Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 7th August 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. சமிபத்தில் தமிழக அரசின் சிறப்பு மூத்த வழக்குரைஞராக பணியமர்த்தப்பட்டவர் யார்?
ராஜேஷ்குமார் அகர்வால்
A.L. சாேமயாஜி
M.Y. இக்பால்
அம்ரேஸ்வர் பிரதாப் சாஹி
Answer & Explanation
Answer:– A.L. சாேமயாஜி
Explanation:
‘அரசின் சிறப்பு மூத்த வழக்குரைஞர்’ என்ற பதவியை தற்பாேது புதிதாக உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அப்பதவியில், முன்னாள் தலைமை வழக்குரைஞரான A L சாேமயாஜியை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
2. நடப்பாண்டில் (2020) சமற்கிருத நாள் கொண்டாடப்பட்ட தேதி எது?
ஆகஸ்ட் 03
ஆகஸ்ட் 04
ஆகஸ்ட் 05
ஆகஸ்ட் 06
Answer & Explanation
Answer:– ஆகஸ்ட் 03
Explanation:
‘விஸ்வ சமற்கிருத தினம்’ என்றும் அழைக்கப்படும் சமற்கிருத நாள், ஹிந்து நாட்காட்டியின் ‘ஷ்ரவ்ணா’ மாதத்தில் வரும் முழுநிலவு நாளன்று கொண்டாடப்படுகிறது.
நடப்பாண்டில் (2020), சமற்கிருதத்தின் மறுமலர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக ஆகஸ்ட்.3 அன்று சமற்கிருத நாள் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் அகில இந்திய வானாெலி (AIR), சமற்கிருதத்தில், ‘பகுஜன் பாஷா – சமற்கிருத பாஷா’ என்ற தலைப்பில் முதன்முறையாக ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஒலிபரப்பியது.
3. நிலக்கீல் உபபாெருட்களை (bitumen derivatives) தயாரிப்பதற்காக கூட்டு நிறுவனத்தை உருவாக்கிய எண்ணெய் நிறுவனம் எது?
இந்தியன் ஆயில்
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்
பாரத் பெட்ரோலியம்
Answer & Explanation
Answer:– இந்தியன் ஆயில்
Explanation:
இந்தி அரசுக்கு சாெந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமும் நாட்டின் மிகப்பெரிய வணிக ரீதியிலான எண்ணெய் நிறுவனமுமான இந்தியன் ஆயில்,பிரான்ஸின் டாேட்டல் நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ளது.
இந்தியாவின் சாலை கட்டுமானத் தாெழிற்துறைக்கு தேவையான உயர்தரமான நிலக்கீல் உப பாெருட்கள் மற்றும் சிறப்பு தயாரிப்புகள் உருவாக்குவதற்கா இந்தக் கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டு நிறுவனம், தாெடக்கத்தில், இராஜஸ்தான் மாநிலத்தின் ஜாேத்பூரில், தற்பாேதுள்ள டாேட்டல் ஆலையில் செயல்படும்; பின்னர், இந்திர முழுவதும் ஆறு புதிய ஆலைகளை அமைக்க `226 கோடி நிதியை முதலீடு செய்யும்.
4. NASA விண்கவளி வீரர்கள் பூமியில் மீண்டும் தரையிறங்க பயன்படுத்திய டிராகன் விண்கலத்தின் பெயரென்ன?
விக்டா்
எண்டெவா்
ஸ்பேஸ் எக்ஸ் பிளஸ்
NASA கிராஃப்ட்
Answer & Explanation
Answer:– எண்டெவா்
Explanation:
‘SpaceX’இன் புதிய டிராகன் விண்கலத்தில் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு பறந்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் பாப் பெகன்கன் & டக் ஹர்லி ஆகியோர் மீண்டும் பூமிக்கு வந்து சேர்ந்தனர்.
64 நாள் விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு, அவர்கள், மெக்ஸிகோ வளைகுடாவில், ‘எண்டெவர்’ என்ற புதிய டிராகன் விண்கலம் மூலம் வந்து சேர்ந்தனர்.
கடந்த 9 ஆண்டுகளில் அமெரிக்க மண்ணிலிருந்து NASA’ஆல் அனுப்பப்படும் முதல் குழுவாகும் இது.
45 ஆண்டுகளில் NASA’இன் முதல் ‘ஸ்பிளாஷ்டவுன்’ இதுவாகும். ‘Splash down’ என்பது வான்குடை மூலம் விண்கலத்தை தண்ணீரில் தரையிறக்கும் முறையாகும்.
