.
  • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் அக்டோபர் 5, 2020 அன்று ஒரு மெகா மாசு எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடங்கினார். இது “யுத் பிரசுதுஷன் கே விருத்” என்று அழைக்கப்பட்டது.
  • பிரதமர் ஸ்வானிதி திட்டதின் கீழ் வீதி உணவு விற்பனையாளர்களை ஆனலைனில் அழைத்துச் செல்வதற்காக வீட்டுவசதி மற்றும் விவகார அமைச்சகம் ஸ்விக்கயுடன் (Swiggy) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்து போராட உதவுவதற்காக ரெம்டெசிவிர் என்ற மருந்தின் 3,000 குப்பிகளை இந்தியா மியான்மருக்கு வழங்கியுள்ளது
  • பயோடெக்னாலஜி துறையின் தன்னாட்சி நிறுவனமான The Translational Health
    Science And Technology Institute (THSTI) இப்போது கோவிட்-19 தடுப்பூசிகளின் மையப்படுத்தப்பட்ட மதிப்பீட்டிற்கான ஆய்வகங்களின் உலகளாவிய வலையமைப்பில் ஒன்றாக CEPIஆல் அங்கிகரிக்கப்பட்டுள்ளது.
    • CEPI நெட்வொர்க் ஆரம்பத்தில் ஆறு ஆய்வகங்கள், கனடா, பிரிட்டன், இத்தாலி, நெதர்லாந்து, வங்காளம் மற்றும் இந்தியா
    • Coalition for Epidemic Preparedness Innovations – CEPI

இன்றைய முக்கிய தினங்கள்

  • “உலக வாழ்விட நாள்” கருப்பொருள் – “Housing for All – A better Urban Future”.

More Current Affairs – More Info

சமீபத்திய வேலைகள்

Leave a Comment