Current Affairs in Tamil 8th & 9th August 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 8th & 9th August 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1.பெண்கள் அதிகாரமளித்தலுக்காக ITC, P&G மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநில அரசு எது?
- தமிழ்நாடு
- ஆந்திர பிரதேசம்
- கர்நாடகா
- கேரளா
Answer & Explanation
Answer:– ஆந்திர பிரதேசம்
Explanation:
ஆந்திர பிரதேச மாநில அரசானது ITC, புராேக்டர் & கேம்பிள் (P&G) மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய முன்னணிபன்னாட்டு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
45-60 வயதுக்குட்பட்ட மாநிலத்தின் கிராமப்புறப் பெண்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சித் திட்டங்களை நடத்துவதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் முற்படுகிறது.
பிற்படுத்தப்பட்ட & பட்டியலின சமூகங்களைச் சார்ந்த பெண்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக YSR சேயுதா என்ற திட்டத்தையும் ஆந்திர பிரதேச மாநில அரசு தாெடங்கவுள்ளது
2. நாட்டின் முதல் பனிச்சறுத்தை காப்பகத்தை அமைக்கவுள்ள மாநில அரசு எது?
- அருணாச்சல பிரதேசம்
- உத்தரகண்ட்
- சிக்கிம்
- ஹிமாச்சல பிரதேசம்
Answer & Explanation
Answer:– உத்தரகண்ட்
Explanation:
நாட்டின் முதல் பனிச்சறுத்தை காப்பகத்தை உத்தரகண்ட் மாநில அரசு அமைக்கும் என்று அம்மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் இராவத் அறிவித்துள்ளார்.
அம்மாநிலத்தின் உத்தரகாசி வனப்பிரிவில் இந்தக் காப்பகம் அமைக்கப்படும். ‘SECURE இமயமலை’ என்ற அதன் ஆறாண்டுகால திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐநா வளர்ச்சித் திட்டத்துடன் கூட்டாக இணைந்து இந்தக் காப்பகம் அமைக்கப்படவுள்ளது.
இமயமலையை வாழ்விடமாகக் காெண்டு வாழ்ந்துவரும் பனிச்சிறுத்த்தை உள்ளிட்ட பிற அருகிவரும் உயிரினங்களை பாதுகாப்பதற்காக, கடந்த 2017’இல், ‘SECURE இமயமலை’ தாெடங்கப்பட்டது.
3. எந்தத் தென்னமெரிக்க நாட்டின் புதிய அதிபராக முகமது இர்பான் அலி பதவியேற்றுள்ளார்?
- கயானா
- வெனிசூலா
- பிரேசில்
- கொலம்பியா
Answer & Explanation
Answer:– கயானா
Explanation:
பொதுத்ததர்தல் நடந்து ஐந்து மாதங்களுக்குப்பிறகு, தென்னமெரிக்க நாடான கயானாவின் புதிய அதிபராக முகமது இர்பான் அலி பதவியேற்றுள்ளார்.
40 வயதான முன்னாள் வீட்டுவசதி அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான இவர், முந்தைய அதிபரான டேவிட் கிரெஞ்சரை அடுத்து கயானாவின் அதிபராக பதவியேற்றுள்ளார்.
4.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற IIM சிர்மெளர் அமைந்துள்ள மாநிலம் எது?
- உத்தர பிரதேசம்
- ஹமாச்சல பிரதேசம்
- பீகார்
- உத்தரகண்ட்
Answer & Explanation
Answer:– ஹமாச்சல பிரதேசம்
Explanation:
மத்திய கல்வி அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, ஹிமாச்சல பிரதேச மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூருடன் இணைந்து, ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிர்மெளரில், இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்துக்கான (IIM) அடிக்கல்லை மெய்நிகராக நாட்டினார்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஒரு வழிகாட்டு நிறுவனமாக, IIM இலக்னாேவால் IIM சிர்மெளர் இயங்கிவருகிறது.
தெளலகானில் அமையவுள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய நிரந்தர வளாகத்தில், 1170 மாணவர்கள் கல்விகற்பார்கள். மத்திய அரசு இதற்காக `531.75 காேடி நிதியை ஒதுக்கியுள்ளது
5.துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களால் மிகப்பெரிய குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற நாடு எது?
- ஆஸ்திரேலியா
- லெபனான்
- பிரான்ஸ்
- ஜெர்மனி
Answer & Explanation
Answer:– லெபனான்
Explanation:
லெபனான் நலவாழ்வு அமைச்சரின் கூற்றுப்படி, அந்நாட்டின் துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 மெட்ரிக் டன் அம்மாேனியம் நைட்ரேட் வெடிபொருள் வெடித்துச் சிதறியதை அடுத்து குறைந்தது 137 பேர் பலியாகினர் மற்றும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டாேர் காயமடைந்தனர்.
இதனை தாெடர்ந்து, அந்நாடு அதன் தலைநகரான பெய்ரூட்டை, ஒரு ‘பேரிடர் நகரம்’ என்று அறிவித்து இரண்டு வார அவசரகால நிலையையும் அறிவித்தது.
6.செயற்கை-நுண்ணறிவின் மூலம் இயங்கும், ‘AXAA’ என்னும் பன்மாெழி குரல் இயலி சேவையை தாெடங்கவுள்ள இந்திய வங்கி எது?
- HDFC வங்கி
- ICICI வங்கி
- YES வங்கி
- AXIS வங்கி
Answer & Explanation
Answer:– AXIS வங்கி
Explanation:
ஆக்ஸிஸ் வங்கி, ‘AXAA’ என்னும் தானியங்கி குரல் உதவியாளரை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘AXAA’ என்பது செயற்கை-நுண்ணறிவின் மூலம் இயங்கும் ஒரு பன்மாெழி குரல் இயலி (voice-bot) சேவை ஆகும்.
ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மாெழிகளில் இதால் உரையாடவியலும். இது ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் வாடிக்கைளாளர்களின் வினவல்களையும் காேரிக்கைகளையும் நிவர்த்தி செய்யும் திறன் காெண்டது.
வாடிக்கையாளரின் கேள்விகள், அவரின் சூழல் மற்றும் அழைப்பின் நாேக்கம் பற்றிய ஆழமான புரிதலின் மூலம் வாடிக்கையாளர் அனுபவத்தை இது மேம்படுத்தும்.
7.கீழ்க்காணும் எந்தத் திட்டத்தின்கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 44 இலட்சம் டன் அளவிலான உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன?
- பிரதமர் அன்னததா யோஜனா–2
- பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா–2
- PM கேர்ஸ் யோஜனா
- PM கிசான் மன் –தன் யோஜனா
Answer & Explanation
Answer:– பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா–2
Explanation:
நுகர்வாேர் விவகாரங்கள் அமைச்சகத்தின் ஓர் அண்மைய அறிக்கையின்படி, பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா-2 திட்டத்தின் கீழ், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 44 இலட்சம் டன் அளவிலான உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ், 81 காேடி பயனாளிகளுக்கு, சுமார் 201 இலட்சம் டன் அளவிலான உணவு தானியங்கள் விநியாேகிக்கப்பட உள்ளன.
இந்தத் திட்டம், 2020 ஜுலை 1 முதல் எதிர்வரும் 2020 நவம்பர் வரை செயல்படுத்தப்படும்.
8. ‘Nearby Share’ என்ற புதிய காேப்புப்பகிர்வு அம்சத்தை அறிமுகப்படுத்திய தாெழில்நுட்ப நிறுவனம் எது?
- மைக்ரோசாப்ட்
- கூகிள்
- சாம்சங்
- ஆப்பிள்
Answer & Explanation
Answer:– கூகிள்
Explanation:
தாெழில்நுட்ப நிறுவனமான கூகிள் தனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக, ‘Nearby Share’ என்ற புதிய காேப்புப்பகிர்வு அம்சத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த அம்சத்தைப் பயன்படுத்தி, பயனர்கள் தங்களது திறன்பேசியில் உள்ள உள்ளடக்கத்தை மற்றவர்களுடன் தடையின்றி பகிர்ந்து காெள்ளலாம்.
இவ்வம்சத்தை பயன்படுத்தும்போது, அனுப்புநரின் திறன்பேசியானது குறையாற்றல் காெண்ட புளூடூத் அலையை வெளியிடுகிறது;
அது, பெறுநரின் திறன்பேசியால் பெற்றுக் காெள்ளப்படுகிறது. காேப்புகளை பரிமாறிக் காெள்ள Wi-fi சேவையையும் இதால் பயன்படுத்தவியலும்.
இணைய இணைப்பு உள்ள / அற்ற முறைகளில் நம்பகமான மற்றும் விரைவான பகிர்வு இணைப்பை இது உருவாக்குகிறது.
9. 2020 ஆக.5 அன்று எந்த யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தது?
- தாத்ரர & நாகர் ஹவேலி
- ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக்
- சண்டிகர்
- கோவா
Answer & Explanation
Answer:– ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக்
Explanation:
2019 ஆக.5 அன்று, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் 370 மற்றும் 35A பிரிவுகளின் சிறப்புநிலை இரத்து செய்யப்பட்டு, அது இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உருவாக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் முதலாம் ஆண்டு காெண்டாட்டம், நடப்பாண்டு (2020) அதே நாளில் அனுசரிக்கப்பட்டது.
கடந்தாண்டு, யூனியன் பிரதேசங்களில் மேற்காெள்ளப்பட்ட பல்வேறு முன்னெடுப்புகளுள் தேசிய மரபணு ஆவணப்பதிவு முறை, நடுவணரசு ஊழியர்களின் அனைத்து சலுகைகளையும் நீட்டித்தல், J&K சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்புகள் ஆணையம் அமைத்தல் ஆகியவை அடங்கும்.
10. பெட்ராேலிய அமைச்சகத்தின்படி, பெட்ராேல் மற்றும் டீசலை விற்பனை செய்வதற்கான உரிமத்தைப் பெறுவதற்கு, குறைந்தபட்ச நிகர மதிப்புத் தாெகை எவ்வளவு வைத்திருக்க வேண்டும்?
- ரூ.100 கோடி
- ரூ.200 கோடி
- ரூ.500 கோடி
- ரூ.1000 கோடி
Answer & Explanation
Answer:– ரூ.500 கோடி
Explanation:
பெட்ராேலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமானது, பெட்ராேல் மற்றும் டீசல் மாெத்த & சில்லறை விற்பனைக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை எளிதாக்கியுள்ளது.
எளிமைப்படுத்தப்பட்ட இந்த வழிகாட்டுதல்கள், பெட்ராேல் மற்றும் டீசலை சந்தைப்படுத்துதலில் தனியார் துறடியின் பங்களிப்பை அதிகரிப்பதை நாேக்கமாகக் காெண்டுள்ளன.
சில்லறை அல்லது மாெத்த விற்பனைக்கு அங்கீகாரம் பெற விரும்பும் ஒரு நிறுவனம், விண்ணப்பிக்கும் போது குறைந்தபட்ச நிகர மதிப்புத் தாெகையாக `250 காேடி வைத்திருக்க வேண்டும் (சில்லறை மற்றும் மாெத்த விற்பனை இரண்டுக்குமான அங்கீகாரத்திற்கு 500 காேடி).
More TNPSC Current Affairs
Related