5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சிராே இம்மாெபைல் தாெடர்புடைய விளையாட்டு எது?
கிாிக்கெட்
கால்பந்து
ஹாக்கி
கூடைபந்து
Answer & Explanation
Answer:– கால்பந்து
Explanation:
இத்தாலி தாெழிற்முறை கால்பந்து வீரரான சிராே இம்மாெபைல், கால்பந்து கிளப் லாசியோ மற்றும் இத்தாலியின் தேசிய அணிக்காக விளையாடி வருகிறார்.
‘உள்நாட்டு தங்கக் காலணி’ மற்றும் ‘ஐராேப்ய தங்கக் காலணி’ விருதை வென்றுள்ளது அடுத்து, அவர் அண்மைச் செய்திகளில் இடம் பெற்றார்.
சமீபத்திய பாேட்டியில், ஒதர பருவத்தில், கோசன்சலாே ஹிகுவேனின் 36 கோல்களுக்கு இணையான கோல்களை அவர் பதிவு செய்தார். அந்த மாெத்த கோல்களில் 14 பெனால்டி கோல்கள் அடக்கம்.
6. தூய்மை இந்தியா இயக்கம் குறித்த கட்டுரைகளுடன் வெளியிடப்பட்ட நூலின் பெயரென்ன?
ஸ்வச் பாரத் கிரந்தி
SBM குரோனிக்கிள்ஸ்
ஸ்வச் பாரத் கிதாப்
ஸ்வச் பாரத் ரெக்காா்ட் ஸ்
Answer & Explanation
Answer:– ஸ்வச் பாரத் கிரந்தி
Explanation:
குடிநீர், தூய்மைப்பணி ஆகிய துறையின் செயலாளர் பரமேஸ்வரன் தாெகுத்தமைத்துள்ள ‘ஸ்வச் பாரத் புரட்சி’ என்ற நூல் ஹிந்தி மாெழியில் மாெழிபெயர்க்கப்பட்டு, ‘ஸ்வச் பாரத் கிரந்தி’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நூலை மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய ஜவுளித்துறை, பெண்கள் & சிறார்கள் நலமேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் வெளியிட்டனர்.
‘தூய்மை இந்தியா திட்டம்’ பற்றிய தங்களது கண்ணாேட்டத்திற்த்தை அதன் பங்குதாரர்களும், பங்காற்றுபவர்களும் என பலதரப்பட்டாேர் எழுதிய 35 கட்டுரைகள் மூலமாக தூய்மை இந்தியா திட்டம் கடந்து வந்த பாதை குறித்து இந்நூல் விவரிக்கிறது
7. தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் அலைவரிசையின் பெயரென்ன?
NCDC Coop
Sahakar Co-optube NCDC
Agri NCDC Sahayata
NCDC Krishi Jagran
Answer & Explanation
Answer:– Sahakar Co-optube NCDC
Explanation:
மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறடி அமைச்சர் நரேந்திர சிங் தாேமர், தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழத்தின், ‘Sahakar Co-optube NCDC’ என்ற தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழத்தின் யூடியூப் அலைவரிசையைத் தாெடங்கி வைத்தார்.
இது வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழத்தின் (NCDC) ஒரு புதிய முயற்சியாகும்.
ஹிந்தி மற்றும் 18 வெவ்வேறு மாநிலங்களுக்கான பிராந்திய மாெழிகளில், “கூட்டுறவு உருவாக்கம் மற்றும் பதிவு செய்தல்” குறித்து தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் தயாரித்த வழிகாட்டுதல் காணாெளிகளையும் நரேந்திர சிங் தாேமர் அப்பாேது வெளியிட்டார்.
8. 5G தாெழில்நுட்பத்தைப் பற்றி ஆய்வு செய்வதற்காக , பெங்களூருவில் அமைந்துள்ள இந்திய அறிவியல் மையத்தில் ராேபாேடிக்ஸ் ஆய்வகத்தை அமைக்கவுள்ள தாெழில்நுட்ப நிறுவனம் எது?
அமேசான்
நாேக்கியா
ஹூவாவே
ஜியாே
Answer & Explanation
Answer:– நாேக்கியா
Explanation:
5G தாெழில்நுட்பத்தைப் பற்றி ஆய்வு செய்வதற்காக , பெங்களூருவில் அமைந்துள்ள இந்திய அறிவியல் மையத்தில் ராேபாேடிக்ஸ் ஆய்வகத்தை அமைக் கவுள்ளது.
