TNPSC Current Affairs Question and Answer in Tamil 7th April to 9th 2020

Current Affairs in Tamil 7th – 9th April 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 7th April to 9th 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 7th April 2020

1. கொரோனா நோய்த்தொற்றை ஒழிப்பதற்காக, இந்தியாவுக்கு எவ்வளவு நிதியுதவி அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது?

  1. ரூ.120.25 கோடி
  2. ரூ.200.75 கோடி
  3. ரூ.220.55 கோடி
  4. ரூ.300 கோடி
Answer & Explanation
Answer: ரூ.220.55 கோடி

Explanation:

கொரோனா நோய்த்தொற்றை ஒழிப்பதற்காக சா்வதேச நாடுகளுக்கு 140 கோடி டாலா் (இந்திய மதிப்பில் ரூ.10,647 கோடி) நிதியுதவி வழங்குவதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

அதில், இந்தியாவுக்கு 2.90 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.220.55 கோடி) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 1 Model Papers – Download

2. சமீபத்தில் நடமாடும் கொரோனா பரிசோதனை நிலையத்தை அமைத்துள்ள இந்திய மாநிலம்?

  1. தமிழ்நாடு
  2. கேரளா
  3. கர்நாடகா
  4. டெல்லி
Answer & Explanation
Answer: கேரளா

Explanation:

இந்தியாவில் முதல் முறையாக கேரளாவின் எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்களை அமைத்துள்ளது.

3. கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்த 5T என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?

  1. டெல்லி
  2. பாண்டிச்சேரி
  3. கோவா
  4. மேற்குவங்காளம்
Answer & Explanation
Answer: டெல்லி

Explanation:

கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்த 5T என்ற திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

5T என்பது.,

  • Testing– Only through testing, the infected person can be detected & aggressive testing is crucial to prevent the spread of the virus.
  • Tracing– Persons associated with a positive patient are identified and asked for self-quarantine.
  • Treatment– If someone is infected with COVID-19, they will be provided treatment.
  • Teamwork– The virus can be combated & defeated through teamwork.
  • Tracking & Monitoring– Active tracking & monitoring the developments will help to take action to deal with the spread of the virus

4. கோவிட் -19 கண்காணிப்பு அமைப்பு (Covid-19 Monitoring System) என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?

  1. தமிழ்நாடு
  2. ஆந்திரப்ரதேஷ்
  3. கேரளா
  4. தெலுங்கானா
Answer & Explanation
Answer: தெலுங்கானா

5. கோவிட்-19 தொடர்பான மருந்து பொருட்கள் போக்குவரத்திற்காக உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் மேற்கொண்டுள்ள திட்டம்?

  1. Jeevan UDAN
  2. Lifeline UDAN
  3. Samadhan
  4. SAFE Ride
Answer & Explanation
Answer: Lifeline UDAN

Explanation:

லைஃப் லைன் உதான் (Lifeline UDAN) என்ற பெயரில் கோவிட்-19 தொடர்பான மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் வான்வெளி சரக்குப் போக்குவரத்திற்கான திட்டத்தை மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் துவங்கியுள்ளது.




6. சமீபத்தில் இந்தியா எந்த நாட்டிற்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்தது?

  1. அமெரிக்கா
  2. இஸ்ரேல்
  3. பிரான்ஸ்
  4. இத்தாலி
Answer & Explanation
Answer: அமெரிக்கா & இஸ்ரேல்

Explanation:

கொவைட்-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மலேரியாவுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்கா கேட்டுக்கொண்டதை தொடர்ந்து இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

மேலும் அமெரிக்காவை தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் பிரேசில் நாடுகளுக்கும் இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

7. சமீபத்தில் நாஸ்காமின் (NASSCOM) தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்?

  1. கேசவ் ஆர் முருகேஷ்
  2. அரவிந்த் சக்சேனா
  3. பிரவீன் ராவ்
  4. ரேகா மேனன்
Answer & Explanation
Answer: பிரவீன் ராவ்

Explanation:

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை கூட்டமைப்பான நாஸ்காம் தலைவராக பிரவீன் ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் துணைத் தலைவராக ரேகா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

NASSCOM – National Association of Software and Services Companies

8. கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்த்துப் போராட மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர்?

  1. ப்ரீத்தி சுதன்
  2. பால்ராம் பார்கவா
  3. ஹர்ஷ் வர்தன்
  4. அமிதாப் காந்த்
Answer & Explanation
Answer: அமிதாப் காந்த்

9. சர்வதேச விளையாட்டு அபிவிருத்தி மற்றும் அமைதிக்கான தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 5 ஏப்ரல்
  2. 6 ஏப்ரல்
  3. 7 ஏப்ரல்
  4. 8 ஏப்ரல்
Answer & Explanation
Answer: ஏப்ரல்-6

Explanation:

International Day of Sport for Development and Peace

10. உலக சுகாதார தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 5 ஏப்ரல்
  2. 6 ஏப்ரல்
  3. 7 ஏப்ரல்
  4. 8 ஏப்ரல்
Answer & Explanation
Answer: ஏப்ரல்-7

Explanation:

1948ஆம் ஆண்டு, உலக சுகாதார மையம் தொடங்கப்பட்ட ஏப்ரல் 7ஆம் தேதியை ஆண்டுதோறும் உலக சுகாதார தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கருப்பொருள்: Support Nurses and Midwives

More TNPSC Current Affairs



Leave a Comment