Current Affairs in Tamil 3rd April 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 3rd April 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. Navaratnalu- Pedalandariki Illu என்ற திட்டதை செயல்படுத்திவரும் இந்திய மாநிலம்?
- ஆந்திரப்பிரதேஷ்
- தெலுங்கானா
- கர்நாடகா
- கேரளா
Answer & Explanation
Answer: ஆந்திரப்ரதேஷ்
Explanation:
ஆந்திராவில் உள்ள 25 லட்சம் ஏழை மக்களுக்கு வீட்டுமனை வழங்க Navaratnalu- Pedalandariki Illu (நவரத்னாலு- பெடலண்டரிக்கி இல்லு ) என்ற திட்டதை ஆந்திர அரசு செயல்படுத்திவருகிறது.
2. சமீபத்தில் குழந்தைகளுக்காக Mo Prativa எனும் படைப்பு திறன் போட்டியை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?
- குஜராத்
- கேரளா
- தமிழ்நாடு
- ஒடிஷா
Answer & Explanation
Answer: ஒடிஷா
Explanation:
கொரோனா பாதிப்பை குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள 21 நாட்கள் ஊரடங்கில் குழந்தைகளின் படைப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒடிஷா மாநில அரசு யுனிசெப் உதவியுடன் Mo Prativa (My talent) எனும் படைப்பு திறன் போட்டியை அறிமுகம் செய்துள்ளது.
3. சமீபத்தில் ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றவர்?
- நவாங் கோம்பு
- கீதா மிட்டல்
- ரஜ்னேஷ் ஆஸ்வால்
- ராஜேந்திர மேனன்
Answer & Explanation
Answer: ரஜ்னேஷ் ஆஸ்வால்
Explanation:
ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்ற நீதிபதியாக ரஜ்னேஷ் ஆஸ்வால் 2-4-2020 அன்று பதவியேற்றுக் கொண்டாா்.
அந்த யூனியன் பிரதேசத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதியேற்று பதவியேற்றுக் கொண்ட முதல் நீதிபதி என்ற சிறப்பை அவா் பெற்றுள்ளாா்.
முந்தைய நீதிபதிகள் அனைவரும் ஜம்மு-காஷ்மீருக்கென தனியே இருந்த மாநில அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதியேற்று பதவியேற்றிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
4. சமீபத்தில் இந்தியா ஆபரேஷன் சஞ்சீவானி எனும் பெயரில் எந்த நாட்டிற்கு அத்தியாவசிய மருந்து பொருட்களை வழங்கியுள்ளது?
- மாலத்தீவு
- மடகாஸ்கர்
- இலங்கை
- தாய்லாந்து
Answer & Explanation
Answer: மாலத்தீவு
Explanation:
ஆபரேஷன் சஞ்சீவானி (Operation Sanjeevani) எனும் பெயரில் இந்திய விமானப்படை, மாலத்தீவுக்கு 6.2 மில்லியன் டன் அத்தியாவசிய மருந்து பொருட்களை வழங்கியுள்ளது.
5. இராணுவ மருத்துவ சேவை பிரிவு (Army Medical Corps) சமீபத்தில் எப்போது தனது 256 வது உருவாக்க தினத்தை கொண்டாடியது?
- 1st ஏப்ரல்
- 2nd ஏப்ரல்
- 3rd ஏப்ரல்
- 4th ஏப்ரல்
Answer & Explanation
Answer: ஏப்ரல் 3
TNPSC Group 1 Model Papers – Download
6. சன்ரைஸ் (SunRISE) எனும் திட்டத்தை தொடங்கியுள்ள விண்வெளி ஆராய்ச்சி நிலையம்?
- இஸ்ரோ
- நாசா
- ஸ்பேஸ்X
- Roscosmos
Answer & Explanation
Answer: நாசா
Explanation:
சூரியனை பற்றி ஆய்வுசெய்வதற்கும் அதன் கதிர்வீச்சு புயல்கள் மற்றும் சூரிய துகள்கள் பற்றிய ஆராய்ச்சிக்கும் அமெரிக்காவின் நாசா அமைப்பானது சன்ரைஸ் (Sun Radio Interferometer Space Experiment – SunRISE) எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
7. உலக ஆட்டிஷம் விழிப்புணர்வு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 1st ஏப்ரல்
- 2nd ஏப்ரல்
- 3rd ஏப்ரல்
- 4th ஏப்ரல்
Answer & Explanation
Answer: ஏப்ரல் 2
Explanation:
இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: The transition of adulthood
8. The Enlightenment of The Greengage Tree என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
- சத்யார்த் நாயக்
- லூக் அர்னால்ட்
- இம்மானுவேல் பகானோ
- சோகூஃபெக் அஷார்
Answer & Explanation
Answer: சோகூஃபெக் அஷார்
More TNPSC Current Affairs
Related