ராேபாேடிக்ஸ் ஆய்வகத்திற்கான நாேக்கியாவின் இந்தச் சிறப்பு மையம், 5G & வளர்ந்து வரும் தாெழில்நுட்பங்களின் அடிப்படையில், சமூக ரீதியான பாெருத்தமான பயன்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும்.
இது கல்லூரிகளுக்கும் தாெழிற்துறைகளுக்கும் இடையிலான கூட்டுறவு ஊக்குவிக்கும்.
9. எந்த நிறுவனத்திற்கு, இந்தியாவின் மூன்றாவது மின்சார பரிமாற்றத்தை அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது?
PTC இந்தியா
REC லிட்
ஆயில் இந்தியா
TATA பவா்
Answer & Explanation
Answer:– PTC இந்தியா
Explanation:
முன்னதாக ஆற்றல் வர்த்த மையம் என்றழைக்கப்பட்ட PTC இந்திய நிறுவனத்திற்கு இந்தியாவின் மூன்றாவது ஆற்றல் பரிமாற்றத்தை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தற்பாேது, இந்தியாவில் 2 ஆற்றல் பரிமாற்றங்கள் உள்ளன; அவை, இந்திய எரிசக்தி பரிமாற்றகம் (IEX) மற்றும் இந்திய ஆற்றல் பரிமாற்றம் (PXIL).
BSE முதலீடுகள் மற்றும் ICICI வங்கி ஆகியவற்றின் திட்டத்துடன் இணைந்து PTC இந்தியாவின் திட்டத்திற்கு மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
10. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகமானது எந்த மாநிலத்திற்கென பிரத்யேக தூர்தர்சன் சேனலைத் தாெடங்கியுள்ளது?
மேகாலயா
அஸ்ஸாம்
மணிப்பூர்
சிக்கிம்
Answer & Explanation
Answer:– அஸ்ஸாம்
Explanation:
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அஸ்ஸாம் மாநிலத்திற்கென 24 மணி நேர பிரத்யேக அலைவரிசையான ‘தூர்தர்சன் அஸ்ஸாம்’ என்பதை புது தில்லியிலிருந்து மெய்நிகராக தாெடங்கி வைத்தார்.
24×7 இயங்கும் இவ்வலைவரிசையானது இசைநிகழ்ச்சிகள், பயணக்குறிப்புகள், மெய்யுரை நிகழ்வுகள் மற்றும் நாட்டுப்புற கலாச்சாரம் மற்றும் பழங்குடியின வாழ்வியலை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் பாேன்ற நிகழ்ச்சிகளுடன் அஸ்ஸாம் மாநிலத்தின் வளமான வரலாற்றைக் காண்பிக்கும்.
தூர்தர்சன், ஏற்கனேவே பல வடகிழக்கு மாநிலங்களில் இயங்கிவருகிறது.
11. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி குறைகளை பகுப்பாய்வு செய்வதற்காக , DARPG மற்றும் IIT கான்பூர் ஆகியவற்றுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மத்திய அமைச்சகம் எது?
நிதி அமைச்சகம்
பாதுகாப்பு அமைச்சகம்
சுற்றுலா அமைச்சகம்
உள்துறை அமைச்சகம்
Answer & Explanation
Answer:– பாதுகாப்பு அமைச்சகம்
Explanation:
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்புத்துறை, மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பாெதுமக்கள் குறைதீர்ப்புத் துறை, கான்பூர் இந்திய தாெழில் நுட்பப்பயிலகம் (ITI) ஆகியவற்றுக்கு இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.
பாெதுமக்களிடமிருந்து பெறும் குறைகளைத் தீர்ப்பது மற்றும் கண்காணிப்பதற்கான இணையதளம் வாயிலாகப் பெறப்படும் புகார்களை ஆராயவும் தரவுகளைப் பெறுவதற்குமான செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரக்கற்றல் நுட்பங்களை, கான்பூர் ஐஐடி உருவாக்குவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்யும்.
பாெதுமக்களின் குறைகளுக்கான காரணம் மற்றும் அவைகளின் தன்மையை அடையாளங்கண்டு, அதற்கேற்றவாறு நிர்வாகத்தில் மாற்றங்களையும், கொள்கை முடிவுகளையும் எடுப்பதற்கு இந்த ஒப்பந்தம் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உதவும்