TNPSC Current Affairs Question and Answer in Tamil 4th to 6th April 2020

Current Affairs in Tamil 4th – 6th April 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 4th to 6th April 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 6th April 2020

1.  ‘பிராணா-வாயு’ என்ற பெயரில் மிக மலிவான விலையில் வென்டிலேட்டர்களை உருவாக்கியுள்ள இந்திய கல்விநிறுவனம்?

  1. IIT ரூர்கி
  2. AIMS ரிஷிகேஷ்
  3. IIT சென்னை
  4. VIT வேலூர்
Answer & Explanation
Answer: IIT ரூர்கி & AIMS ரிஷிகேஷ்

Explanation:

IIT ரூர்கி மற்றும் AIMS (ரிஷிகேஷ்) அமைப்புகள் இணைந்து இந்தியாவில் ‘பிராணா-வாயு’ என்ற பெயரில் மிக மலிவான விலையில் (ரூ.25,000) வென்டிலேட்டர்களை உருவாக்கியுள்ளன.

TNPSC Group 1 Model Papers – Download

2. சமீபத்தில், வங்கி மற்றும் ATM செல்லாமல் தபால்காரரிடம் இருந்து பணம் பெறும் முறையை முதல் முறையாக அறிமுகம் செய்துள்ள மாநிலம்?

  1. தமிழ்நாடு
  2. கேரளா
  3. கர்நாடகா
  4. தெலுங்கானா
Answer & Explanation
Answer: கேரளா

Explanation:

பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே பணம் எடுத்துகொள்ளும் வகையில் AEPS (Aadhar Enabled Payment system) என்ற புதிய முறையை கேரள அரசு அஞ்சல் துறையுடன் இணைந்து செயல்படுத்தியுள்ளது.

தற்போது இந்தமுறை இந்தியாவின் பிற மாநிலங்களிலும் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

3. கொரோனா நோய்த்தொற்றை உறுதி செய்ய இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் பரிந்துரை செய்துள்ள பரிசோதனை முறை?

  1. PCR
  2. qPCR
  3. Eco – ECG
  4. RT-PCR
Answer & Explanation
Answer: RT-PCR

Explanation:

Reverse transcription polymerase chain reaction (RT-PCR)

4. கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சமாளிக்க உலகவங்கி இந்தியாவிற்கு எவ்வளவு நிதி வழங்கியுள்ளது?

  1. 1 மில்லியன் டாலர்கள்
  2. 1 பில்லியன் டாலர்கள்
  3. 1.5 மில்லியன் டாலர்கள்
  4. 1.5 பில்லியன்டாலர்கள்
Answer & Explanation
Answer: 1 பில்லியன் டாலர்கள்

Explanation:

கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சமாளிப்பதற்காக 25 நாடுகளுக்கு 1.9 பில்லியன் டாலர்கள் அவசரகால நிதியாக வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.

இதில்  இந்தியாவுக்கு ரூ.7 ஆயிரத்து 600 கோடி (1 பில்லியன் டாலர்கள்), பாகிஸ்தானுக்கு 200 மில்லியன் டாலர்கள், ஆப்கானுக்கு 100 மில்லியன் டாலர்கள், மாலத்தீவுகளுக்கு 7.3 மில்லியன் டாலர்கள், இலங்கைக்கு 128.6 மில்லியன் டாலர்கள் வழங்கியுள்ளது.




5. ஐ.நா. பருவநிலை மாநாடு 2020 எங்கு நடைபெற உள்ளது?

  1. இங்கிலாந்து
  2. அயர்லாந்து
  3. ஸ்காட்லாந்து
  4. பின்லாந்து
Answer & Explanation
Answer: ஸ்காட்லாந்து

Explanation:

ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நவம்பர் 2019-இல் நடைபெறுவதாக இருந்த ‘ஐ.நா. பருவநிலை மாநாடு 2020” அடுத்த ஆண்டு அதாவது 2021 ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

6. Corona Watch என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?

  1. டெல்லி
  2. குஜராத்
  3. கர்நாடகா
  4. பஞ்சாப்
Answer & Explanation
Answer: கர்நாடகா

7. சமீபத்தில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின்(NCLT) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. மகேஷ் மிட்டல்
  2. பிரகாஷ் குமார்
  3. பவானி சிங்
  4. ஹர்ஷ்குமார் பன்வாலா
Answer & Explanation
Answer: BSV பிரகாஷ் குமார்

Explanation:

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின்(NCLT) தலைவராக BSV பிரகாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

NCLT – National Company Law Tribunal

8. நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் எத்தனை சதவீகிதம் வளா்ச்சி அடையும் என ஆசிய வளா்ச்சி வங்கி தெரிவித்துள்ளது?

  1. 4
  2. 4.5
  3. 5
  4. 5.2
Answer & Explanation
Answer: 4 %

Explanation:

நடப்பு நிதியாண்டில் (2020 – 21) இந்தியப் பொருளாதாரம் 4% அளவுக்கே வளா்ச்சி காணும் என ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் ஏற்பட்ட சா்வதேச இழப்பு 2 டிரில்லியன் டாலா் முதல் 4.1 டிரில்லியன் டாலா் வரையில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது, உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3-4.8 சதவீதத்துக்கு சமமானதாகும் என ஆசிய வளா்ச்சி வங்கி 2020-க்கான ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

9. தேசிய கடல்சார் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 2 ஏப்ரல்
  2. 3 ஏப்ரல்
  3. 4 ஏப்ரல்
  4. 5 ஏப்ரல்
Answer & Explanation
Answer: ஏப்ரல் 5

Explanation:

1964ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் 5ஆம் தேதி இந்தியாவில் தேசிய கடல்சார் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கருப்பொருள்: Sustainable shipping for a sustainable planet

More TNPSC Current Affairs



Leave a Comment