7th October 2020 – Current Affairs in Tamil | One Liner

TNPSC Current Affairs in Tamil: 07-10-2020

  • “குவாட்” என்றழைக்கப்படும் நாற்கர கூட்டமைப்பச் சேர்ந்த இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியவற்றின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்க மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் 2020 அக்டோபர் 5 அன்று நடைபெற்றது.
  • 2020 ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
    • ரோஜர் பென்ரோசு – கருந்துளை உருவாக்கம் குறித்த பொதுவான சார்பியல் கோட்பாட்டின் வலுவான கணிப்பை கண்டுபிடிப்பு
    • ரின்ஹெர்ட்கென்செல், ஆன்ட்ரியா கெஸ் – விண்மீன் திரளின் மையப்பகுதியில் உள்ள அதிய சிறு பொருளை கண்டுபிடிப்பு
  • பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக அந்த வங்கியின் மூத்த நிர்வாக இயக்குநர் தினேஷ்குமார் காராவை மத்திய அரசு நியமித்துள்ளது.
  • குஜராத் மாநில அரசு கிராமப்புறங்களுக்கு “டிஜிட்டல் சேவா சேது திட்டத்தை” அக்டோபர் 6, 2020 அன்று அறிமுகப்படுத்தியது.
  • தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (N.C.E.R.D) மற்றும் இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் ஆகியவை காது கேளாத குழந்தைகளுக்கு கல்விப் பொருள்களை அணுகுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அக்டோபர் 6, 2020 அன்று கையெழுத்திட்டன.
  • ஜம்மு காஷ்மீரில் 11 மத்திய சட்டங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது
    • தொழிற்சாலைகள் சட்டம் – 1948, தொழில் தகராறு சட்டம் – 1947, ஒப்பந்த தொழிலாளர் வரன்முறை சட்டம் – 1970, மோட்டார் வாகன தொழிலாளர்கள் சட்டம் – 1961, முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்டங்களை தடை செய்யும் சட்டம் – 2019 உள்ளிட்ட 11 மத்திய சட்டங்கள் அமலுக்கு வருகின்றன.
  • பிாிட்டனைச் சோ்ந்த எண்ணெய், எரிவாயு ஆய்வு நிறுவனமான “உட்மெக்கன்ஸி” வெளியிட்ட ஆய்வறிக்கையில் உலகின் மிகப்பெரிய சமையல் எாிவாயு சந்தையைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள சீனாவை 2030-ம் ஆண்டிற்கு பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
  • ஆஸ்திரேலியாவில் அழிவின் விளிம்பில் இருந்த “டால்மேனியன் டெவில்” என்ற விலங்கு இனப்பெருக்கம் செய்யப்பட்டு மீண்டும் தேசிய பூங்காவுக்குள் விடப்பட்டுள்ளது
  • மூலதன சந்தையிலிருந்து நிறுவனங்கள்  சென்ற ஆகஸட் மாதத்தில் ரூ. 1.1 லட்சம் கோடியை திரட்டியுள்ளன.
  • நாட்டில் உள்ள 7 முக்கிய நகரங்களில் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் அலுவலக பயன்பாட்டுக்கான இடங்களை குத்தகைக்கு விடும் நடவடிக்கைகள் 50 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.
  • பரஸ்பர நிதி துறை நிறுவனங்கள் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு செப்டம்பர் காலாண்டில் ரூ.27.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது
  • கரோனா குழுவில் வேலையின்றி தவித்துவரும் குத்துச்சண்டை வீரர் சுனில் செளஹான், வில்வித்தை வீரர் நீரஜ் சௌஹான் ஆகியோருக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி ஒதுக்கியுள்ளது
  • இளம் வீரர்களை கண்டறியும் வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் கிரிக்கெட் அகாதெமியை வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. உலக அளவில் ராஜஸ்தான் அணியின் 2-வது அகாதெமி இதுவாகும்

More Current Affairs – More Info

சமீபத்திய வேலைகள்

Leave a Comment