TNPSC Current Affairs Question and Answer in Tamil 20th to 30th April 2020

Current Affairs in Tamil 20th to 30th April 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 20th to 30th April 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 20th April to 30th April 2020

1. சமீபத்தில் தமிழகத்தின் எந்த பகுதியில் “பேரிடர் மேலாண்மை- தரவு பகுப்பாய்வு மையம்” தொடங்கப்பட்டுள்ளது?

  1. சென்னை
  2. கோவை
  3. மதுரை
  4. தேனி
Answer & Explanation
Answer:சென்னை

Explanation:

கோவிட்-19 அதிதீவிர தொற்றை சமாளிக்கும் வகையில் தமிழக அரசு, HCL நிறுவனத்துடன் இணைந்து “பேரிடர் மேலாண்மை- தரவு பகுப்பாய்வு மையத்தை” (Disaster Management- Data Analytics Centre) சென்னையில் தொடங்கியுள்ளது.

2. தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து முழுவதுமாக மீண்ட முதல் மாவட்டம்?

  1. தென்காசி
  2. ஈரோடு
  3. புதுக்கோட்டை
  4. தர்மபுரி
Answer & Explanation
Answer: ஈரோடு

3. கோவிட் -19 நோயாளிகளுக்கு சேவை செய்வதற்காக கர்மி-பாட் (KARMI-Bot) என்ற ரோபோவை பயன்படுத்தும் மாநிலம்?

  1. குஜராத்
  2. மஹாராஷ்டிரா
  3. கேரளா
  4. தெலுங்கானா
Answer & Explanation
Answer: கேரளா

Explanation:

எர்ணாகுளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கோவிட் -19 நோயாளிகளுக்கு சேவை செய்வதற்காக ‘கர்மி-பாட்’ (KARMI-Bot) என்ற ரோபோவை கேரளா அறிமுகம் செய்துள்ளது.

மருத்துவ கல்லூரியின் கோவிட் -19 தனிமை வார்டில் உள்ள நோயாளிகளுக்கு உதவுவதற்காக இந்த ரோபோ பயன்படுத்தப்படுகிறது

TNPSC Group 1 Model Papers – Download

4. இந்தியாவின் முதல் கோவிட்-19 இல்லா மாநிலமாக 21-4-2020 அன்று அறிவிக்கப்பட்ட மாநிலம்?

  1. கோவா
  2. மணிப்பூர்
  3. மிசோரம்
  4. அருணாச்சலப்பிரதேஷ்
Answer & Explanation
Answer: கோவா

Explanation:

இந்தியாவின் முதல் கோவிட்-19 இல்லா மாநிலமாக கோவா மாநிலம் 21-4-2020 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மணிப்பூர் மாநிலம் இரண்டாவது கோவிட் -19 இல்லா மாநிலமாகியுள்ளது.




5. உலக வனவிலங்குகள் நிதியத்தின்(WWF) இந்தியாவிற்கான சுற்றுசூழல் கல்வி திட்டத்தின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. பி.வி சிந்து
  2. சச்சின் டெண்டுல்கர்
  3. தீபிகா படுகோனே
  4. விஸ்வநாதன் ஆனந்த்
Answer & Explanation
Answer: விஸ்வநாதன் ஆனந்த்

Explanation:

தமிழகத்தை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், உலக வனவிலங்குகள் நிதியத்தின் (World Wildlife Fund (WWF)) இந்தியாவிற்கான சுற்றுசூழல் கல்வி திட்டத்தின் ( Environment Education Programme) நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. சமீபத்தில் ஐ.நா.,வுக்கான நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழர்?

  1. சுப்பிரமணிய சிவா
  2. த.தமிழினியன்
  3. திருமூர்த்தி
  4. சையத் அக்பருதீன்
Answer & Explanation
Answer: திருமூர்த்தி

Explanation:

தற்போது ஐ.நாவில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்துவரும் சையத் அக்பருதீன் விரைவில் ஓய்வு பெற உள்ளதை அடுத்து திருமூர்த்தி புதிய பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தைசேர்ந்தவர் திருமூர்த்தி . இவர் மத்திய வெளியுறவுத்துறை யில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

7. சமீபத்தில் “ஆப்தாமித்ரா” என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு?

  1. கர்நாடகா
  2. கேரளா
  3. டெல்லி
  4. ஜார்கண்ட்
Answer & Explanation
Answer: கர்நாடகா

Explanation:

கோவிட்-19 அதிதீவிர தொற்றை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் “ஆப்தாமித்ரா” (Apthamitra) மொபைல் செயலியை கர்நாடகா அரசு தொடங்கியுள்ளது.

8. சமீபத்தில் “Covid Pharma” என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு?

