TNPSC Current Affairs Question and Answer in Tamil 2nd April 2020

Current Affairs in Tamil 2nd April 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 2nd April 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 2nd April 2020

1. தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 – ன் எந்த பிரிவின் கீழ் தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது?

  1. பிரிவு-62
  2. பிரிவு-66
  3. பிரிவு-72
  4. பிரிவு-76
Answer & Explanation
Answer: பிரிவு-76

Explanation:

தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 76ன் படி தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொள்ளை நோய் சட்டம் 1897-ன் படி வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

TNPSC Group 1 Model Papers – Download

2. கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவா் நிலை குறித்து அறிய மத்திய அரசு வெளியிட்டுள்ள மொபைல் செயலி?

  1. Aarogya Setu
  2. Corona Kavach
  3. Keep Distance
  4. CORONTINE
Answer & Explanation
Answer: Aarogya Setu

Explanation:

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவா் நிலை குறித்து அறியவும், அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் அளிக்கவும் ஆரோக்கியசேது என்ற புதிய மொபைல் செயலியை (அப்ளிகேஷன்) மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

3. ஏப்ரல் – 1 எந்த இந்திய மாநில தினமாக கொண்டாடப்படுகிறது?

  1. பீகார்
  2. ஒடிசா
  3. மேற்குவங்காளம்
  4. ஜார்கண்ட்
Answer & Explanation
Answer: ஒடிசா

Explanation:

1936 ஏப்ரல் – 1 ஒடிசா மாநிலம் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது அதனை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் – 1 ஒடிசா தினமாக (Utkal Divas) கொண்டாடப்படுகிறது.




4. சமீபத்தில் ஸூம் என்ற மொபைல் செயலி உதவியுடன் வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம்?

  1. சென்னை உயர் நீதிமன்றம்
  2. மும்பை உயர் நீதிமன்றம்
  3. கொல்கத்தா உயர் நீதிமன்றம்
  4. திரிபுரா உயர் நீதிமன்றம்
Answer & Explanation
Answer: சென்னை உயர் நீதிமன்றம்

Explanation:

சென்னை உயா்நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக , ‘ஸூம்’ எனப்படும் ஆன்ட்ராய்ட் செயலியின் உதவியுடன் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் வழக்குகளை விசாரித்துள்ளனா்.

5. பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டிவிகிதம் எத்தனை சதவீகிதமாக குறைக்கப்பட்டுள்ளது?

  1. 6.2 %
  2. 6.8 %
  3. 7.6 %
  4. 8.4 %
Answer & Explanation
Answer: 7.6 %

Explanation:

கொரோனா தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான, முதல் காலாண்டுக்கான சிறுசேமிப்பு வட்டி விகிதங்களை, மத்திய அரசு குறைத்துள்ளது.

அதன்படி, பெண் குழந்தைகளுக்கான, ‘செல்வமகள்’ சேமிப்பு திட்டத்துக்கான வட்டி, 8.4 சதவீதத்தில் இருந்து, 7.6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது

6. 3வது ஆசிய இளையோர் போட்டிகள் எங்கு நடைப்பெற உள்ளன?

  1. சிங்கப்பூர்
  2. ஜப்பான்
  3. சீனா
  4. இந்தியா
Answer & Explanation
Answer: சீனா

Explanation:

ஆசிய இளையோா் விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் அடுத்த ஆண்டு நவம்பா் 20 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

முதலாவது ஆசிய இளையோா் விளையாட்டுப் போட்டிகள் சிங்கப்பூரில் 2011-ஆம் ஆண்டில் நடைபெற்ற நிலையில், 2-ஆவது சீசன் சீனாவில் 2013-இல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

7. பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாள் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. மார்ச் 30
  2. மார்ச் 31
  3. ஏப்ரல் 01
  4. ஏப்ரல் 02
Answer & Explanation
Answer: ஏப்ரல் 02

Explanation:

1967 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் (International Children’s Book Day – ICBD) பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாளாக அனுசரிக்கப்படுகிறது.

8. Backstage: The Story Behind India’s High Growth Years என்ற புத்தகத்தின் ஆசிரியர்

  1. பிமல் ஜலன்
  2. ஜெகதீஷ் பகவதி
  3. அரவிந்த் சுப்பிரமணியன்
  4. மாண்டெக் சிங் அலுவாலியா
Answer & Explanation
Answer: மாண்டெக் சிங் அலுவாலியா

More TNPSC Current Affairs



Leave a Comment