Current Affairs in Tamil 13th to 19th April 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 13th to 19th April 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (TNPSC) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- கே.அருள்மொழி
- கா.பாலச்சந்திரன்
- கமலா புஸ்பம்
- மூ.வ ஜெகன்
Answer & Explanation
Answer:கா.பாலச்சந்திரன்
Explanation:
TNPSC-யின் 26வது தலைவராக வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளா் கே.பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைவா் பொறுப்புக்கு நியமிக்கப்படுவா் 62 வயது வரை அல்லது ஆறு ஆண்டுகள் இந்தப் பொறுப்பில் இருப்பாா் என்பது குறிப்பிடத்தக்கது.
TNPSC Group 1 Model Papers – Download
2. தமிழகத்தில், மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான வழிமுறைகளை ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர்?
- பொன்.கலையரசன்
- ஏ.ஜோதி முருகன்
- ஜி.பழனிசாமி
- பி.கோகுல்தாஸ்
Answer & Explanation
Answer: பொன்.கலையரசன்
Explanation:
தமிழகத்தில், மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான வழிமுறைகளை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவில் சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித் துறை, நீதித்துறை செயலாளர்கள், திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஏ.ஜோதி முருகன், கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையின் தலைவர் ஜி.பழனிசாமி ஆகியோர் உறுப்பினராகவும், மருத்துவக்கல்வி இயக்குனர் உறுப்பினர் செயலாளராகவும் உள்ளனர்.
3. கிராம பஞ்சாயத்துக்களின் திட்டங்களை விரைந்து முடித்திட மத்திய அரசு தொடங்கியுள்ள வலைத்தளம்?
- e-Gram Swamitva Portal
- e-Gram Swaraj Portal
- Fast Gram Portal
- Fast Gram Yojana
Answer & Explanation
Answer: e-Gram Swaraj Portal
Explanation:
கிராம பஞ்சாயத்துக்களின் திட்டங்களை விரைந்து முடித்திட “ஈ-கிராம் சுவ்ராஜ்” (e-Gram Swaraj Portal) வலைத்தளத்தையும்,
கிராம பஞ்சாயத்துக்களில் நிலங்களை படமிட (Mapping) ஆளில்லா விமானங்களை பயன்படுத்தும் “சௌமித்திவா யோஜனா” (Swamitva Yojana) திட்டத்தையும் சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
4. 2020ம் ஆண்டிற்கான உலக பத்திரிக்கை சுதந்திர குறியீட்டில் இந்தியா வகிக்கும் இடம்?
- 132
- 138
- 142
- 148
Answer & Explanation
Answer: 142
Explanation:
சமீபத்தில் வெளியிடப்பட்ட 2020ம் ஆண்டிற்கான உலக பத்திரிக்கை சுதந்திர குறியீட்டில் (Global Press Freedom Index) இந்தியா 142வது இடத்தை பிடித்துள்ளது.
நார்வே நாடு இக்குறியீட்டில் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு இந்தியா 140வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
5. சமீபத்தில் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின்(CVC) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- அரவிந்த் சுப்பிரமணியன்
- மாண்டெக் சிங் அலுவாலியா
- சஞ்ஜய் கோத்தாரி
- கே. வி. சவுத்ரி
Answer & Explanation
Answer: சஞ்ஜய் கோத்தாரி
Explanation:
மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (Central Vigilance Commission) தலைவராக இருந்த கே. வி. சவுத்ரியின் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய தலைவராக சஞ்ஜய் கோத்தாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
6. சமீபத்தில் “பிரகயாம்” (Pragyaam) என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு?
- கர்நாடகா
- கேரளா
- டெல்லி
- ஜார்கண்ட்
Answer & Explanation
Answer: ஜார்கண்ட்
Explanation:
அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்வோருக்கு ஈ-பாஸ் வழங்க “பிரகயாம்” (Pragyaam) என்ற மொபைல் செயலியை ஜார்கண்ட் மாநில அரசு தொடங்கியுள்ளது.
