Current Affairs in Tamil 10th – 12th April 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 10th & 12th April 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. தமிழ்நாட்டில் உள்ள கடற்கரை மாவட்டங்களின் எண்ணிக்கை?
- 12
- 13
- 14
- 15
Answer & Explanation
Answer: 14
Explanation:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை பிரித்து புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள கடற்கரை மாவட்டங்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
2. ஆப்ரேஷன் ஷீல்டு என்ற பெயரில் கொரோனா தடுப்பு திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம்?
- டெல்லி
- பாண்டிச்சேரி
- கோவா
- மேற்குவங்காளம்
Answer & Explanation
Answer: டெல்லி
Explanation:
5T திட்டத்தை தொடர்ந்து டெல்லி அரசு 21 கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆப்ரேஷன் ஷீல்டு (Operation Shield) என்ற பெயரில் கோவிட்-19 தடுப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது.
SHIELD – Sealing, Home quarantine, Isolation and tracing, Essential supply, Local sanitation and Door-to-door checks
TNPSC Group 1 Model Papers – Download
3. பிரதம மந்திரி கிரிஷி சிஞ்சாயீ யோஜனா திட்டத்தின் கீழ் நுண் பாசனத்தில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ள மாநிலம்?
- தெலுங்கானா
- ஆந்திரா
- கர்நாடகா
- தமிழ்நாடு
Answer & Explanation
Answer: தமிழ்நாடு
Explanation:
2019-2020 ஆம் ஆண்டுக்கான பிரதம மந்திரி கிரிஷி சிஞ்சாயீ யோஜனா (Pradhan Mantri Krishi Sinchayee Yojana (PMKSY)) திட்டத்தின் கீழ் நுண் பாசனத்தில், அகில இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது.
மேலும் இரண்டாம், மூன்றாம் இடங்களை முறையே கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்கள் பெற்றுள்ளன.
4. சமீபத்தில் ஆந்திர மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- வி.கனகராஜ்
- என். ரமேஷ் குமார்
Answer & Explanation
Answer: வி. கனகராஜ்
Explanation:
ஆந்திரா மாநிலத்தில் சமீபத்தில் உள்ளாட்சி அமைப்பில் சீர்திருத்தம் செய்ய அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி மாநில தலைமை தேர்தல் ஆணையரின் பதவி காலத்தை 5 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாக குறைக்கும் அவசர சட்டம் இயற்றப்பட்டது.
இதையடுத்து அவசர சட்டத்தின் கீழ் தற்போதைய மாநில தலைமை தேர்தல் ஆணையர் என். ரமேஷ் குமார் பதவி விலகியதையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக சென்னை உயர் நீ்திமன்ற முன்னாள் நீதிபதி வி. கனகராஜ் நியமிக்கப்பட்டுள்ளது.
5. நாட்டிலேயே முதலாவது கொரோ வைரஸ் மருத்துவமனை எங்கு துவக்கப்பட்டுள்ளது?
- கேரளா
- தமிழ்நாடு
- ஒடிசா
- குஜராத்
Answer & Explanation
Answer: ஒடிசா
Explanation:
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையான கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் நாட்டிலேயே முதலாவது கொரோ வைரஸ் மருத்துவமனை துவக்கப்பட்டுள்ளது.
6.சமீபத்தில் கபுா்தலா ரயில் பெட்டித் தொழிற்சாலை உருவாக்கியுள்ள குறைந்த விலையிளான சுவாச கருவியின் பெயர்?
- பிராணவாயு
- ஜீவன்
- பைப்ஸ்
- ஷீல்டு
Answer & Explanation
Answer: ஜீவன்
Explanation:
”ஜீவன்” (Jeevan) என்ற பெயரில் , குறைந்த விலையில் சுவாச கருவி (வென்டிலேட்டா்) கபுா்தலா ரயில் பெட்டித் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டுள்ளது.
‘பைப்ஸ்’ என்ற பெயரில் நூறு ரூபாய்க்கு குறைவாக கரோனா பாதுகாப்புக் கவச உடை தயாரிக்கும் முறையை கான்பூர் ஐஐடி கண்டுபிடித்துள்ளது.
7. சமீபத்தில் நடமாடும் ஏடிஎம் சேவையை தொடங்கியுள்ள வங்கி?
- SBI
- Indian Bank
- ICICI
- HDFC Bank
Answer & Explanation
Answer: ICICI
Explanation:
வாடிக்கையாளா்களின் இல்லங்களுக்கு அருகே சென்று சேவையளிக்கும் வகையில் ICICI வங்கி நடமாடும் ATM சேவையை முதற்கட்டமாக சென்னையில் தொடங்கியுள்ளது.
8. 2020 ஆம் ஆண்டுக்கான ஃபிபா (FIFA) தரவரிசையில் இந்தியா வகிக்கும் இடம்?
- 92
- 99
- 104
- 108
Answer & Explanation
Answer: 108
Explanation:
ஃபிபா (FIFA) கால்பந்து அணிகள் தரவரிசை 2020-இல் இந்தியா 108 வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தை பெல்ஜியம் அணி பிடித்துள்ளது.
9. உலக ஹோமியோபதி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 8 ஏப்ரல்
- 9 ஏப்ரல்
- 10 ஏப்ரல்
- 11 ஏப்ரல்
Answer & Explanation
Answer: ஏப்ரல் 10
Explanation:
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலக ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது.
ஹோமியோபதி என்பது மருத்துவர் சாமுவேல் ஹானிமன் என்பவரால் 1796ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாற்று மருத்துவ முறையாகும்.
சாமுவேல் ஹானிமன் அவர்கள் 1755 ஆம் ஆண்டு ஏப்ரல்10 ஆம் தேதி பிறந்தார். அவரது நினைவாக ஏப்ரல் 10 ஆம் தேதி உலக ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது.
10. தேசிய தாய்மை பாதுகாப்பு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 8 ஏப்ரல்
- 9 ஏப்ரல்
- 10 ஏப்ரல்
- 11 ஏப்ரல்
Answer & Explanation
Answer: ஏப்ரல் 11
11. மனிதன் விண்வெளிக்கு சென்றதற்கான சர்வதேச நினைவு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 10 ஏப்ரல்
- 11 ஏப்ரல்
- 12 ஏப்ரல்
- 13 ஏப்ரல்
Answer & Explanation
Answer: ஏப்ரல் 12
Explanation:
1961 ஏப்ரல் 12 அன்று ரஷியாவின் யூரி காகரின் ‘வோஷ்டாக் 1’ (Vostok 1) விண்கலத்தின் மூலம் முதல் முறையாக பூமியின் சுற்றுப்பாதையை நிறைவு செய்தார்
அதை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 12 மனிதன் விண்வெளிக்கு சென்றதற்கான சர்வதேச நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
12. Deadliest Enemy: Our War Against Killer Germs என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
- ராபர்ட் ரெஸ்லர்
- மார்க் ஆல்ஷாகர்
- ஆன் புர்கெஸ்
- ரிச்சர்ட் ஸ்பெக்
Answer & Explanation
Answer: மார்க் ஆல்ஷாகர்
More TNPSC Current Affairs
Related