TNPSC Current Affairs Question and Answer in Tamil 1st April 2020

Current Affairs in Tamil 1st April 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 1st April 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.




TNPSC Current Affairs in Tamil 1st April 2020
1. மக்கள் மீது தானியங்கி முறையில் கிருமிநாசினி தெளிக்கும் இந்தியாவின் முதல் கிருமிநாசினி சுரங்கம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

  1. ஈரோடு
  2. திருப்பூர்
  3. கும்பகோணம்
  4. மதுரை
Answer & Explanation
Answer: திருப்பூர்

Explanation:

சுரங்கம் போன்ற பாதையில் செல்லும் மக்கள் மீது சென்சார் உதவியுடன் தானியங்கி முறையில் கொரோனாவை தடுக்கும் பொருட்டு கிருமிநாசினியை தெளிக்கும் இந்தியாவின் முதல் கிருமிநாசினி சுரங்கம் திருப்பூரின் பிரபலமான தென்னம்பாளையம் சந்தையில் அமைக்கப்பட்டுள்ளது.

‘திருப்பூர் யங் இண்டியன்ஸ்’ அமைப்பினர் மூலம் அமைக்கப்பட்டுள்ள இதனை தன்னார்வலர் வெங்கடேஷ் என்பவர் ரூ.1 லட்சம் மதிப்பில் உருவாக்கியுள்ளார்.

TNPSC Group 1 Model Papers – Download

2. சமீபத்தில் CORONTINE என்ற மொபைல் செயலியை உருவாக்கி வெளியிட்டுள்ள கல்விநிறுவனம்?

  1. IIT சென்னை
  2. IIT மும்பை
  3. IISc பெங்களூர்
  4. BITS பிலானி
Answer & Explanation
Answer: IIT மும்பை

Explanation:

தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோய் தொற்று கொண்டவர்களை கண்காணிக்கும் பொருட்டு IIT மும்பையை சேர்ந்த அறிவியலாளர்கள் CORONTINE என்ற மொபைல் செயலியை உருவாக்கியுள்ளனர்.

3. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க Team-11 என்ற கமிட்டியை துவங்கியுள்ள மாநிலம்?

  1. உத்தரப்பிரதேசம்
  2. மத்தியப்பிரதேசம்
  3. குஜராத்
  4. கேரளா
Answer & Explanation
Answer: உத்தரப்பிரதேசம்

4. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை நெருங்கினால், எச்சரிக்கை செய்ய மத்திய அரசு உருவாகியுள்ள மொபைல் செயலி?

  1. Aarogya Setu
  2. Corona Kavach
  3. Keep Distance
  4. CORONTINE
Answer & Explanation
Answer: Corona Kavach

Explanation:

கொரோனா கவச்” (“Corona Kavach”) என்ற பெயரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை நெருங்கினால், எச்சரிக்கை செய்யும் மொபைல் அப்ளிகேஷனை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த  செயலியை பயன்படுத்தும் நபரின் ஸ்மார்ட்போனில் உள்ள தகவலை பயன்படுத்தி அவர்களின் இருப்பிடத்தைக் கண்காணிக்கவும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவரை நெருங்கும்போது எச்சரிக்கவும் செய்கிறது.




5. சமீபத்தில் காலமான டோனி லூயிஸ் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

  1. ஹாக்கி
  2. கிரிக்கெட்
  3. கால்பந்து
  4. பேட்மிட்டன்
Answer & Explanation
Answer: கிரிக்கெட்

Explanation:

டக்வொர்த் லூயிஸ் மழை விதிமுறையைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான இங்கிலாந்தைச் சேர்ந்த டோனி லூயிஸ் சமீபத்தில் காலமானார்.

1999-ல் பிராங்க் டக்வொர்த் மற்றும் டோனி லூயிஸ் இருவரும் கண்டுபிடித்த மழை விதிமுறையை டிஎல் என்கிற பெயரில் சர்வதேச கிரிக்கெட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது.

அதாவது கிரிக்கெட் ஆட்டங்கள் மழையால் தடைபடும்போது மீதமுள்ள ஓவர்களைக் கொண்டு ஆட்டத்தை முடிக்க டக்வொர்த் லூயிஸ் விதிமுறை பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

6. உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் எந்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது?

  1. 2021
  2. 2022
  3. 2023
  4. 2024
Answer & Explanation
Answer: 2022

Explanation:

2021ஆம் ஆண்டு ஒரேகானில் (Oregon – U.S) நடைபெற இருந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் 2022ஆம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டில் நடைபெற உள்ளதால் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் 2022ஆம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

7. Sridevi: The Eternal Screen Goddess என்ற புத்தகத்தின் ஆசிரியர்?

  1. சத்யார்த் நாயக்
  2. அனிதா தேசாய்
  3. ஜும்பா லஹிரி
  4. விக்ரம் சந்திரா
Answer & Explanation
Answer: சத்யார்த் நாயக்

More TNPSC Current Affairs



Leave a Comment