நாட்டிலியே முதல் முறையாக கோவிட்-19 பரவலை கண்காணிக்க சுகாதார அவசரநிலை செயல்பாட்டு மையத்தை (Health Emergency Operating Centre) பீகார் மாநில அரசு ISRO உடன் இணைந்து தொடங்கியுள்ளது.
7. சமீபத்தில் “e-Karyalay” என்ற செயலியை உருவாக்கியுள்ள அமைப்பு?
- CRPF
- CSIF
- ISRO
- BSNL
Answer & Explanation
Answer: CSIF
Explanation:
அலுவலகங்களில் கோப்புகள் மற்றும் ஆவணங்கள் எந்தவித மனித தொடர்புமின்றி செல்கின்றதா என்பதை ஆராய “e-Karyalay” என்ற செயலியை “மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை” (CISF) உருவாக்கியுள்ளது.
8. சமீபத்தில் “ஜீவன் சக்தி யோஜனா” (Jeevan Sakthi Yojana) என்ற திட்டத்தை துவங்கியுள்ள மாநில அரசு?
- கர்நாடகா
- ஆந்திரா
- மத்தியப் பிரதேஷ்
- உத்திரப் பிரதேஷ்
Answer & Explanation
Answer: மத்தியப் பிரதேஷ்
Explanation:
நகர்ப்புற பெண்கள் தயாரித்து கொடுக்கும் முக கவசங்களை 11 ரூபாய்க்கு அரசே வாங்கி கொள்ளும் “ஜீவன் சக்தி யோஜனா” (Jeevan Sakthi Yojana) திட்டத்தை மத்திய பிரதேச மாநில அரசு தொடங்கியுள்ளது
9. அச்சாந்தா சரத் கமல் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
- டென்னிஸ்
- டேபிள் டென்னிஸ்
- பேட்மிட்டன்
- குத்துச்சண்டை
Answer & Explanation
Answer: டேபிள் டென்னிஸ்
Explanation:
சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசை 2020-இல் சென்னையை சேர்ந்த அச்சாந்தா சரத் கமல் 31 வது இடத்தைப் பெற்றுள்ளார்.
மேலும் இவர் இந்திய வீரர்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
10. How the Onion Got Its Layers என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
- யாஸ்மீன் பிரேம்ஜி
- சஷி தரூர்
- சுதா மூர்த்தி
- அருந்ததி ராய்
Answer & Explanation
Answer: சுதா மூர்த்தி (Sudha Murty)
Explanation:
இவர் இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயணமூர்த்தி அவர்களின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
11. உலக கலை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 13 ஏப்ரல்
- 14 ஏப்ரல்
- 15 ஏப்ரல்
- 16 ஏப்ரல்
Answer & Explanation
Answer: ஏப்ரல் 15
13. உலக ஹீமோபிலியா தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 15 ஏப்ரல்
- 16 ஏப்ரல்
- 17 ஏப்ரல்
- 19 ஏப்ரல்
Answer & Explanation
Answer: ஏப்ரல் 17
Explanation:
World Federation of Haemophilia இந்த ஆண்டு 30வது உலக ஹீமோபிலியா தினத்தை “Get + Involved” என்ற கருப்பொருளுடன் அனுசரிக்கிறது.
13. உலக பாரம்பரிய தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 15 ஏப்ரல்
- 16 ஏப்ரல்
- 17 ஏப்ரல்
- 18 ஏப்ரல்
Answer & Explanation
Answer: ஏப்ரல் 18
Explanation:
கருப்பொருள்: “Shared Culture’, ‘Shared heritage’ and ‘Shared responsibility”
14. உலக கல்லீரல் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 15 ஏப்ரல்
- 16 ஏப்ரல்
- 17 ஏப்ரல்
- 19 ஏப்ரல்
Answer & Explanation
Answer: ஏப்ரல் 19
More TNPSC Current Affairs
Related