  1. கர்நாடகா
  2. ஆந்திரா
  3. பீகார்
  4. ஜார்கண்ட்
Answer & Explanation
Answer: ஆந்திரா

Explanation:

மருந்தகங்களில் இருமல், சளி மற்றும் காய்ச்சலுக்காக மருந்துகள் வாங்கும் நபர்களை கண்காணிக்க “Covid Pharma” மொபைல் செயலியை ஆந்திர மாநில அரசு தொடங்கியுள்ளது

9. சமீபத்தில் கஞ்சா சாகுபடிக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்த முதல் அரபு நாடு?

  1. லெபனான்
  2. ஈரான்
  3. மலேசியா
  4. ஜோர்டான்
Answer & Explanation
Answer: லெபனான்

10. சமீபத்தில் “நூர்” (NOOR) என்ற செயற்கைகோளை விண்ணில் செலுத்திய நாடு?

  1. ஈரான்
  2. ஈராக்
  3. பங்களாதேஷ்
  4. மலேசியா
Answer & Explanation
Answer: ஈரான்

Explanation:

ஈரான் “நூர்” (NOOR) என பெயரிட்ட தனது முதல் ராணுவ செயற்கைகோளை விண்ணில் செலுத்தியுள்ளது.

11. செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோளை அனுப்பும் சீன திட்டத்தின் பெயர்?

  1. Tianwen-1
  2. ExoMars
  3. Kazachok-IV
  4. Yinghuo-1
Answer & Explanation
Answer: Tianwen-1

Explanation:

முதன் முறையாக செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோளை அனுப்பும் சீனாவின் திட்டத்திற்கு “டினாவென்-1” (Tianwen-1) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இவ்வாண்டு இறுதியில் இத்திட்ட்ம் செயல்படுத்தப்பட உள்ளது.

செவ்வாய் கோளை பற்றி ஆராய மங்கள்யான் செயற்கைக்கோளை அனுப்பிய முதல் ஆசிய நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

12. ஹப்பிள் (Hubble) என்ற விண்வெளி தொலைநோக்கியை நிறுவியுள்ள நாடு?

  1. அமெரிக்கா
  2. சீனா
  3. ரஷ்யா
  4. வட கொரியா
Answer & Explanation
Answer: அமெரிக்கா

Explanation:

அமெரிக்காவின் நாசாவால் உருவாக்கப்பட்ட ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி (Hubble Space Telescope) ஏப்ரல் 25-உடன் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

13. அச்சாந்தா சரத் கமல் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

  1. டென்னிஸ்
  2. டேபிள் டென்னிஸ்
  3. பேட்மிட்டன்
  4. குத்துச்சண்டை
Answer & Explanation
Answer: டேபிள் டென்னிஸ்

Explanation:

சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசை 2020-இல் சென்னையை சேர்ந்த அச்சாந்தா சரத் கமல் 31 வது இடத்தைப் பெற்றுள்ளார்.

மேலும் இவர் இந்திய வீரர்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

14. Shuttling to the Top: The Story of P V Sindhu என்ற புத்தகத்தின் ஆசிரியர்?

  1. கிருஷ்ணசுவாமி
  2. வெஸ்லி கிங்
  3. ராமசாமி
  4. அருந்ததி ராய்
Answer & Explanation
Answer: V.கிருஷ்ணசுவாமி

15. தேசிய குடிமை பணிகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 24 ஏப்ரல்
  2. 21 ஏப்ரல்
  3. 23 ஏப்ரல்
  4. 22 ஏப்ரல்
Answer & Explanation
Answer: ஏப்ரல் 21

Explanation:

1947 ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி அன்று டெல்லியில் உள்ள மெட்கால்பே இல்லத்தில் (Metcalfe House),

இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேல் நாட்டின் முதல் இந்திய குடிமைப்பணி அதிகாரிகளின் முதல் பிரிவோடு (first batch of IAS officers) ஆற்றிய உரையை நினைவு கூர்வதற்காக,

ஆண்டுதோறும் ஏப்ரல் 21-ஆம் தேதி குடிமைப் பணிகள் தினம் (Civil Services Day) கொண்டாடப்படுகிறது.

16. உலக மலேரியா தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 25 ஏப்ரல்
  2. 24 ஏப்ரல்
  3. 23 ஏப்ரல்
  4. 22 ஏப்ரல்
Answer & Explanation
Answer: ஏப்ரல் 25

Explanation:

இந்த ஆண்டுக்கான கருப்பொருள் (Theme): Zero Malaria Starts with Me

17. உலக நோய்த்தடுப்பு வாரம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 25 ஏப்ரல் – 30 ஏப்ரல்
  2. 24 ஏப்ரல் – 30 ஏப்ரல்
  3. 23 ஏப்ரல் – 29 ஏப்ரல்
  4. 17 ஏப்ரல்- 23 ஏப்ரல்
Answer & Explanation
Answer: ஏப்ரல் 24 – ஏப்ரல் 30

Explanation:

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசி வாரத்தில் (ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 30 வரை) உலக நோய்த்தடுப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான கருப்பொருள்: Vaccines Work for All

More TNPSC Current Affairs



Leave a Comment